Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு படம் எடுப்பவர்கள் நாங்கள்'.. கமல் செம நக்கல்!

சென்னை: ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு படம் எடுப்பவர்கள் தாங்கள் என நடிகர் கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம் செல்வா தான் இப்படத்தை இயக்குகிறார்.

[Image: kamal234-1562206613.jpg]
கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டார்.

பின்னர் பேசிய கமல், ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு படம் எடுப்பவர்கள் தாங்கள் என்றார்.

"ராஜ்கமல் பிலிம்ஸ் துவங்கப்பட்ட போது அக்ஷரா பிறக்கவில்லை. பலருடைய கனவை நிறைவேற்ற துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ். என்னுடைய குருநாதர் அனந்து தான் இந்த நிறுவனத்தில் இன்டர்நேஷனல் எனும் வார்த்தையை சேர்த்தார்.

மீரா படத்தில் விக்ரமை பார்த்து வியந்தேன். அவர் சீயான் விக்ரமாக வளர்வதற்கு ஏற்பட்ட தாமதம் எனக்கு பிடிக்கவில்லை. இது கமல்ஹாசன் எனும் எழுத்தானனின், கலைஞனின் வருத்தம்.
நான் நல்ல படம் பார்த்தால் சந்தோஷப்படுவேன். பாராட்டுவேன். ஒரு ரசிகனாக மிகவும் ஜாலியாக படம் பார்த்தேன். ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். படத்தை விற்பதற்கான யுத்தி அல்ல இந்த விழா. விக்ரமுக்காக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

எனக்கு பதட்டமாகவே இல்லை. நல்ல யூனிட்டிடம் நல்ல கதையை ஒப்படைத்துள்ளேன் எனும் திருப்தி எனக்கு இருந்தது. ஒரு பெரிய அரசாங்கமே துரத்தும் அளவுக்கு நாங்கள் படம் எடுப்போம். எனவே எந்த பிரச்சினை வந்தாலும் இயக்குனர் சமாளிப்பார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.
ராஜ்கமலின் புதிய யுகம் இது. கடாரம் கொண்டான் அந்த துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் ஜூலை 19ம் தேதி வெளியாகும். இன்னும் நிறைய நல்ல படங்களை ராஜ்கமல் தொடர்ந்து தயாரிக்கும். நல்ல படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது." என அவர் கூறினார்.


first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-07-2019, 09:55 AM



Users browsing this thread: 3 Guest(s)