Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் புகைப்படம் பதிவிறக்க முடியாமல் பயனாளர்கள் அவதி!

[Image: unnamed_21286.png]
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனாளர்களாக இருப்பார்கள். நோட்டும் புத்தகமும் கையுமாக இளைஞர்கள் சுற்றிய காலம் மலையேறிவிட்டது. தற்போது எல்லோரும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் சகிதமாகத்தான் சுற்றுகின்றனர். இந்தநிலையில், கடந்த சில மணி நேரங்களாக வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பாவிலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்ப முடிகிறது. ஆனால், புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைக்கப்படும் புகைப்படங்கள் தெரியவில்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் இதே பிரச்னை நிலவுகிறது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இவை அனைத்தும் ஃபேஸ்புக் நிறுவனத்தோடுதான். இவற்றில் ஏதாவது ஒரு சர்வரில் ஏற்படும் பிரச்னை மற்றவற்றைப் பாதிக்கிறது. இந்தப் பிரச்னையைச் சுட்டிக்காட்டி பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 04-07-2019, 09:20 AM



Users browsing this thread: 56 Guest(s)