Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
நடிக்கிறதோட நிறுத்துக்கோ! இல்லைனா அவ்வளவு தான் - நடிகைக்கு மிரட்டல் விட்ட முக்கிய அமைச்சர்

சினிமா பிரபலங்களில் சிலர் தங்கள் பிசியான வாழ்க்கைக்கு நடுவிலும் சமூக விசயங்களிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலருக்கும் உதவி புரிய முன் வருகிறார்கள்.
அதே வேளையில் சில சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகை ஹர்ஷிகா பூனாச்சா தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த வருடம் கர்நாடகாவில் பெய்த மழையால் குடகு மாவட்டத்தில் மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளார். இதுகுறித்து அவர் அரசு கட்டி தரும் வீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அந்த மாவட்ட அமைச்சர் கண்டனம் தெரிவித்ததோடு நடிப்பதோடு நிறுத்திக்கொள், அரசு விஷயங்களில் தலையிட வேண்டாம் என மிரட்டல் விட்டுள்ளார்.
இதற்கு ஹர்ஷிகா நான் குடகு மாவட்டத்தை சேர்ந்த நடிகை மட்டுமல்ல. பொறியியல் பட்டதாரி என்பதால் கட்டப்படவுள்ள வீடுகளின் வரைபடங்களை பார்த்த பிறகே கருத்து தெரிவித்திருக்கிறேன். நடிகை என்றால் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற தடை எதுவும் இல்லை என அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-07-2019, 10:11 AM



Users browsing this thread: 2 Guest(s)