அழகான மனைவி, அன்பான துணைவி
#8
"மஞ்சு இக்கட ரா" அம்மாவின் குரல் கிச்சனில் இருந்து. இந்த வீட்டுல இது ஒரு இம்சை. எப்போ பார்த்தாலும் சாமி, பூஜை.


"ஒஸ்தானு" என்றேன். 

நான் மஞ்சுளா. எங்கள் சொந்த ஊர் ராஜமுந்திரி பக்கம். அப்பா காலத்தில் இங்கே ஆவடிக்கு வந்தோம். நானும் அண்ணனும் படிச்சதெல்லாம் தமிழ் மீடியம் தான்.

இன்றைக்கு வீட்டில் பூஜை. அதற்கான ஏற்பாடுகள் நடக்குது. அம்மா அண்ணிக்காரியை தான் கைக்கு வெச்சிக்கிறா. நான் விதவையாம். அம்மாவும் விதவை தான். ஆனாலும் வீட்டில் சுமையாக நானும் என் மகளும் இருக்கோம். அதான் இப்படி.

நான் என்ன பண்ண. கல்யாணம் ஆகி 5 மாசம் கூட ஆகலை. கடல்ல பிரெண்ட்ஸ் கூட குளிக்க போனவரு. திரும்ப பிணமாத்தான் வந்தார். கர்ப்பிணியான என்னக்கு வாழ பிடிக்கலை தான். நல்ல மனுஷன். ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அம்மா வீட்டுல இருந்து 3 வீடு தள்ளி ஒரு வீட்டு மாடியில தனி குடித்தனம். அன்பான கணவன். தினம் தினம் தீபாவளி. யார் கண்ணு பட்டுச்சோ.

இப்போ வயசு 25. வாழ்க்கையே சூனியமா இருக்கு. எங்க சாதி சனத்துல பொண்ணுக்கு ரெண்டாம் கல்யாணம் கிடையாது. ஆனால் அண்ணி எனக்கு கொடுக்குற டார்ச்சர் தாங்காம எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சிடணும்னு வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க. அண்ணி என்னை விட 4 வயசு சின்னவ. ஆனால் பெரிய வில்லி. அவ அம்மா வீடு 2 தெரு தள்ளித்தான். அவங்க சப்போர்ட் நிறைய. அதான் ஆடுறா.

இது வரை 3 இடம் பொண்ணு பார்க்க வந்துட்டாங்க. எல்லாம் என் அப்பா வயசு மாப்பிள்ளைங்க. ச்சீ.... செத்திடலாம் போல இருக்கு.

"அம்மா.... அம்மா.... இக்கட ரா" அண்ணன் வந்துட்டான். ஏன் இவ்வளவு பரபரப்பு?

விஷயத்தை சொன்னான். ப்ரோக்கர் பார்த்தாராம். நல்ல இடமாம். இப்போ தான் அவருக்கு டைவர்ஸ் ஆகி இருக்காம். வயசு 32 தானாம். அம்மாவுக்கு வரதட்சணை ஏதும் கேட்பாங்களோன்னு பயம். அண்ணன் சொன்னான் அதெல்லாம் வேண்டாம் நல்ல பொண்ணு தான் வேணுமாம். குழந்தை இருக்கேன்னு சொன்னா - பாப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன், படிக்கவைச்சு கல்யாணமும் பண்ணி வைப்பேன்னு சொல்றாராம். 

நல்ல விஷயம் தான். சந்தோஷப்படுறதான்னு தான் தெரியலை. நான் ஒரு அதிர்ஷ்ட கட்டை. முதல்ல நல்லபடியா முடியட்டும். அப்புறம் சந்தோஷப்படலாம்.

------

அவர் பெண் பார்க்க வந்தப்போ அசந்துட்டேன். இவர் என்ன கார்ல வர்றார்! ஆளும் செம handsome. இவரா நமக்கு கிடைக்கப்போறார்? 

வந்தவர் என் மகளுக்கு தனியா சாக்லேட்களும், விளையாட்டு பொருட்களும் வாங்கி வந்திருந்தார். அண்ணனின் மகள் ஒரு வயது தான் ஆகிறது, அதற்கும் தனியாக விளையாட்டுப்பொருட்கள் வாங்கி வந்திருந்தார்.

என் கிட்ட தனியா பேசணும்னு சொன்னாராம். மொட்டை மாடிக்கு அண்ணன் கூட்டி போனான். எங்களை தனியா விட்டுட்டு கீழே போயிட்டான்.

"ஹாய் மஞ்சுளா"

அவரை ஏறெடுத்து பார்த்து வணக்கம் வெச்சேன். 

"ரொம்ப பார்மலா இருக்காதே. கேஷுவலா இரு." என்றார். குரல் கம்பீரமாவும் இனிமையாவும் இருந்தது. எனக்கு நம்பவே முடியலை.

அவரே சொன்னார்... "ஏதும் பேச மாட்டியா.... என்னை பிடிக்கலையா"

"அப்படி இல்லைங்க... "

"அப்படி இல்லைனா? பிடிச்சிருக்கா?"

"வீட்டுல பெரியவங்க என்ன சொல்றாங்களோ..."

"ஹேய்.... இது நம்ம ரெண்டு பேருக்கும் முதல் கல்யாணம் இல்ல. ஏற்கனவே வாழ்க்கையை தொலைச்சவங்க. பெரியவங்க பார்த்து ஜாதகம் பார்த்து பண்ண முதல் கல்யாணம் ரெண்டு பேருக்கும் தோல்வி இல்லையா... "

"ம்..."

"இந்த தடவை நாம தான் முடிவெடுக்கணும். சொல்லு. பிடிச்சிருக்கா?"

அவரை உற்றுப்பார்த்தேன். அப்பா.... என்னமா இருக்கார். "பயமா இருக்கு" 

"ஏன் நான் என்ன அவ்வ்ளோ கொடூரமாவா இருக்கேன்"

"அய்யோ.... அது இல்லைங்க. எங்க நான் உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லி.... உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு..."

"ஓ... சென்டிமென்ட்ஸ்... உன் முதல் புருஷனை பிடிக்குமா"

"ம்.."

"என்னை விட நல்லா இருப்பாரா"

இல்லை தான். அவர் கருப்பு. ஆளும் பார்க்க அப்படி ஒன்னும் நல்லா இருக்க மாட்டார். இருந்தாலும்... "எனக்கு பிடிச்சுது"

"ம்... குட். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பியா. நான் உன்னை நல்லா வெச்சுக்குவேன். உனக்கு ஒரு குழந்தை இருக்கில்ல.... என்ன படிக்குது"

"ஒண்ணாவது போக போகுது"

"குட்... நல்ல ஸ்கூல்ல சேர்த்திடுவேன். நல்லா படிக்க வைப்பேன். இது என் ப்ராமிஸ்"

எனக்கு அழுகை வந்தது.

"அழாத மஞ்சுளா. உன் குடும்ப சூழல் புரியுது. கல்யாண செலவெல்லாம் என்னுது. திருவான்மியூர்ல சொந்த வீடு இருக்கு. உன்னை ராணி மாதிரி வெச்சுக்குவேன்"

அவர் கால்ல விழுந்திட்டேன்.

"ஹேய்.... என்ன இது." தோள் பிடித்து எழுப்பி விட்டார்.

"ரொம்ப பட்டுட்டேங்க... வாழ்க்கை கொடுக்குறவருக்கு நாயாட்டம் இருப்பேன். பயம் மட்டும் தான். என் துரதிஷ்டம் உங்களை ஒன்னும் பண்ணிடக்கூடாது"  கை கூப்பி சொன்னேன்.

அவர் அப்பா அம்மா இப்போ அமெரிக்காவுல தங்கச்சி வீட்டுல இருப்பதாவும், கல்யாணத்துக்கு அவங்க சைடுல சில சொந்தங்கள் மட்டும் தான் வரும்னும் சொன்னார். அவர் வேலை விஷயமா ஒரு வாரம் சென்னை, மறுவாரம் வெளியூர்ன்னு போக வேண்டி இருக்கும்னு சொன்னார்.

அவர் மேல இருந்து சென்ட் வாசம். அவர் வாயில இருந்து கூட ஒரு நல்ல வாசம். (ஐயோ என் வாய் ஏதும் நாறுமோ? அவர் முகம் சுழிக்கலை. அதுவரை சந்தோசம்).

கீழே போனோம். பாப்பாவை அவர் மடியில வெச்சிக்கிட்டார். பெரியவங்க பேசினாங்க. அவர் சித்தப்பா ஒருத்தர் வேலூர்ல இருந்து வந்திருந்தார். வர்ற வெள்ளி போக அடுத்த வெள்ளி கல்யாணம் வெச்சுக்கலாம். திருநீர்மலையில கல்யாணம். நல்ல ஓட்டல்ல சாயந்திரம் சிம்பிளா விருந்துன்னு முடிவாச்சு. இன்னைக்கு வியாழன். சரியா 9ம் நாள் கல்யாணம். இவ்வளவு சீக்கிரமாவா?

எனக்கு மலைப்பா இருந்துச்சி. கிளம்பும்போது என்னை தனியா கூப்பிட்டார். 

"உனக்கு ஓகே தானே?"

"ம்..."

"ஏதோ மனசுல வெச்சிருக்க போலையே"

"இல்லைங்க.... பூரண சம்மதம்" என்றேன் முக மலர்ச்சியாக.

"அப்போ சரி. ரெடியா இரு. விருந்து சாப்பிட"

"ம்..." 

"நான் பகல் விருந்தை சொல்லலை. ராத்திரி விருந்தை"

எனக்கு வெட்கம் தாங்க முடியலை. தலை குனிந்தேன்.

"என்னடி கன்னிப்பொண்ணு மாதிரி வெட்கப்படுறே"

அதானே!

"நீங்க பத்திரமா போயிட்டு வாங்க"

"ம்... பயப்படாதே. ஆமாம்... தெலுங்குக்காரி தானே நீ... புருஷனை எப்படி கூப்பிடுவே?"

"ஏமண்டி-ன்னு"

"எமண்டி... என்னங்க மாதிரி இல்ல"

"ம்..."

"சிலுக்கு படத்துல வேற மாதிரி இல்ல கூப்பிடும். 'பாவா'ன்னு"

எனக்கு திரும்ப வெட்கம். "ம்... அப்படியும் கூப்பிடுவாங்க."

"அப்போ அப்படியே கூப்பிடு டி என் செல்லப் பொண்டாட்டி".

கிளம்பினார். எனக்கு உடலெல்லாம் காமத்தீ.
[+] 7 users Like meenafan's post
Like Reply


Messages In This Thread
RE: அழகான மனைவி, அன்பான துணைவி - by meenafan - 21-11-2025, 06:18 PM



Users browsing this thread: