Fantasy காசேதான் கடவுளடா
#43
பகுதி 7
 
வேணிக்கு அன்றுதான் 18 வயது நிறைவடைந்தது. அவளின் தந்தை ஆண் குழந்தை வேண்டும் என்று நினைக்க கடவுளோ அவருக்கு பெண் பிள்ளையை கொடுக்க, அதுவே அவருக்கு அந்த குழந்தையின் மீது ஒரு வெறுப்பு வந்தது. அவளின் அம்மா அடுத்த 5 வருடத்தில் இறக்க, இதற்கும் வேணிதான் காரணம் என்று நினைத்த தந்தை அவளை இன்னும் வெறுத்தார்.
 
அவர் மனைவியை நேசித்த அவரால், அவரின் மனைவியின் மறு உருவகமாக இருந்த வேணியை நேசிக்க தெரியவில்லை. வேணி அவளின் பாட்டி வீட்டில் நின்று வளர ஆரம்பித்தாள். 14 வயதில் பருவ வயதை அடைந்த மறுதினமே அவளுக்கு மாப்பிளை பார்க்க போகிறேன் என்று கூற, அவளின் பாட்டி சட்டம் என்று காரணம் காட்டி அதை தடுத்தார். அதற்காக காத்திருந்த அவளின் தந்தை 18 வயது முடிந்த மாரு நாளே வேணிக்கு மாப்பிளை பார்த்து அடுத்த முகுர்த்தத்தில் திருமணத்தை முடித்தார். இந்த முறை வேணியின் பாட்டியினால் கூட அதை தடுக்க முடியவில்லை.
 
மாப்பிளை அரவிந்தன் நன்றாக படித்து அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். ஆனால் அவருக்கும் வேணிக்கும் 15 வயது வித்தியாசம் இருந்தது. அந்த கிராமத்தில் அப்போது பெண்களை கட்டிக்கொடுத்தால் போதும் என்ற கால கட்டம். திருமணம் முடிந்து முதல் இரவு அன்று அவள் பயந்து கொண்டே அறைக்குள் செல்ல, அங்கு மாப்பிளை அரவிந்தன் கம்பீரமாக கட்டிலில் உட்கார்ந்து இருந்தான். வேணி தயங்கியபடியே அறைக்குள் வந்தவள் பால் செம்பை வைத்துவிட்டு அவனின் காலில் விழப்போக, அதை தடுத்து அவளை அவன் அருகில் அமர வைத்தான். பின்னர் அவள் பயந்து போயிருக்கிறாள் என்று உணர்ந்த அரவிந்தன் மெதுவாக அவளிடம் பேசுச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
 
அரவிந்தன்: உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?
 
வேணி: தெரியலைங்க
 
அரவிந்தன்: தெரியலையா. என்ன பிடிச்சிருக்கா.
 
வேணி: பிடிச்சிருக்கு, ஆனா பயமா இருக்கு.
 
அரவிந்தன்: வேணி, என்னக்கு உன்னை பிடிச்சிருந்தது. நான் உன்னை உங்க பாட்டி வீட்டில் வச்சுதான் முதல் தடை பார்த்தேன். ஆனா உங்கிட்ட பேச எனக்கு தைரியம் இல்லை, காரணம் நம்மளோட வயசு வித்தியாசம். ஆனா உங்க அப்பா உனக்கு மாப்பிளை தேடிகிட்டு இருந்தார், அப்போ என் ஜாதகத்தை ஒரு ஜோசியர் மூலம் அவருக்கு கொடுக்க, என் வேலை அவருக்கு பிடிச்சு போக, நம்ம கல்யாணம் இனிதே முடிந்தது.'
 
வேணி: அப்போ என்னை படிக்க வைப்பீங்களா.
 
அரவிந்தன்: உனக்கு என்ன படிக்கணும்.
 
வேணி: எனக்கு ஆசிரியை ஆகுற அளவுக்கு படிக்கணும்.
 
அரவிந்தன்: அவ்ளோதானே. படிக்க வச்சிரலாம்.
 
என்று சொல்லிய அரவிந்தன், அவளை கட்டிப்பிடிக்க, இப்போது அவளுக்கு மீண்டும் பயம் தொற்றி கொண்டது. அதனை அறிந்த அரவிந்தன்.
 
அரவிந்தன்: வேணி, இன்னைக்கு நாம தூங்குவோம். நமக்குள்ள இது எல்லாம் உனக்கு என் மீது முழு விருப்பம் வந்த பிறகு பார்த்து கொள்ளலாம்.
 
என்று கூறியவன் கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்து கொண்டான். வேணி இன்னொரு ஓரத்தில் படுத்து இருந்தாலும், புது இடம் என்பதால் வேணி இரவு வெகு நேரம் கழித்தே தூங்கினாள். அடுத்த நாள் வேணியை அழைத்து சென்று அவளின் பாட்டி வீட்டிற்கு சென்று அவளின் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு அவன் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள கல்லூரியில் BSc கணிதம் டிபார்ட்மெண்டில் சேர்த்து விட்டான். அப்படியே அடுத்த 3 மாதத்தில் இருவரும் ஒரு நல்ல பிடிப்புக்குள் வர, அந்த மழை இரவில் இருவரும் ஒன்றும் கூடி விட்டனர். அதன் பலனாக அடுத்த 9-வது மாதத்தில் பிறந்தாள் கயல்விழி.
 
பிறந்தது பெண் குழந்தை என்று தன் தந்தையை போல ஒதுக்கி விடுவாரோ என்ற பயம் வேணிக்கு எழுந்தாலும், அரவிந்தன் கயல் மீது கொண்ட பாசம் அவளை நெகிழ வைத்தது. ஒரு கணம் தனக்கு இப்படி ஒரு  தந்தை கிடைக்கவில்லை என்று கூட ஏங்கினாள் வேணி. காலங்கள் கடந்தது. அடுத்த 5 வருடத்தில் MSc முடித்ததும் அருகில் இருந்த ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாள் கயல். அவளின் தந்தை மட்டும் பாட்டி இருவரும் 2 மாத இடைவெளியில் இயற்கை எய்திட கொஞ்சம் கலங்கி போனாள் வேணி. ஆனால் கணவனின் வழிகாட்டுதல் பெயரின் PhD முடிக்க அவளின் வேலை அதே கல்லூரியில் நிரந்தரம் ஆனது.
 
அவர்களின் வாக்கை நன்றாக போய் கொண்டிருந்த நேரம். கயல்விழி பள்ளிப்படிப்பை முடித்து சென்னையின் மிக பெரிய கல்லூரியில் மருத்துவம் படிக்க. அவளின் 3-வது ஆண்டில் அரவிந்தன் மாரடைப்பில் இறந்து போக, அவர்கள் வாழ்வில் குடி கொண்டிருந்த சந்தோசம் தொலைய ஆரம்பித்தது. அடுத்த 6 மாதத்தில் வேணி மற்றும் கயல் இருவர் வாழ்க்கையும் இரு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
[+] 4 users Like itsmegirl1315's post
Like Reply


Messages In This Thread
RE: காசேதான் கடவுளடா - by itsmegirl1315 - 10-10-2025, 01:52 AM



Users browsing this thread: 1 Guest(s)