10-11-2025, 04:59 PM
dubukh Wrote:இது வரைக்கும், நான் என் மனசுல தோன்றதை அப்படியே மறைக்காம கமெண்ட்டா சொல்லி தான் பழக்கம். ஆனா அதிசயமா அப்படி ஆனஸ்டா பதில் சொன்னதுல இது வரைக்கும் யாருமே என்னை கோவித்து கொண்டது இல்லை. அப்படியே கடைசி வரை, கதை ஆசிரியர்களோட அன்பு கிடைக்கனும்னு நானும் விரும்புறேன்தாராளமாக தங்கள் கருத்தை சொல்லவும்..
நன்றாக அறிமுகமான இருவர் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசினாலே புரிதலில் இடைவெளி இருக்கும். என்னுடைய தனிப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு, எனக்கு தோணுவதை எழுதும் போது அது என்னுடைய பார்வையிலேயே இருக்கும். அதைப் படிக்கும் நபர்களுக்கும் எனக்கும் கம்யூனிகேஷன் கேப் நிறையவே இருக்கும். அதுதான் யதார்த்தமும் என நம்புகிறேன்.
ஒரு விமர்சனம் என்பதை அந்த கேப் ஃபில் பண்ற விஷயமாகவே நான் பார்க்கிறேன். என்னை நேரடியாக தாக்குவதாக நான் எடுத்துக் கொள்வதில்லை. ஆகையால் ஒரு விமர்சகன் என்பவன், ஒரு திறமையான ஓட்ட பந்தய வீரனுக்கு எப்படி ஓடுவது என சொல்லும் கால் ஊனமானவன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
தவறை திருத்திக் கொள்ளலாம்னு என காமக் கதை தளத்துல கேட்குறதே ஒரு விதத்துல முட்டாள்தனம்தான். நான் திருத்திக் கொள்ளலாம், இம்புரூவ்மென்ட் எனப் பேசும் விஷயங்கள் அனைத்துமே எனக்கும் வாசகர்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்பது பற்றியே தவிர, எல்லோருக்கும் பிடித்த மாதிரி கதை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. ஏனென்றால் அது சாத்தியமும் இல்லை..
கதை எழுதுற விஷயத்தில் என்கிட்ட இருக்குற பிரச்சனைகளில் எனக்கே தெரிந்தவை..
1 : திடிரென யாராவது, இப்படி எழுது எனக் கேட்டால் பிடிக்காது. நீ எப்படி கேட்கலாம் என ரிப்ளை பண்ணுவது.
2: ஒரு வார்த்தையில் வரும் பின்னூட்டங்களுக்கு, இதெல்லாம் குடுக்காம இருக்கலாம் என ரிப்ளை பண்ணுவது.
3 : பாயிண்ட் A டூ பாயிண்ட் B எப்படி போனாங்கன்னு முடிஞ்ச அளவுக்கு லாஜிக்கலா எக்ஸ்பிளெயின் பண்றேன்னு ஜவ்வு மாதிரி இழுக்குறது. காமக் கதைகளில் யாரும் அதை பெரிதாக விரும்புவதில்லை. வந்தார்கள் ஒரு மணி நேரம் செய்தார்கள் போனார்கள் அப்படின்னு எழுதுறதுல எனக்கு ஒரு உடன்பாடு இல்லை.
@Gilmashorts in YouTube, X, Instagram



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)