Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#40
அடுத்த நாள் மதியம்.
வெப்பம் மிதமானது, பீட்டரின் முகம் கடுமையாக இருந்தது.
அவன் கதவைத் தள்ளி உள்ளே வந்தான்.

மீனா stove அருகே சமையல் செய்து கொண்டிருந்தாள்.
அவளது முகம் எப்போதும் போல அமைதியாக இருந்தாலும்,.

மீனா… என்று அவன் குரல் சற்று தாழ்த்திப் பேசினான்.
இன்று அந்த முதலாளியாவனைக் (Investor) என்ன கூப்பிட்டு பேசுனான் .”

அவள் தலை தூக்கி பார்த்தாள்.
அவர் என்ன சொன்னார்?

பீட்டர் கையிலிருந்த சிகரெட்டை தூக்கி காற்றில் ஒரு சுழல் வரைவது போல,
உன் கணவன் ஓடி போனான்ல அதுக்கு உன்கிட்ட காசு வாங்க சொல்லுறான்

மீனாவின் கை நடுங்கியது.
என்ன?

ஆம்… அவனே சொல்லினார். கடன் தொகை முழுக்க உன் பெயர்ல இருந்தது.
அதனால நீ தான் பொறுப்பா இருக்கணும்

அவள் மெதுவாக சுவரை பிடித்துக் கொண்டாள்.
நான்… நான் என்ன செய்வது, பீட்டர்?

பீட்டர் சற்று அமைதியாக அவளை நோக்கினான்.
பயப்படாதே. ஒரு வழி இருக்கும் கண்டு புடிக்கலாம்

அவள் திகைத்தபடி அவனைப் பார்த்தாள்.
உன் வீடும் நிலமும் சேர்த்து விற்கலாம். அது குறைந்தது ஒரு கோடி ஐம்பது லட்சம் வரும்.
மீதியிலுள்ள ஐம்பது லட்சம் நாம சமாளிக்கலாம் — உன் நகைகள் இருக்கு அல்லவா?

மீனாவின் கண்கள் உடனே கண்ணீர் நிறைந்தது.
அவள் மெதுவாக சொன்னாள், என் நகைகளில் பாதி போச்சு, பீட்டர்… அவனே எடுத்துப் போனான்.

பீட்டர் தலையை சாய்த்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.
பிறகு மெதுவாக,
சரி. மீதி எவ்வளவு இருக்குன்னு பார்ப்போம்.
பயப்படாதே. நம்மால ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம், என்றான்.

அவள் கண்ணீரை துடைத்து அவனைப் பார்த்தாள் —
அவன் முகத்தில் இன்னும் அந்த உறுதி.

மறுநாள் காலை.
வெப்பமான சூரியன் வெளிச்சத்தில், பீட்டரும் மீனாவும் ரியல் எஸ்டேட் அலுவலகம் சென்றார்கள்.
மீனாவின் முகம் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு கனமான சுமை.
அவள் தன் வீட்டையும் நிலத்தையும் விற்று போகிறாள்
அது அவளது வாழ்க்கையின் சொத்துகள் கை விட்டு செல்கிறது .

பீட்டர் எப்போதும் போல மவுனமாக இருந்தான்.
அவன் பேசாமல் அவளை கையால் சைகை செய்து உள்ளே அழைத்தான்.

சட்டகத்துடன் காகிதங்கள் கையெழுத்தானது.
பீட்டர் அவளுக்கு எதையும் சொல்லவில்லை, ஆனா ஒவ்வொரு கையெழுத்திலும் அவளது விரல் நடுங்குவது அவன் கவனித்தான்.

மதியத்திற்கு பிறகு, அவர்கள் ஒரு நகைக்கடைக்கு சென்றார்கள்.
மீனா மெதுவாக தனது நகைகள் பையை எடுத்தாள்.
ஒவ்வொரு காப்பும், ஒவ்வொரு வளையும், அவளது திருமண நினைவுகள்.

அனைத்தையும் கையில் கொடுத்த பிறகு,
அவள் தாலியை மெதுவாக கழற்றிக் கொண்டாள்.
அந்த நொடியில் அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.

மீனா… பீட்டர் குரல் தளர்ந்தது, இதை வேண்டாம்… வேற வழி இருக்க பாப்போம் …

அவள் தலையை ஆட்டி, இது தங்கம் தான் பீட்டர்… வாழ்க்கை அதை மீண்டும் வாங்கலாம்…என்றாள்.

பீட்டர் ஒருமுறை அவளது முகத்தை பார்த்தான் —
அந்த வலிமையோடு கலந்து இருந்த மென்மை அவனைத் திசை திருப்பியது.
பொன்னும் மன்னும் இழந்து தைரியமாக இருக்குறாள் அவன் சற்றே முகம் திருப்பி

பணம் கையிலே வந்தது.
அந்த மாலையில் அவர்கள் வீட்டிற்குத் திரும்பும் போது,
மீனாவின் கழுத்தில் தாலி இல்லை, ஆனா முகத்தில் ஒரு சோகம் இருந்தது.

மாலையின் அமைதியில் கதவு மெதுவாக திறந்தது.
பீட்டர் உள்ளே வந்தான் — கையில் ஒரு பழைய பையை பிடித்திருந்தான்.
மீனா stove அணைத்து, இவ்வளவு தாமதமா வந்தே? என்று கேட்டாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்தப் பையை மெதுவாக மேசையிலே வைத்தான்.
அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.

இது என்ன?

பீட்டர் சிகரெட்டை மூட்டாமல், நேராக அவள் கண்களை பார்த்தான்.
ஐம்பது லட்சம்.

மீனா பதற்றத்துடன், இது எதுக்கு? என்று கேட்டாள்.

அவன் மெதுவாக நிமிர்ந்துக் கொண்டான்.
நான் பணத்தை முதலாளிக்குக் கொடுத்தேன். இது எனது பங்கு.
இப்போ இது… நம்மளுது .

அவள் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள் — ஒரு நிமிஷம் வாயிலே வார்த்தை வரவில்லை.
அவள் மனதில் ஓடியது —
இவன் சொன்னான் நம்மளுது … அந்த ஒரு வார்த்தை அவளுக்கு மீண்டும் உயிரோடு ஆக்குது.

அவள் மெதுவாக அவன் பக்கமா வந்து,
பீட்டர்… நீ இப்படி பேசுவேன் நான் எதிர்பார்க்கல, என்றாள்.


மீனாவின் கண்கள் நனையும்; அவள் தலையை கீழே குனிந்தாள்.
அவன் மெதுவாக பையை அவள் கையில் தந்தான்.
இதை நீ தான் பார்த்துக்கோ.

அந்த நிமிடத்தில், அந்த வீடு முதன்முறையாக “வீடாக” மாறியது.

[Image: images-6.jpg]
[+] 2 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல் - by sreejachandranhot - 29-10-2025, 10:48 PM



Users browsing this thread: