Adultery சத்ய-பிரபா
#19
பிரபாவிற்கும் சந்திராவிற்கும் அடுத்த 5-6 நாட்கள் திகிலோடு தான் கழிந்தது. வீட்டில் இருந்த போன் (landline) பணம் காட்டாமல் disconnect ஆகி சில மாதங்கள் ஆகிறது. குணாவிடம் இருந்து செய்தி வந்தால் கடிதம் மூலம் தான் வரவேண்டும். இல்லை யாராவது நேரில் வரவேண்டும். சத்யா ரொம்ப கேஷுவலாக இருந்தாள். மனதிற்குள் ஒரு குரூர ஆனந்தம். இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

அது ஜூன் மாதம். பள்ளிகள் திறந்துவிட்டன. நிதினும் விஸ்வஜாவும் பள்ளிக்கு செல்லவில்லை. பணம் கட்டவில்லை. அடுத்து என்ன என்றும் தெரியாது. 

பிரபா குப்புற படுத்தே கிடந்தாள். சும்மாவே வீட்டு வேலை எதுவும் செய்யமாட்டாள். இப்போது கேட்கவேண்டாம். சந்திராவிற்கு எதுவும் ஓடவில்லை. வழக்கம் போல சத்யா தான் பம்பரமாக சுழன்றாள். 

அவர்கள் வாழும் இந்த வீடு 3 வருஷத்திற்கு முன் தான் கட்டி குடியேறிய வீடு. அக்கம் பக்கம் வீடுகள் கிடையாது. புறநகர் பகுதி. இவர்களது தெருவின் நடுநாயகமாக வீடு. வேறு வீடுகள் இல்லை. 3 பிளாட் தள்ளி ஒருவர் கட்டத்தொடங்கி பாதியில் நின்றுபோன ஒரு வீடு. அடுத்த தெரு கோடியில் ஒரு வீடு. இப்படி தள்ளித்தள்ளி தான் வீடுகள். இந்த வீட்டிற்கு வந்து ஒரு வருஷம் கூட இந்தக்குடும்பம் நிம்மதியாக இருந்ததில்லை. பின் நாளில் ஒரு ஜோதிடர் சொன்னார், மனையடி சாதத்திரப்படி அளவுகள் தவறு என்று.

எங்கோ வெளியில் சென்றுவிட்டு அசோக் வந்தான். சந்திரா சொன்னாள் "அசோக் மாப்பிள்ளைக்கு 30ம் நாள் சாமிக் கும்பிட வேண்டிய ஏற்பாடு பண்ணனும். செலவுக்கு கொஞ்சம் பணம் வேணும்னு கேட்டு 'அவருக்கு' லெட்டர் போடு"

"ம் சரிம்மா"

"அவர் ஆபீஸ் அட்ரஸ் இருக்கில்ல"

"ம் இருக்கு"

பெட் ரூமில் இருந்த பிரபா மல்லாக்க திரும்பினாள். கடந்த 5-6 நாட்களாக அம்மா சொன்னது அவள் மனதை மாற்றி இருந்தது. 'தனி ஆளா ஓட்டுறது ரொம்ப கஷ்டம் டி. எப்படியும் ஒரு துணை தேவை. வெளிய எங்கேயோ தேடுறதுக்கு 'அவர்' பரவாயில்லையே' என்றாள். 2 வருஷம் ஆகுது ஆண் சுகத்தை அனுபவித்து. பிரபாவின் மனசு மாறத்தொடந்தியது. அவர் ஒன்னும் வெளி ஆள் இல்லையே. என் காதல் கணவரின் சொந்த அண்ணன். இருவரும் ஒரே சாயல் தானே. 

"அண்ணா" என்று குரல் கொடுத்தாள் பிரபா.

"சொல்லு" 

"லெட்டர் நான் எழுதுறேண்ணா" என்றாள் சற்று மென்று முழுங்கி. 

சந்திரா மனதில் சந்தோசம்.

ஒரு இன்லேண்ட் லெட்டர் கொண்டு வந்தாள் சந்திரா. "இது வேண்டாம்மா. பேப்பர்ல எழுதி கவர்ல போட்டு அனுப்பலாம்" என்றாள் சந்திரா.

லெட்டர் எழுத பேனாவைத்தேடாமல் போய் முகம் கழுவி துடைத்து, பவுடர் போட்டு தலையை சீவி வந்தாள் பிரபா. நமுட்டு சிரிப்பு சிரித்தாள் சந்திரா. அவளை லேசாக முறைத்து விட்டு நிதினின் பையில் இருந்து பேனா ஒன்றை எடுத்துக்கொண்டு கண்மூடி மனதிற்குள் சாமி கும்பிட்டுவிட்டு பேப்பரை எடுத்தாள்.

"அன்புள்ள அத்தான் அவர்களுக்கு 

தங்கள் பாதங்களில் அனேககோடி நமஸ்காரங்களுடன் அபலை பிரபா எழுதிக்கொள்வது. தங்கள் நலனையும், அக்கா, குழந்தைகள் நலனையும் அறிய ஆவல். இங்கே நாங்கள் தங்கள் தயவில் ஓரளவு நலமாக இருக்கிறோம்.    

தங்களது அன்புத்தம்பி போட்ட பிச்சை என் வாழ்க்கை. எனக்கு மட்டும் இல்லை. என் அம்மா மற்றும் அண்ணன் என மூவரும் அவர் இட்ட பிச்சையில் வாழ்ந்தவர்கள். எனது உடலும் உள்ளமும் அவருக்கு அடிமையாக இருந்தது. அவர் விரல் சொடுக்கிற்கு ஆடினேன். அவர் விருப்பப்படிதான் உடுத்தினேன். அவர் சாப்பிட்ட எச்சில் தட்டில் தான் சாப்பிட்டேன். படுக்கை அறையில் அவருக்கு தாசியாக சேவை செய்தேன். 

வீட்டிற்கு வெளியே என்னை கண்ணியமான மனைவியாகவும் வீட்டிற்குள் அவர் ஆசைகளுக்கு வடிகாலாக ஒரு தாசியாகவும் தான் என்னை நடத்தினார். என் உடலின் அந்தரங்கங்கள் அனைத்திலும் அவர் பதித்த பல் தடம் இருந்தது. ஒரு சில வடுக்கள் இன்னமும் உள்ளது. 

பல நேரங்களில் அவர் காம இச்சைகள் காட்டு வெள்ளம் போல் கட்டுக்கடங்காது போயிருக்கிறது. அவர் நல்ல உடல்நிலையில் இருந்தவரை தினம் தினம் தீபாவளி தான். என் குழந்தைகளை பார்த்துக்கொள்ளக் கூட எனக்கு முடியாத அளவிற்கு அவர் இட்ட கட்டளைகளுக்கு என் அழகு உடலை காணிக்கை ஆக்குவதிலேயே மும்மரம் காட்டியுள்ளேன். 

2 வருஷங்களுக்கு முன் ஆணிவேரோடு மரம் சாய்வது போல ஒரு நாள் படுக்கையில் வீழ்ந்தார். பிறகு என் வாழ்க்கை மருத்துவமனைகளுக்கும் வீட்டிக்குமாகவே ஆகிவிட்டது. 

இந்த 10 வருஷங்களும் எங்கள் குடும்ப நிர்வாகத்தை செய்யும் பணி என் அம்மாவிற்கு. அதுவும் தங்கள் தம்பி இட்ட கட்டளை தான்.  என் அண்ணன் எப்போது தன் மைத்துனரின் அடிமை தான். இந்த 10 வருஷங்கள் என் அம்மாவும் அண்ணனும் தங்கள் தம்பிக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றினார்கள். எந்த அளவிற்கு இருவரும் அடிமைகள் என்பதை ஒரு உதாரணம் கொண்டு சொல்கிறேன்.

என் அண்ணன் கல்யாணம் காலையில் திருவாரூரில் நடக்கிறது. மதியம் ஒரு அவசர வேலை என்று தங்கள் தம்பி சொல்கிறார். இவர்கள் செய்துக்கொண்டு இருந்த பிசினஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும். யார் செல்லவேண்டும்? என் அண்ணன். தங்கள் தம்பியின் பிசினஸ் பார்ட்னரோடு செல்ல வேண்டும். தங்கள் தம்பிக்கு அடுத்த நாள் அவர் வேலை பார்க்கும் பேங்க்கில் இன்ஸ்பெக்ஷன். அதனால் அவர் போக முடியாது. என் அண்ணன் தங்கள் தம்பியின் பினாமி. கையெழுத்து போட அவன் தான் இருந்தாகணும். ஆகவே புது மாப்பிள்ளையை அனுப்புகிறார். தாலி கட்டி 3 மணி நேரத்தில் அவனும் கிளம்பி போய்விட்டான். 4 நாட்கள் கழித்துதான் வந்தான்.

என் அண்ணனோ, அம்மாவோ, நானோ, இவ்வளவு ஏன் என் அண்ணன் மனைவியோ ஒரு வார்த்தை சொன்னதில்லை. நாங்கள் அனைவரும் தங்கள் தம்பியின் அடிமைக்கூட்டம் தான். எங்கள் குடும்பத்தை பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டன. மதிப்பிற்குரிய அத்தான், தங்கள் கால்களை பிடித்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், அவை அனைத்தும் பொய்கள் தான். 

தங்கள் தம்பியின் 30ம் நாள் படையல் இட தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம். தாங்கள் நேரில் வந்து அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும். 

தங்கள் தம்பி விட்டுச்சென்ற அவர் வாரிசுகள் கதி இன்றி இருக்கிறார்கள். தங்கள் தம்பியின் அடிமைகளான நானும் என் அம்மா சந்திராவும், என் அண்ணன் அசோக்கும் அவன் மனைவி சத்யாவும் அவன் குழந்தைகளும் தங்கள் ஆசிக்காக காத்திருக்கிறோம். 

மதிப்பிற்குரிய அத்தான், தங்கள் பேச்சை தட்டாமல் செய்ய அடிமைகள் நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை காப்பாற்றுங்கள். எங்கள் வாழ்க்கை தங்கள் திருவடியில். 

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் 
தங்கள் அடிமை 
பிரபா"

சின்ன அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் ஒரே மூச்சில் எழுதி முடித்தாள் பிரபா. அசோக்கிடம் நீட்டினாள். அவன் சந்திராவிற்கு படித்துக்காட்டினான். தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள் பிரபா. வெட்கம் எல்லாம் விட்டு சிக்னல் கொடுத்தாச்சு. வேற வழி இல்லை. 

சந்திரா ஆவலோடு கேட்டுக்கொண்டு இருந்தாள். "எல்லாம் சரி, பணத்தை பத்தி ஒன்னும் எழுதலையே" 

"நீ ஒருத்தி. அவ இவ்வளவு சூப்பரா விஷயத்தை எழுதி இருக்கா. சில்லைறைக்கு அலையுற பிச்சைக்கார முண்டை" சொன்ன அசோக் மனதில் குதூகலம். திரும்ப ஒரு வாழ்க்கை அவனுக்கு கிடைப்பது உறுதி ஆகிடிச்சி. எங்கே பிரபா முரண்டு பிடிப்பாளோன்னு பயம் இருந்தது. இப்போ தெளிவாகிடுச்சி. 

"அதுக்கில்லைடா... " வாயெடுத்த அம்மா சந்திராவை பார்த்து முறைத்தான் அசோக். "மூடிக்கிட்டு கிட" என்று சொல்லிவிட்டு, கவர் ஒன்றை எடுத்தான். 

"இங்க கொடு அண்ணா, நானே விலாசம் எழுதுறேன்" என்று எழுதத்தொடங்கினாள். மறக்காமல் from addressல் தன் பெயரை எழுதினாள் பிரபா.

வெற்றிக்களிப்போடு "டவுண்ணுக்கே போய் ஹெட் போஸ்ட் ஆபீஸ்ல போஸ்ட் பண்ணிடுறேன். நாளைக்கே அவர் கைக்கு கிடைச்சுடும்" என்று சொல்லிவிட்டு கொல்லை பக்கம் முகம் கழுவப்போனான். 

ஜன்னலோரம் நின்று உள்ளே நடப்பதை கேட்டுக்கொண்டு இருந்த சத்யாவை கவனித்து விட்டான். அவள் பின்புறமாக சென்று அவள் சூத்தில் ஒரு தட்டு தட்டினான். துள்ளித் திரும்பியவள், இவனைப்பார்த்ததும் முகம் மலர்ந்தாள். கண்ணடித்தாள். அவள் குடும்பப்பாங்கான முகமும் அவள் இப்படி கண்ணடித்ததும் அவள் முகம் காட்டிய செக்சி expressionனும் அவனுக்கு மூடை வரவழைத்தது. 'வந்து வெச்சிக்கிறேன்' என்று சைகை காட்டிவிட்டு லெட்டரை போஸ்ட் பண்ண கிளப்பிவிட்டான்.

--------------------

அடுத்த நாள். 

மதுரை.

வழக்கம் போல கலெக்ஷன், உயரதிகாரியை ரகசிய இடத்தில் சந்தித்து பங்கு கொடுப்பது என்று பிசியாக இருந்தார் குணா. தபால் துறை அன்று கனக்கச்சிதமாக வேலை செய்து, தபாலை அவர் அலுவலகத்தில் சேர்த்துவிட்டது. ரெக்கார்டு கிளார்க்கும் பவ்வியமாக கொண்டுவந்து ஆள் இல்லாத குணாவின் மேஜை மேலே ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு போய் விட்டான். 

ஒருநாளும் இல்லாத திருநாளாக குணாவின் மனைவி சுதா அவரைப்பார்க்க அவர் அலுவலகம் வந்தாள். பள்ளியில் ஏதோ விழாவிற்கு அவளும் இன்னொரு டீச்சரும் பர்ச்சேஸ் பண்ண டவுனிற்கு கிளம்பினர். பக்கத்தில் கணவன் ஆபீஸ் என்பதால் வந்துவிட்டாள். இப்போது போல செல்போன் பயன்பாடெல்லாம் இல்லாத காலம். குணாவிற்கு போதாத காலம்.

"சாருக்கு தகவல் சொல்லிடுறோம். நீங்க உட்காருங்க மேடம்" என்று குணாவின் கேபினில் உட்கார வைத்தார் ஹெட் கிளார்க். சுதாவும் அவளோடு வந்த டீச்சரும் உட்கார்ந்தார்கள். காபி வந்தது. பொழுது போகாமல் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள் சுதா. டாய்லெட் போகிறேன் என்று கூட வந்த டீச்சர் நகர..... சுதா கண்ணில் 'அந்த' கடிதம் பட.... அதிலும் குறிப்பாக 'பிரபா' என்ற பெயர் கண்ணில் பட.... 

சத்தம் போடாமல் லெட்டரை எடுத்து தன் ஹேண்ட் பேகிற்குள் வைத்துக்கொண்டாள் சுதா. அவள் இதயம் படபடத்தது. சக டீச்சர் வந்தவுடன், அவசர அவசரமாக ஸ்கூல் கிளம்பிச்சென்றார்கள். 

நேரே ஸ்டாஃப் ரூமிற்குள் சென்றாள். யாரும் இல்லை. நெஞ்சம் படபடக்க லெட்டரை எடுத்து கவரைப் பிரித்தாள். 

லெட்டரை படித்து முடித்தவுடன் முகத்தில் ஆத்திரமும் கண்களில் கொலை வெறியும் கொப்பளித்தது.     

------------------------  

அரசு அலுவலகங்களில் ஒரு வழக்கம் உண்டு. யாருக்கு எந்த கடிதம் வந்தாலும் அதனை ரெக்கார்டு கிளார்க் ஒரு ரெஜிஸ்டரில் குறிப்பு வைத்துக்கொண்டு, யாருக்கு கொண்டு சேர்க்கிறார்களோ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கிக்கொள்வது வழக்கம். 

குணா ஆபீஸ் வந்தவுடன் ரிக்கார்டு கிளார்க் அந்த ரெஜிஸ்டரை கொண்டு வந்தார். அன்று அவருக்கு மொத்தம் 4 கடிதங்கள் வந்திருந்தன. 3 அபீசியல். 

ரிஜிஸ்டரில் அனுப்புனர் பெயர் & விலாசம் இருக்கும். கவனித்தனர் மனதில் உற்சாக ஊற்று. கடிதத்தை தேடினார். கிடைக்கவில்லை. அப்போது ஹெட் கிளார்க் வந்தார். "உங்க மிஸஸ் வந்திருந்தாங்க...." என்று கதையளக்க தொடங்கினார். வேறெதுவும் குணாவின் காதுகளில் விழவில்லை. 

மனதில் இருந்த உற்சாக ஊற்று வறண்டு ஒரு திகில் ஆட்கொண்டது.
[+] 3 users Like meenafan's post
Like Reply


Messages In This Thread
சத்ய-பிரபா - by meenafan - 01-10-2025, 02:40 AM
RE: சத்ய-பிரபா - by Tamilmathi - 01-10-2025, 09:00 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 02-10-2025, 12:38 AM
RE: சத்ய-பிரபா - by mandothari - 06-10-2025, 07:14 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 18-10-2025, 05:33 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 18-10-2025, 05:34 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 18-10-2025, 05:47 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 18-10-2025, 08:17 PM
RE: சத்ய-பிரபா - by intrested - 19-10-2025, 12:00 AM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 19-10-2025, 12:43 AM
RE: சத்ய-பிரபா - by mandothari - 22-10-2025, 01:55 AM
RE: சத்ய-பிரபா - by meenafan - 25-10-2025, 03:25 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 28-10-2025, 10:45 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 29-10-2025, 01:47 AM
RE: சத்ய-பிரபா - by meenafan - 29-10-2025, 11:07 PM
RE: சத்ய-பிரபா - by Punidhan - 29-10-2025, 11:57 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 30-10-2025, 02:57 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 30-10-2025, 03:00 PM
RE: சத்ய-பிரபா - by Vijay42 - 30-10-2025, 06:31 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - 30-10-2025, 07:10 PM
RE: சத்ய-பிரபா - by meenafan - Yesterday, 07:47 PM
RE: சத்ய-பிரபா - by Its me - Yesterday, 10:29 PM



Users browsing this thread: 5 Guest(s)