Romance அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல்
#39
ஒரு நாள் மாலைச் சூரியன் மெல்ல மறைந்துக்கொண்டிருந்தது.
காற்றில் தூசி, நகரத்தின் சத்தங்கள் மந்தமாக மாறின.
சிறிய வீட்டின் அவள் அடுக்களையில் மீனா வைத்த சமையல் இன்னும் புகை விடவில்லை.
அவள் மகன் அர்ஜுன் படிப்பது போல நோட்டுப் புத்தகத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் கதவில் —
தட்… தட்… தட்!
கதவு மூன்று முறை கடுமையாக தட்டப்பட்டது.

ராகவ், மீனாவின் கணவன், அந்த ஒலியைக் கேட்டு பயந்து நின்றான்.அவனது கைகள் சிறிது நடுங்கின.
“திறக்காதே… யாரும் இல்லைன்னு சொல்லு,” அவனது குரல் தளர்ந்தது.

ஆனால் மீனா மெல்ல கதவுக்குச் சென்றுவிட்டாள்.
கதவு திறந்ததும், வெளிச்சத்தில் நின்ற உயரமான மனிதனை அவள் பார்த்தாள். (அப்பொழுது தெரியாது அவன் குழந்தை சும்மக்க நேரும் என்று )
கருப்பு சட்டையும் ஜீன்சும், கண்ணில் ஒரு விதமான குளிர்ந்த அமைதி. அவனது பெயர் பீட்டர்.
அவனும் அவளை பாத்துதான் அவனுக்கு அவள் அழகை கண்டு பிடித்துவிட்டது
“ராகவ்,” அவன் அமைதியாக சொன்னான், “பாஸ் அனுப்பினார். கடன் திருப்பி கொடுக்கும் நேரம் கடந்து போயிடுச்சு.”

ராகவ் தள்ளாடினான். “சார்… கொஞ்சம் நேரம் வேண்டும். வியாபாரம் இப்ப சரியில்லை…”

பீட்டர் அவனைக் நோக்கி சிரிக்காமல் நின்றான். பின் மெதுவாக உள்ளே நடந்தான்.
அவனது பாதநாதம் வீடு முழுக்க ஒலித்தது.
மீனா அமைதியாக நின்றாள், அர்ஜுனின் கையை பிடித்தபடி.
அவனது கண்கள் அவளை சில விநாடிகள் பார்த்தன—
பயமில்லை, ஆசையில்லை— ஆனால் ஒரு அர்த்தமில்லா மென்மை.

“வியாபாரம் சரியில்லைன்னா சரி,” பீட்டர் சொன்னான். “ஆனா உனக்கு குடுத்த நேரம் முடிஞ்சுடுது.”

அந்த நேரம் அர்ஜுன் திடீரென முன்னே வந்தான்.
“என் அப்பாவிடம் சத்தம் போடாதே!” என்று கத்தினான்.

அவனது தைரியத்தைக் கண்டு பீட்டர் சிறிது சிரித்தான்.
முட்டிகால் போட்டு அவனது நிலைக்கு வந்தான்.
“நான் சத்தம் போடல, குட்டி குஞ்சான் ” என்றான். “என் வேலைய தான் பண்ணுறேன்.”

மீனா குழம்பி அர்ஜுனை பின்வாங்கச் செய்தாள். “அர்ஜுன், உள்ள போ.”

பீட்டர் அமைதியாக அவளை நோக்கி,
“இந்த பையனில் தைரியம் இருக்குது. அந்த தைரியத்தை அழிக்காதீங்க. உலகம் தைரியமானவங்க தான் மதிக்கும் ,” என்றான்.

அவனது வார்த்தைகள் மீனாவின் மனத்தில் ஒட்டிக் கொண்டது.

அந்த இரவு பீட்டர் வெளியே போன பின், ராகவ் தன் அறைக்குள் பூட்டிக்கொண்டான்.
மீனாவால் தூங்க முடியவில்லை. பீட்டரின் பார்வை, அந்த நிசப்தமான குரல், அவளின் இதயத்தில் ஓசையாய் இருந்தது.
அவள் அணைத்துக்கொண்டது அர்ஜுனை அல்ல, தனிமையைத்தான்


அந்த இரவு மழை பெய்தது.
வீட்டின் மேல்கூரை வழியாக துளிகள் சிந்தின.
மீனா அவளது பையன் அர்ஜுனை படுக்கவைத்து, தண்ணீர் குடிக்கச் சென்றாள்.
அவளுக்கு தெரியவில்லை — அந்த வீட்டில் இன்னும் ஒருவரின் மனம் மழை போலக் கொட்டிக் கொண்டிருந்தது.

ராகவ். அவன் டேபிளில் ஒரு காகிதத்தை வைத்திருந்தான். கை நடுங்கியது. கண்களில் நீர்.

“மீனா,
நான் தோற்றுட்டேன். பணத்திலும், மனிதத்திலும்.
நீயும் அர்ஜுனும் என்னை மன்னிச்சிருப்பீங்கன்னு நம்புறேன்.
என்னால் இங்க இருக்க முடியாது. நான் போறேன்.
உங்க வாழ்க்கை நான் இல்லாமல் நிச்சயமாக நல்லா இருக்கும்.
– ராகவ்.”

அவன் கடிதத்தை மடித்தான். கதவை திறந்து வெளியே சென்றான்.
மழை அவனை நனைத்தது, ஆனால் அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்த நாள் காலை.
மீனா எழுந்து சமையல் செய்யச் சென்றபோது மேசையில் அந்த கடிதம் இருந்தது.
அவளது கைகள் நடுங்கின. வாசித்ததும், அவள் அமர்ந்தே போனாள்.

அம்மா… அப்பா எங்கே?
அர்ஜுனின் மெதுவான குரல் அவளது இதயத்தை நெரித்தது.

அவள் தைரியமாகக் கூற முயன்றாள். “அப்பா வேலைக்குப் போயிருப்பார்…”
ஆனால் அவளது குரல் முறிந்தது. கண்களில் கண்ணீர் வழிந்தது.

அர்ஜுன் அவளது மடியில் வந்து அமர்ந்தான்.
“அவர் திரும்ப வருவாரா?” என்று கேட்டான்.
மீனா பதில் சொல்ல முடியவில்லை. அவளது நெஞ்சில் ஒரு வெற்றிடம்.

மாலை நேரம்.
மழை நின்றது.
அவள் கதவை திறந்து வெளியே பார்த்தாள் —
அங்கொரு பைக்கின் சத்தம்.

கருப்பு சட்டை, கருப்பு ஜீன்ஸ்.
அவள் பயந்து நின்றாள்.
அவன் மெதுவாக வந்து கதவின் முன் நின்றான்.

“ராகவ் எங்கே?” என்று கேட்டான் பீட்டர்.

மீனாவின் கண்கள் சிவந்து போனது. அவள் பதிலளிக்க முடியவில்லை.
அவனது பார்வை மென்மையாக மாறியது.
குறுகிய அமைதிக்குப் பிறகு, அவன் சொன்னான் —

அவன் ஓடி போயிட்டான்… இல்லையா?

அவள் தலைகுனிந்தாள்.
அந்த மௌனத்தில் பீட்டர் ஒரு மூச்சு விட்டான்.
“நீ பையனும் கவலையா இருங்காதீங்க. யாரும் உங்க வீட்டை தொடமாட்டாங்க.”

அவள் அந்தக் கணத்தில் உணர்ந்தாள் —
ஒரு ரவுடி அவளுக்குக் காவலராக மாறிக் கொண்டிருந்தான்.

மாலை வானம் சாம்பல் நிறமாக, மழை வாசம் நிறைந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.
மீனா வீட்டின் வாசலில் நின்று சிந்தித்தாள் — இப்போ நான் என்ன பண்ணுறது ?
ராகவ் விட்டுச் சென்ற கடிதம் இன்னும் மேசையில் கிடந்தது.
அதன் ஒவ்வொரு வரியும் அவளது இதயத்தில் கத்தியாகப் பாய்ந்தது.

அந்த நேரம் கதவின் அருகே ஒரு நிழல் நின்றது.
அவள் திரும்பி பார்த்தாள் — அது பீட்டர்.
அவனது முகத்தில் வழக்கமான கடினம் இல்லை; கவலையுடன் வந்திருந்தான்.

இங்க நீங்க இன்னும் இருப்பீங்கள்னு நினச்சேன் என்றான் அவன் மெதுவாக.
“இந்த வீடு உங்களுக்குப் பாதுகாப்பு இல்ல, மீனா. ராகவ் கடன் வாங்கியவங்க இன்னும் நிறைய பேறு வருவாங்க. உங்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லை

மீனா சோர்வாகப் பேசினாள்.
எங்க போறது பீட்டர்? இதுவே என் வீடு... எனக்கு இங்க வேற யாரும் இல்ல.

அவன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான். பின்னர் சொன்னான்,
என்னோட கூட வாருங்க. நான் இருக்கும் இடம் பெரியதா இல்ல, ஆனா நிம்மதியா இருக்கலாம் .

மீனா உடனே தலை ஆட்டினாள்.
இல்ல பீட்டர்… நான் ஒரு பெண். மக்கள் என்ன சொல்லுவாங்க? என் கணவன் திரும்பி வந்தா?

பீட்டர் மெதுவாகப் பேசினான்
“ஒருவன் ஒருவரை உண்மையா நேசிச்சா, அவங்க விட்டு போவான் ஆஹ் ?. நீங்க இன்னும் அவனுக்காக காத்திருக்கிறீங்க, ஆனா அவன் ஏற்கனவே உங்களை விட்டு ஓடிட்டான்.”

அவள் கண்ணீர் விட்டாள். என்ன செய்றது தெரிவில்லை
அவள் பின் பார்த்தாள் — வெறும் சுவர்கள், குளிர்ந்த அடுப்பு, தன் குழந்தை கண்ணில் பதிந்த பயம்.
அவளது குரல் நடுங்கியது.

சரி… நாங்க உங்க கூட வர்றோம், என்றாள் மெதுவாக.

அடுத்த நாள் காலை.
பீட்டரின் பழைய பைக் வீட்டின் முன் நின்றது.
அவன் சொன்னான், “பயப்படாதீங்க. எல்லாம் நன்றாக ஆகும்.”
மீனா சிறிய பையை எடுத்தாள். அர்ஜுன் அதில் தன் புத்தகங்களையும் ஒரு விளையாட்டுக் காரையும் வைத்தான்.

பைக் நகரத்தின் எல்லையை விட்டு மெதுவாகச் சென்றது.
சாலைகள் குறைந்து, மண் பாதைகள் தொடங்கின.
அவர்கள் சென்றது ஒரு பழைய குடிசைப்பகுதி — சின்ன சின்ன வீடுகள், தகரை கூரைகள், குழந்தைகள் விளையாடும் குரல்கள்.

பீட்டர் பைக்கை நிறுத்தினான்.
“இதுதான் என் வீடு,” என்றான்.

மீனா அவனுடன் உள்ளே சென்றாள்.
அவள் நின்றது —
வீடு சுத்தமில்லாது இருந்தது.
மூலையில் காலியான பீர் பாட்டில்கள், தரையில் சிகரெட் சாம்பல், பிளாஸ்டிக் பைகளில் மூடிய உணவு, சுவர்களில் நடிகைகள் பழைய போஸ்டர்கள்.
அவள் மூச்சை இழுத்துக் கொண்டாள்; மனம் கலங்கியது.

அவளது முகத்தைப் பார்த்த பீட்டர் சிறிது நாணத்துடன் சிரித்தான்.
ஆம்… சுத்தம் பண்ணணும் எனக்கே தெரியும். இதுவரை யாரும் என் வீட்டை வீடா பார்க்கல.
பெண் இல்லாத வீடு அப்படித்தான் இருக்கும்

அவள் மெதுவாகச் சொன்னாள், “பரவாயில்லை… நம்ம சேர்ந்து சுத்தம் பண்ணலாம்.

மதிய சூரியன் குடிசையின் சாளர வழியாக உள்ளே விழுந்து, தூசி துகள்களை ஒளிரச் செய்தது.
மீனா தன் சேலை நன்றாக கட்டிக்கொண்டு, ஒரு பழைய துணியை எடுத்துக்கொண்டு சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
பீட்டர் பக்கத்தில் நின்று, அவளை அமைதியாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணுறீங்க, ஆளுங்கள சொன்ன அவங்க செய்வாங்க என்றான் அவன்.
அவள் சிரித்தாள். “இது இப்போ நம்ம வீடு, இல்லையா? நாம் தான் சுத்தமா செய்யணும் .”

அவள் தாழ்ந்த இடத்தில் குனிந்து பீர் பாட்டில்களை எடுத்தாள், பழைய பிளாஸ்டிக் பைகளை குப்பை பையில் போட்டாள்.
அந்த நேரம் அவள் கையில் ஒரு சாம்பல் நிற சட்டை மாட்டிக்கொண்டது.
அதை எடுத்தபோது — அதனுடன் பீட்டரின் ஜட்டியும் இருந்தது.

அவள் திடீரென நின்றாள். முகம் சிவந்தது.
அவள் அதை விரைவாக ஒரு பெட்டிக்குள் வைத்தாள், கண்களில் ஒரு சிறிய வெட்கம் மின்னியது.

பீட்டர் அதை கவனித்தான்.
அவன் மெதுவாக சிரித்தான் — ஒரு சின்ன சிரிப்பு,

“ஐயே அதையே ... அப்படியே வச்சிடுங்க,” என்றான் அவன் மெதுவாக.
அவள் தலை குனிந்தபடியே, “எல்லாம் சுத்தமா பண்ணிடுறேன்,” என்றாள்.

அவளது முடி வியர்வையால் முகத்தில் ஒட்டிக்கொண்டது.
அவன் பார்வை சில நொடிகள் அவளைப் பார்த்தபடி நின்றது.
அந்த சாதாரணப் பெண்ணின் சிரிப்பிலும், அவள் செய்வதிலும்கூட ஒரு அழகான அமைதி இருந்தது.

அவள் திரும்பி பார்த்தபோது, அவனது பார்வையைப் பார்த்தாள் —
ஒரு நொடி இருவருக்கும் மௌனம்.
அதில் சொல்லாத உணர்வுகள் நிறைந்திருந்தது.

மீனா அவசரமாக தன் முடியைச் சரிசெய்து, பக்கத்தில் சென்று சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
பீட்டர் பக்கத்தில் நின்று மெதுவாகச் சொன்னான்,
இப்போ இங்க எல்லாம் சுத்தமா இருக்கும்… ஆனா நீங்க வந்ததால தான் இந்த வீடு இப்படி சுத்தமா இருக்குது.

இரவு மழை துளிகள் குடிசை கூரையில் தட்டித் தட்டிப் விழுந்துக்கொண்டிருந்தது.
பீட்டர் கதவைத் தட்டியவுடன், மீனா உடனே திறந்தாள்.
அவன் கையில் ஒரு பிளாஸ்டிக் பை — அதில் ஹோட்டல் சாப்பாடு.

இந்த சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் என்றான் பீட்டர்.
அவனது குரலில் ஒரு பராமரிப்பு,

அவன் வந்து சட்டை கழட்டி லுங்கி மாத்தினான்

மீனா சிறிது சிரித்தாள்.

அவர்கள் மூவரும் தரையில் அமர்ந்தனர்.
மீனா பாக்ஸை திறந்து, சாப்பாடு பகிர்ந்தான்.
அவள் சாமானியமாக அவனைப் பார்த்தாள் — அவன் எளிமையான மனிதன், ஆனால் ஒவ்வொரு செயலும் அன்பாக இருந்தது.

சில நிமிடங்கள் அமைதியாக சாப்பிட்டனர்.
அதன் பிறகு மீனா மெதுவாகக் கேட்டாள்,
பீட்டர்… உங்க வீட்டுல அடுப்பு, சிலிண்டர் எதுவும் இல்லையா? ஏன் ?

அவன் தலையசைத்தான்.
இல்ல. நான் இதுவரைக்கும் வீட்டுல சமைக்கவே இல்ல. எப்போதும் ஹோட்டலில்தான் சாப்பிடுவேன்.

மீனா சில நொடிகள் யோசித்து, மெதுவாகப் பேசினாள்.
நாளைக்கு நாம மார்க்கெட்டுக்கு போகலாமா?
ஒரு அடுப்பு, சிலிண்டர் வாங்கிக்கணும்.

பீட்டர் அவளை நோக்கி சிரித்தான்.
ரி, நாளைக்கு போலாம். நீங்க சொல்லினா போதும்.

அவள் சிரித்தாள் — அந்த சிரிப்பில் ஒரு நம்பிக்கை இருந்தது.

இதுவரை அந்த குடிசை இன்னும் சிதைந்த இடம்தான், ஆனால் அவன் மனதில் முதல் முறையாக ஒரு வீடு என்ற உணர்வு வந்தது.

அர்ஜுன் சாப்பிட்டு முடித்து சின்ன சிரிப்புடன் சொன்னான்,
“அம்மா, இங்க ரொம்ப சும்மா இருக்கு. மழை சத்தம் நல்லா இருக்கு.”
அவன் தாயின் மடியில் சாய்ந்தான்.

பீட்டர் அந்த காட்சியைப் பார்த்தபடி மெதுவாகச் சொன்னான்,
“இப்போ நீங்க பயப்பட வேண்டாம், மீனா. நாளை முதல் நம்ம வாழ்க்கை கொஞ்சம் மாறும்.”

மீனா அந்த வார்த்தையை கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
மழை வெளியில் விழ, அந்த சிறிய குடிசையின் உள்ளே ஒரு புதிய உறவு அமைதியாக உருவாகிக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை.
பீட்டர் வெளியே புகை புடித்து கொண்டு இருந்தான் .
மீனா மெதுவாக வந்து, இன்று மார்க்கெட்டுக்கு போகலாமா? அடுப்பு, சிலிண்டர் வாங்கணும்,” என்றாள்.

பீட்டர் தலை தூக்காமல் சொன்னான்,
சரி, ரெடியா இரு. அரை மணி நேரத்துல கிளம்பலாம.

அவள் தலை அசைத்தாள்.

சில நேரத்துக்குப் பிறகு, இருவரும் பைக்கில் புறப்பட்டார்கள்.
பீட்டர் வழியிலே எதுவும் பேசவில்லை.

மார்க்கெட்டில் மீனா பொருட்களை தேர்வு செய்தாள்.
இது சரியா இருக்கும்?” என்று அவள் கேட்டால், அவன் எனக்கு இதை பத்தி ஒரு மயிரும் தெரியாது உனக்கு என்ன தோணுதோ அதை வாங்கிக்கோ என்றே சொன்னான்.

அவள் ஒரு நிமிடம் அவனைப் பார்த்தாள்

அவர்கள் அடுப்பு, சிலிண்டர், சில சமையல் பொருட்கள் வாங்கி, அவன் சலித்து கொன்டே எல்லாவற்றையும் தோளில் தூக்கிக் கொண்டான்.

அதை பார்த்த அவள் இதெல்லாம் நாம வீட்டுக்காக, என்றாள்.

அவன் அவளைப் பார்த்தான், வீடு ஒன்னு இருந்தா சமைக்கணும். அதானே ”

அவள் சிரிக்கப் போய்த் தடுத்துக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும், அவள் அனைத்தையும் ஒழுங்காக வைத்தாள்.
பீட்டர் ஓரமாக நின்று, அவள் பொருட்களை ஒழுங்குபடுத்துவது பார்த்தான்

சிறிது நேரம் கழித்து ...அவன் வெளியே புறப்பட்டான்

மாலையில் பீட்டர் வீட்டை விட்டுப் போனான்.
அவன் எங்கே போனான், என்ன செய்கிறான் என்று மீனாவுக்கு தெரியவில்லை.
அவள் சமையலறையில் அடுப்பை ஏற்றி, அர்ஜுனுடன் அமைதியாக உணவு உண்டாள்.
வீட்டில் ஒரே அமைதி

இரவு தாண்டி, கடிகாரம் பதினொன்று அடித்தது.
அப்போது கதவுக்குப் புறம் ஒரு சத்தம்
மீனா… கதவு திற! என்று ஒரு வெளி குரல்.

அவள் கதவைத் திறந்தாள்.
பீட்டர் — மயக்கத்தில் — கையில் சிகரெட் வாசனை, கூட ஒருவன்.
அவனது நண்பன் தான் பேசினான்,
அக்கா… அண்ணன் செம போதை அருச்சு … கவனிங்க…

மீனா ஒரு நிமிடம் நின்றாள்.
அவன் மயக்கத்துடன் சிரித்தான் — வீடு வந்தாச்சு… என்று சொல்லி தடுமாறினான்.

அவன் கூட இருக்கும் ஷங்கரிடம் டேய் இவ தான் டா எங்கயோ இருந்து வந்து என் வீட்டை வீடு அக்குண

அவள் மூச்சு விட்டாள்.
“சரி, அவரை உள்ளே வைங்க,” என்றாள்.
அவனது நண்பன் பீட்டரை உட்கார வைத்துப் போனான்.

மீனா அவனை மெதுவாகப் பிடித்து எழுப்பினாள்.
அவன் சாய்ந்து, அவளது தோளில் தலையைக் வைத்து மயக்கமாகக் கூறினான்,
நீ ஏன் இங்க இருக்கே… எதுக்கு இதெல்லம் பண்ற

அவள் எதுவும் சொல்லவில்லை.
அவனை பிடித்து படுக்கையில் அமர வைத்தாள்.
அவன் முழுக்க வியர்வை, புகை, மற்றும் மது வாசனையால் நிறைந்திருந்தான்.

அவள் அவனது காலணியை அகற்றினாள், தலைக்கு ஒரு துணியால் தண்ணீர் தட்டினாள்.
அவன் மெல்ல தூங்க ஆரம்பித்தான்.


மீனா மெதுவாக விளக்கை அணைத்தாள்.
அவளது கண்களில் சிறிய கவலை —
“இவனிடம் என் வாழ்க்கை எங்கே போகும்?” என்ற கேள்வி மட்டும் நிழலாகி இருந்தது.

பீட்டர் மயக்கத்தில் படுத்திருந்தான்.
அவனது முகம் சோர்வாக, கண்கள் பாதி திறந்தவாறு.
மீனா அவனைக் கண்டு ஒரு நொடிக்கு தயங்கினாள்
பின் அடுப்பில் வைத்திருந்த சோறு மற்றும் மீன் குழம்பை எடுத்து வந்தாள்.

பீட்டர்… சாப்பிடணும், என்றாள் மெதுவாக.

அவன் சிரித்தான், நான் சாப்பிட மாட்டேன்… என்று சொன்னான்.
ஆனால் அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள்,
கொஞ்சம் சாப்பிடு… வயிற்றில் ஒன்றும் இல்லாம தூங்கக்கூடாது.

அவள் ஒரு சிறிய கிண்ணத்தில் மீன் வைத்து, அவனைக்கு ஊட்டி வைத்தாள்.
அவன் மெதுவாக ஒரு துண்டை தின்றான்.

ஏன் மீன்? அவன் மயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறிது சிரித்தாள் வீட்டில முதல் முறை சமைக்குறது மீன் தான் சமைக்கணும் … அது நல்ல சகுனம்…குடும்பம் நல்ல இருக்கும்

அவன் அவளை பார்த்தான்.
அவளது கண்களில் இருந்த நெகிழ்ச்சி அவனைக் குழப்பியது.

மீனா அவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு முடித்தாள்.

அவன் மெதுவாக அவளது இடுப்பைச் கிள்ளி

ஏண்டி நீ இதெல்லாம் செய்றே?என்றான் நகைச்சுவை கலந்த குரலில்.

மீனா திடுக்கிட்டாள் — முகத்தில் வெக்கம் சிவப்பு பரவியது.
அவள் கண்ணைத் தாழ்த்தி, மெதுவாக “ஏன் எனக்கே தெரியல…” என்று மனதுக்குள் நினைத்தாள்.

அவள் சொற்களைத் தவிர்த்தாள், அவனது கிண்ணத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றாள்.
பீட்டர் அவளது பின்னால் பார்த்தான் —

அவன் கைகளில் சாப்பாட்டு தடங்கள் இருந்ததால், அவள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அவனது கைகளை கழுவினாள்.

அவன் மயக்கமாக படுத்தான், அவளும் விளக்கை அணைத்து, தரையில் படுத்துக் கொண்டாள்.
அர்ஜுன் கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில்

வெளியில் மெல்லிய காற்று வீசுகிறது. பீட்டரின் சுவாசம் துரிதமாய் கேட்டது
மதுவின் வாசனை இருந்தாலும், அந்த சுவாசத்தில் ஒரு அமைதி இருந்தது.

தூக்கத்தின் மயக்கத்தில், அவன் மெதுவாக அவளருகே நெருங்கினான்.
மீனா கண்களைத் திறந்து பார்த்தாள் . அவன் குழந்தை போல அவளது தோளில் முகம் வைத்து அமைதியாக உறங்க ஆரம்பித்தான்.

அவள் இடுப்பு மேல் கை வைத்து அழுத்தி அவன் முகத்தை அவள் கழுத்து வைத்து கட்டி புடித்து தூங்க
அவளுக்கு ஒரு நொடி தயக்கம்.
ஆனால் பின் அவன் முகத்தை பார்த்தபோது, அந்தக் கடினமான மனிதன் எவ்வளவு சோர்வாகத் தெரிந்தான்.
அவன் வலிமை கண்டு வியந்தாள்

அவள் மெதுவாக மூச்சு விட்டாள்.
அவளது அமைதி அவளுக்கே கேள்வியாக இருந்தது.

[Image: images-5.jpg]
[+] 1 user Likes sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் வாழ்கையில் மீண்டும் ஒரு காதல் - by sreejachandranhot - 29-10-2025, 04:45 PM



Users browsing this thread: 1 Guest(s)