Fantasy தெய்வ யட்சி (முடிவுற்ற கதை) - சகோதரன்
#4
அவளுடைய கன்னங்கரிய நிறத்துக்கிணையாக கிருஷ்ணன் கண்டதில்லை. தீட்டப்பட்ட கருங்கல்லில் மட்டுமே உருவாகும் உறுதியான பளபளப்பான கருமை. அவனளவுக்கே உயரமாக திடமான தோள்களும் நிமிர்ந்த தலையுமாக நின்றாள். ”இல்லஇங்க சிலைகள்…” அவன் கண்கள் பரபரப்பு கொண்டு அவளை அள்ள முயன்றன. நல்ல சிற்பத்தைப் பார்க்கும்போது எப்போதுமே உருவாகும் பரபரப்பு அது. பின்னர் சொல்லிக்கொள்வான், இல்லை பதற்றப்படாதே, மெதுவாகப்பார், அணுவணுவாகப்பார், பார்த்தவற்றை நினைவில் நிறுத்தியபின்னர் ஒரு புள்ளியிலிருந்து கண்களை விலக்கு. குறுக்காக சிந்தனைகளை ஓடவிடாதே. சிற்பத்துக்கு உன் மனதை அளித்துவிடு….ஆனால அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே.

 
அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை. கண்ணிலிருந்து அவள் வழுக்கி வழுக்கி விழுவதுபோல, அல்லது கண்ணை நிறைந்து பெரும்பகுதி மிச்சம் இருப்பதிபோல. எத்தனை பேரழகி! அவளுடைய மூதாதையர் இந்த கோயிலில் இருந்திருப்பார்கள். இச்சிலைகளை அவர்களைப் பார்த்தே வடித்திருப்பான் சிற்பி. அப்பழுக்கற்ற வடிவ கச்சிதம் கொண்ட மகத்தான உடல். துதிக்கை என உருண்டு கனத்த தொடைகள். இரு மடிப்புவளைவுகள் கொண்ட ஒடுங்கிய வயிறு. இறுக்கமான உருண்ட சிற்றிடையில் வியர்வையின் மெல்லிய ஈரம். அவன் கண்களை நிறைத்து அவன் பிரக்ஞையை நிறைத்து அவனை முழுமையாக்கிய மார்புகள். இரு இளநீர்க்காய்களைப்போல. நெருக்கமாக, உருண்டு ஒன்றை ஒன்று மெல்ல முட்டி ஒரு மென்மையான குழியை உருவாக்கியபடி. மெல்ல அதிர்ந்த ஈரமான குழி. எத்தனை அற்புதமான முலைகள். மூங்கில்போன்ற கைகளால் இரு பக்கமும் எல்லையிடப்பட்டு, பாலைநில மணல்வரிகள் போலத்தெரிந்த விலாவெலும்புகளுக்கு மேலே மெல்ல தொற்றியமர்ந்தவைமென்மையையும் ஈரத்தையும் கொண்டு செய்யப்பட்ட, உருண்ட ,மூன்றுவரி ஓடிய நீள் கழுத்து
 
சிற்பங்களைக் காண ஆரம்பித்த இந்த இருபதாண்டுகளில் அவன் அவை கலைஞனின் இலட்சியக் கற்பனைகள், அத்தகைய பெண்கள் ஒருபோதும் பூமியில் இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால் அவன் கண்முன் ஒரு பரிபூரண இலக்கணம் கொண்ட சிற்பம் உயிருடன் நின்றுகொண்டிருந்தது. நீள்வட்ட முகத்தில் மையமாக கூர்மைபெற்ற சிறுநாசி. அதன் கீழே வாடிய மலரிதழ்போல சிறிய கருஞ்சிவப்புக் குமிழுதடுகள். மேலுதட்டின் மென்மையான ஒடுங்கலுக்குக் கீழே கீழுதட்டின் சிறிய பிதுங்கல். ஒளி பிரதிபலித்த கன்ன வளைவு.
 
என்ன கருமை! சில பண்டாரங்களின் பழமையான திருவோடுகளுக்கு மட்டுமே அந்த பளபளக்கும் கருமையைக் கண்டிருக்கிறான். சிறந்த ஓவியன் அனாயசமாக இழுத்த கோடுபோல மூக்கும் புருவமும் இணைந்த வளைவு. பளபளக்கும் தகடாக நெற்றி. அலையலையக இறங்கி பனங்குலைபோலத் தோளில் கனத்த குழல்த்தொகுதி. என்ன பிழை, என்ன குறைஇல்லை ஏதுமில்லை. முழுமை….பிசிறற்ற முழுமை.
 
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: தெய்வ யட்சி by சகோதரன் - by sagotharan - 03-07-2019, 09:07 PM



Users browsing this thread: 1 Guest(s)