அழகான மனைவி, அன்பான துணைவி
#2
24 வருஷமா நான் பாதுகாத்துவந்த ரகசியம் இன்னைக்கு உடைஞ்சிடுச்சி.
ஹ்ம்ம்ம்.... இப்போ எவன் என்னை கேள்வி கேட்க முடியும். போங்கடா மயிறுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான். இந்த சுந்தர் யாருன்னு காட்டவேண்டியது தான்.

24 வருஷத்துக்கு முன்ன....

மார்ச் 2001.

என்னோட முதல் மனைவியோட விவாகரத்து ஆகி என் கைக்கு கோர்ட் ஆர்டர் வந்தது பெரிய சந்தோசம். முழுக்க முழுக்க தோல்வி அடைஞ்ச கல்யாணம். நான் 'அப்பர் மிடில் கிளாஸ்'. நல்ல வசதி. தனியார் வேலை தான். இருந்தாலும் நல்ல சம்பளம். அப்பா ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி.

முதல் மனைவி - அப்பாவின் நண்பரோட மகள். எங்களுக்கு சம அந்தஸ்து. ஆனால்.... அவள் விருப்பம் இல்லாமல் கல்யாணம் நடந்திருக்கு. எனக்கு முதலிரவுலதான் தெரியும். இப்போ மாதிரி கல்யாணத்துக்கு முன்னே பேசுறதெல்லாம் அப்போ பழக்கம் இல்லை. 

அப்பா அம்மாவுக்கு இதில் பெரிய குற்ற உணர்ச்சி. நாங்களே உன் வாழ்க்கையை கெடுத்துட்டோமேன்னு ரொம்ப பீல் பண்ணுனாங்க. 

தங்கை அமெரிக்காவுல இருந்தா. அவ பிரசவத்திற்கு அவங்க அங்கே போயிருந்தாங்க. 

அடுத்த கல்யாணம் முழுக்க முழுக்க நான் பார்த்து முடிவு பண்ணுறது தான்னு சொல்லிட்டேன். அவங்களுக்கும் சம்மதம். நல்லா வாழ்ந்தா சரின்னு சொல்லிட்டாங்க.

என் தூரத்து சொந்தக்காரர் ஒரு கல்யாண புரோக்கர். பேரு துரை. அவர் கிட்டே சொல்லி வெச்சேன். என்ன மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டார். எனக்கே ரெண்டாம் கல்யாணம். அதனால, விதவையான இளம் பெண் வேணும்னு சொன்னேன். நல்லா அழகா இருக்கணும். நிறம் எந்த நிறமா இருந்தாலும் பரவாயில்லை. வசதி குறைந்த இடமா இருந்தா ரொம்ப நல்லது. ஜாதி / மதம் பேதமில்லை.

அவர் ஊர் கும்பகோணம். எங்க பூர்வீக ஊருக்கு பக்கம். அவர் எப்போதும் வாங்கும் தொகையை விட 2 மடங்கு தர்றேன்னு சொல்லி, அதுல கால்வாசி தொகையை அட்வான்சா கொடுத்துட்டேன். அவருக்கு ஏக சந்தோசம். மும்மரமா இறங்கிட்டார்.

அப்போ என் நண்பன் நம்பி வேறொரு ஆளை கூட்டி வந்தான். பேரு பொன்னுசாமி. சென்னையை சேர்ந்த கல்யாண புரோக்கர். அவர் கிட்டேயும் இதே கண்டிஷன் தான் சொன்னேன். கூடவே ஒரு எக்ஸ்டரா கண்டீஷன் சொன்னேன். பொண்ணுக்கு முதல் கணவன் மூலம் குழந்தை இருந்தாலும் பரவாயில்லை. நல்ல பொண்ணா இருந்தா சரி. இவருக்கும் fees துரை மாதிரியே தான் சொன்னேன். தாராளமா அட்வான்ஸ் கொடுத்த client நான் மட்டும்தான்னு ரொம்ப சந்தோஷப்பட்டார்.

அன்னைக்கு என் ஆபீஸ் அட்ரஸுக்கு ஒரு கவர் ரெஜிஸ்டர்ட் போஸ்ட்ல வந்திருந்தது. துரை அனுப்பி இருந்தார். 

ஒரு போட்டோ & கடிதம். 

"தம்பி, நீங்கள் கேட்ட அத்தனை அம்சங்களோடு கூடிய பெண். பெயர் லதா. கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் கணவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். அந்த துயரம் நடந்து 1 ஆண்டு முடியப்போகிறது. குடும்பத்திற்கு மூத்தவள். அப்பா ஒரு கூட்டுறவு சொசைட்டியில் வேலை. சிரமப்படும் குடும்பம் தான். இவளுக்கு 2 தங்கைகள். இவள் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு, 2 ஆண்டுகள் சோழன் போக்குவரத்து கழகத்தில் அப்பிரண்டிஸ் டிரைனிங் முடித்துள்ளாள். வயது 21. கொஞ்சம் கருப்புதான். ஆனால் நல்ல அழகும் லட்சணமும். எந்த சீரும் செய்யும் நிலையில் குடும்பம் இல்லை. முதல் திருமணத்திற்கு வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லையாம்." 

போட்டோவை பார்த்தேன். அம்சமாக இருந்தாள். ரொம்ப பிடிச்சி இருந்தது.

அவருக்கு ஒரு PP நம்பர் உண்டு. சென்னை டு கும்பகோணம் அப்போதெல்லாம் எஸ்.டி.டி. கால். கால் செய்தேன். அது ஒரு மளிகை கடை நம்பர். அவர் ஒரு மணிநேரம் கழித்து கூப்பிட சொன்னார். 

போட்டோவையும் லேட்டரையும் என் பிரீப் கேசில் வைத்துவிட்டு நிமிரவும் இன்டர்காம் அடிக்கவும் சரியாக இருந்தது. "பொன்னுசாமின்னு ஒருத்தர் உங்களை பார்க்க வந்திருக்கிறார்" என்றாள் ரிஷப்ஷனிஸ்ட். உள்ளே அனுப்பச்சொன்னேன்.

வந்தார்.

"வாங்க பொன்னுசாமி. உட்காருங்க. நல்லா இருக்கீங்களா"

"நல்லா இருக்கேன் சார்" வாயெல்லாம் பல்லாக உட்கார்ந்தார். தான் பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து மேஜை மேல் வைத்தார். "பாருங்க சார்"

அட.... செமையா இருக்காள். நல்ல கலர். அம்சமாக இருந்தாள். குட்டி போட்டிருப்பாளோ?!

"ம்... நல்லா இருக்கா"

"தங்கமான பொண்ணு சார். பேரு மஞ்சுளா" லேசாக மஞ்சள் நிறத்தோடு இருக்கிறாள் என்று தோன்றியது.

"ம்" நான் போட்டோவையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

"வயசு 25. ஆவடி. அம்மா, அண்ணன். அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடிச்சி"

"அவன் கதை அப்புறம். இவளை பத்தி சொல்லுங்க"

"கல்யாணம் ஆகி 5 மாசத்துல புருஷன் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான். பாவம் அப்ப இது புள்ளத்தாச்சியா இருந்திருக்கு."

"புள்ளையை பத்தி சொல்லுங்க"

"பொட்ட புள்ளை. 5 வயசு ஆகுது. பாவம் அப்பன் முகத்தை பார்த்ததே இல்லை"

"எப்போ பொண்ணு பார்க்க போகலாம்"

"நீங்க சரின்னா நாளைக்கே போகலாம்"

"வீட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்கன்னு சொன்னீங்க?"

"அம்மா. அண்ணன். அண்ணி. அண்ணனுக்கு 1 வயசுல குழந்தை இருக்கு. அப்புறம்...."

"ம்... சொல்லுங்க"

"ஜாதி மத பேதமில்லைன்னு சொன்னீங்க. மொழி?"

"ஏன்? எந்த ஊரு ஆளுங்க இதுங்க"

"சொந்த ஊர் ஆந்திரா ராஜமுந்திரி. இவங்க அப்பா காலத்துல இருந்தே இங்கே ஆவடியில் தான். அப்பா 10 வருஷம் முன்ன தவறிப்போயிட்டாரு. பசங்க படிச்சதெல்லாம் இங்கே தான்"

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. இந்த பொண்ணு விதவையாகி எத்தனை வருஷம் ஆகுது"

"5 வருஷத்துக்கு மேல... அவங்க குடும்பத்துல பொண்ணுங்களுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணிவைக்கிற வழக்கம் இல்லை போல... இப்போ வீட்டுக்கு வந்த மருமக கொடுக்குற டார்ச்சர் தாங்கலையாம். அதான் பொண்ணுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாளாவது குடும்பத்துக்குள்ள குழப்பம் இல்லைனு நினைக்கிறாங்க"

"ஓ! அண்ணன்காரன் என்ன வேலை பார்க்கிறான்."

"அவன் கார்மெண்ட்ஸ் கம்பெனியில சூப்பர்வைசர். அம்மா டைலர்"

"ம்..."

"பிடிச்சிருக்கா சார்"

"நாளைக்கு நேர்ல பார்த்துட்டு சொல்றேன்".

"அப்புறம் சார், வசதி குறைச்சல். ஏதும் எதிர்பார்க்காதீங்க"

"புரியுது"

அவர் கிளம்பினார். போட்டோ என்னிடம் கொடுத்திருந்தார்.

என் லாண்ட்லைன் போன் அடித்தது. கும்பகோணத்தில் இருந்து துரை. நானே திரும்ப கூப்பிடுறேன்னு சொல்லி போனை வைத்துவிட்டு, அவருக்கு திரும்ப கால் செய்தேன்.

விசாரிப்புக்கள் எல்லாம் முடிந்தது.

"சொல்லுங்க சித்தப்பா. பொண்ணு எப்படி"

"சொக்கத்தங்கம் தம்பி"

"நகை செஞ்சி போட்டுக்க வேண்டியது தானே" 

"பாவம் குடும்பம் தான் வசதி இல்லாதது."

"அது கிடக்கட்டும். இந்த பொண்ணுக்கு குழந்தை இல்லைல"

"இல்லை. கல்யாணம் ஆகி முழுசா ஒரு வாரம் கூட அவன் இல்லையே"

"சரி சரி"

"எப்போ பார்க்க வர்றீங்க?"

"பொண்ணு ஊரு கும்பகோணமா" 

"இல்லைங்க தம்பி. தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமம்"

"இன்னைக்கு புதன். வெள்ளிக்கிழமை ராத்திரி கிளம்பி சனி காலையில திருச்சி. அங்கே இருந்து தஞ்சாவூர் வந்து ரூம் எடுத்து தங்குறேன். நீங்க வந்துடுங்க. சனிக்கிழமை சாயந்தரம் பொண்ணு பார்த்துடலாம்"

"ரொம்ப நல்லது தம்பி"

"இந்த பழம், பூ தட்டெல்லாம் நீங்க ஏற்பாடு பண்ணிடுங்க. நான் பணம் தந்திடுறேன்"

"அதுக்கென்ன தம்பி". போனை வைத்துவிட்டேன்.

இரண்டு போட்டோக்களையும் பக்கத்தில் வைத்து பார்த்தேன். இரண்டு பெரும் இரு விதங்களில் அழகிகள்.

தஞ்சாவூர்காரி சற்றே கருப்பு. ரொம்ப குடும்பப்பாங்கான இருந்தாள். அவடிக்காரி (ஆந்திராக்காரி) நல்ல கலர். இருந்தாலும் பாடிய தலைவாரி சின்ன ஸ்டிக்கர் போட்டு வைத்து ஹோம்லியாகத்தான் இருந்தாள். இவளுக்கு 5 வயதில் பெண்குழந்தை இருக்காமே.... ரெண்டு பேரையும் பார்ப்போம். பின்னாடி முடிவு செய்துக்கலாம்.

-------------

ஞாயிற்றுக்கிழமை காலையில் பஸ் பிடித்து சென்னை பயணமானேன். 

குழப்பம். 

ரெண்டு பெண்களையும் பார்த்தாயிற்று. ரெண்டுமே பிடித்து இருந்தது. 

அப்போதெல்லாம் மபசல் பேருந்துகளில் வீடியோவில் புதுப்படம் போடும் வழக்கம் உண்டு. வீடியோவில் ரஜினி நடித்த வீரா படம் ஓடிக்கொண்டு இருந்தது.

மெல்ல சிரித்தேன்.

எதுக்கு குழப்பம். ரெண்டு பேருக்கும் வாழ்க்கை கொடுத்திட வேண்டியது தான்.
[+] 7 users Like meenafan's post
Like Reply


Messages In This Thread
RE: அழகான மனைவி, அன்பான துணைவி - by meenafan - 11-11-2025, 11:10 PM



Users browsing this thread: 1 Guest(s)