04-11-2025, 10:21 AM
(This post was last modified: 04-11-2025, 10:22 AM by Mad For Privacy. Edited 1 time in total. Edited 1 time in total.)
கார் பங்களாவை நெருங்கிய பொது, பங்களாவின் ராட்சத வாயில் கதவு திறந்திருந்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. எனக்கு முன்னாலேயே இங்கே யாரோ வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. காரை உள்ளே கொண்டு சென்று பிரதான வாசலுக்கு நேராக நிறுத்தினேன். பங்களாவுக்கும் விளக்கு எதுவும் எரியாததால், காரின் முகப்பு விளக்கை எரிய விட்டபடி இறங்கி வெளியே வந்தேன். அம்மாவும் இறங்கி என் அருகில் வந்து நின்றாள். உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பது அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும், சேலையை உடலைச் சுற்றி போர்த்திக் கொண்டு என்னை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று பங்களாவைப் பார்த்தாள்.
"எப்பா, எவ்ளோ பெரிய பங்களா டா!" என்றாள் வாயைப் பிளந்தபடி.
"உள்ள யாரோ இருக்காங்கம்மா, யாருன்னு தெரியல." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முன்வாசல் விளக்கு எரிந்தது. உள்ளே இருந்து யாரோ நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. சற்று அடர்த்தியான பனி மூட்டம் பங்களா வாசலில் நிலவ, இரண்டு பேர் இடித்துக் கொள்ளாமல் ஒரே நேரத்தில் உள்ளே செல்லும் அளவுக்கு அகலமான அந்த வாசலை கிட்டத்தட்ட முழுவதும் அடைத்தபடி ஒரு உருவம் வந்து நின்றது. இருட்டும் பனியும் சேர்ந்து அந்த உருவத்தை முக்கால் வாசி மறைத்துவிட, ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நின்றது அது. அம்மா என் கையைப் இறுகப் பிடித்தாள்.
"ராம், யாருடா அது?" என்றாள் சற்று பயத்தோடு.
ஆனால் அது என் காதில் விழவில்லை. நான் வேறு ஒரு உலகத்திற்கு சென்றுவிட்டிருந்தேன். என் தலை லேசாக சுற்றியது. ஏதேதோ பழைய ஞாபகங்கள் எனக்கு வந்து வந்து போயின. கலங்கிய நீருக்கு உள்ளே பார்ப்பது போல, ஏதோ மங்காலான நினைவு என்னை நெருங்கி வந்தது, ஆனால் அதன் அர்த்தம் முழுமையாக புரிவதற்குள் அது மீண்டும் நீருக்குள் நழுவியது போல உணர்ந்தேன். அம்மா என்னை நன்றாகப் பிடித்து உலுக்கி,
"டேய் ராம், என்னடா ஆச்சு?" என்று சொன்ன போது தான் எனக்கு சுயநினைவு வந்தது. அதோடு வாசலில் நிற்கும் வேணி அம்மாவின் முகமும் பளிச்சென்று தெரிந்தது. நீண்ட காலம் இருண்டிருந்த அறைக்குள் பளிச்சென விளக்கேற்றியது போல பல விஷயங்கள் எனக்கு அந்த ஒரு நொடியில் நினைவுக்கு வந்தன.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)