12-10-2025, 11:13 PM
டேய் எவ்ளோ முறைடா உனக்கு போன் அடிக்கிறது
போன் சுவிச் ஆப் பண்ணிட்டு என்ன பண்ணிட்டு இருந்த என்று அம்மா போன் எடுத்தவுடன் ஹலோ கூட சொல்லாமல் கடகடவென்று திட்ட ஆரம்பித்தாள்
அம்மா நான் போன் ஆப் பண்ணி வைக்கல இங்க சிக்னல் என்று சொல்ல போனேன்
ஆனால் அம்மா என்னை பேசவே விடல
சாவுக்கு போய் 2 நாள் ஆகுது
அங்க போய் ஒரு போன் கூட பண்ணலேன்னா நான் என்ன நினைக்கிறது
உன் குரல் கேக்குற வரை எப்படி பதறி போய் இருந்தேன் தெரியுமா
உன்ன பார்க்காம நான் சரியா கூட சாப்பிடல என்று சொல்லி அம்மா அழ ஆரம்பித்தாள்
அட அம்மா என்னை திட்டவில்லை
என் மேல் உள்ள அளவிட முடியாத அன்பை தான் அப்படி வெளி படுத்தி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன்
அம்மா அம்மா அழாத வந்துட்டே இருக்கேன்
இன்னும் 1 மணி நேரத்துல நான் வீட்ல இருப்பேன் என்று சொல்லி போன் வைத்தேன்
டேய் சீக்கிரம் போடா என்றேன் தங்க பாண்டியிடம்
தங்க பாண்டி பைக்கை பறக்க விட்டான்
சொன்னது போலவே சரியாக 1 மணி நேரத்தில் நான் எங்கள் வீட்டில் இருந்தேன்
என்னை பார்த்ததும் அம்மா ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டாள்
என் ரெண்டு கன்னத்திலும் மாத்தி மாத்தி முத்தம் கொடுத்தாள்
அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது
அது என்னை பிரிந்ததால் வந்த கண்ணீரா அல்லது என்னை மீண்டும் பார்த்தால் வந்த ஆனந்த கண்ணீரா என்று கண்டு பிடிக்க முடியவில்லை
ஆனால் அந்த இரண்டு கண்ணீரும் கலந்து தான் அவள் கண்களில் இருந்து வெளியே வந்து அவள் தூய்மையான தாய் பாசத்தை வெளிக்காட்டியது
கொஞ்சம் நேரம் என் தோளில் சாய்ந்து அழுது ஓய்ந்தவள் பிறகு கேஷுவலாக என்னை விட்டு பிரிந்தாள்
அப்போது தான் தங்க பாண்டியும் என்னுடன் வந்ததை கவனித்தாள்
அட தங்க பாண்டி வாப்பா காப்பி தண்ணி குடிக்கிறியா என்று அவனை
பார்த்து கேட்டாள்
"காப்பி தண்ணி"
அங்கே கூமாப்பட்டியில் அந்த விதவை யூஸ் பண்ண அதே வார்த்தை
என் அம்மா வாயில் இருந்தும் அதே வார்த்தை வந்தது கேட்டு நான் அதிர்ந்தேன்
தொடரும் 5

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)