Adultery இச்சை மனது..!!
அடுத்த மாதத்தில் ஒரு பண்டிகை வந்தது. 

“இந்த நோம்பிக்கு என்ன செய்யப் போற நீ?” என்று ஷிவானியைக் கேட்டான் வினோத். 

“அம்மா அப்பாவோட ஊருக்குப் போலாம்னு பிளான். எங்க சொந்த ஊருக்கு” என்றாள். 

“எங்க இருக்கு?”

“திருநெல்வேலி பக்கம். கிராமம். போயே ரொம்ப நாள் ஆச்சு. ஆமா நீங்க என்ன செய்யப் போறீங்க?”

“நீயும் ஊருக்கு போறே. அப்பறம் நான் எப்படி இருக்கறது? நானும் ஊருக்குப் போய்ட்டு வர வேண்டியதுதான்”

“எத்தனை நாள் ஆகும்?”

“ரெண்டு நாள்ள வந்துருவேன்”

“நாங்களும்தான்” என்று சிரித்தாள். 

“ட்ரஸ் எடுப்பியா?”

“கண்டிப்பா. ட்ரஸ் எடுப்பேன்”

“நான் ஒண்ணு எடுத்து தரட்டுமா?”

“எனக்கா?”

“ஆமா..”

“சரி..” என்றாள் உடனே மலர்ந்து. 

“நான் பணம் குடுத்துர்றேன். நீ செலக்ட் பண்ணிக்கறியா? எனக்கு அதுல அனுபவம் இல்ல”

“ஓகே” எனச் சிரித்தாள்.

அடுத்த நாளே அவளை துணிக் கடைக்கு அழைத்துப் போனான். 

அவள் ஒரு மணிக்கும் மேலாகத் தேடித் தேடி கலைத்துப் பார்த்து இளஞ் சிவப்பில் ஒன்றும் கத்தரிப் பூக் கலரில் ஒன்றுமாக சுடிதார்கள் எடுத்துக் கொண்டாள். 

அவளது செலக்ஷனில் தனக்கும் ஒரு பேண்ட் சர்ட் எடுத்துக் கொண்டான் வினோத்.. !!

“இந்த நோம்பிக்கு ஊருக்கு போறியா நீ?” என்று இரவு சிகரெட் வாங்கப் போனபோது கேட்டாள் ஜோதிலட்சுமி.

இந்த ஒரு மாதமாக அவள் அவனிடம் வேறெந்த தொந்தரவும் செய்யவில்லை. பழைய மாதிரி இயல்பாகத்தான் பழகினாள்.  

அது அவனுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது.

“ஆமாங்க. நாலஞ்சு மாசம் ஆகிப் போச்சு. ஊருக்கு போயி” என்றான். 

“ஊர்ல எத்தனை நாள் இருப்ப?”

“ரெண்டு நாள்தாங்க. வந்துருவேன்”

“என் மக இங்க வரேன்றுக்கா” என்பதை சற்று மலர்ந்த புன்னகையுடன் சொன்னாள்.

அவனுக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் எழுந்து அடங்கியது.

“குடும்பத்தோடங்களா?” தயங்கிக் கேட்டான். 

“ஆமா. மருமகனும் வரார். எனக்குத்தான் அவங்களை திரும்ப அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிரும்”

“ஏங்க?”

“கொழந்தைக ரெண்டும் செம வாலுங்க. பத்தாதுக்கு மாப்பிள்ளையை வேற நல்லா கவனிக்கணும். ஒதவிக்கு கூட எந்த நாயும் வராது. நீ இருந்தாக் கூட ரொம்ப ஒதவியா இருக்கும். அதுக்காக நான் உன்னை ஊருக்கு போக வேண்டாம்னு சொல்லல. நீ போய்ட்டு வா..” என்றாள்.

அவன் ஊருக்குக் கிளம்பும் முதல் நாள் இரவு கடைக்குப் போனபோது கேட்டாள்.
“எப்ப ஊருக்கு போறே?”

“காலைலங்க..”

“எத்தனை மணிக்கு?”

“காலைல தூங்கி எந்திரிச்சு குளிச்சுட்டு.. எப்படியும் ஒம்பது பத்து மணி ஆகிருங்க”

“அப்ப சரி. போறப்ப என்னை பாத்துட்டு போ”

“ஏங்க?”

“சும்மாதான்டா” என்று கடிந்து கொண்டாள்.

“செரிங்க”

இரவு ஷிவானியுடன் சற்று எல்லை மீறிப் போய் சாட் செய்தான். ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். தூங்குவதற்கு வெகு நேரமாகிப் போனது.

காலை எட்டரை மணிக்கு எழுந்தான் வினோத். 

இரவில் ஷிவானியுடன் சாட் செய்தது சற்று கிளுகிளுப்பாக இருந்தது. அதை நினைக்கும் போதே மனதுக்குள் மெல்லிய உற்சாகம் எழுந்தது. 

அது உடம்பில் பரவசமாக ஓடி ஆண்மைக்குள் மெல்லிய சூட்டைக் கிளப்பியது.

பல் தேய்த்துக் குளித்து உடை மாற்றிக் கொண்டு ஜோதிலட்சுமியைப் பார்க்கப் போனபோது அவள் கடையிலேயே இருந்தாள்.

குளித்திருந்தாள். ஒரு மாதிரியான பிரவுன் நிறத்தில் ரவிக்கை அணிந்து புடவை கட்டியிருந்தாள். நெற்றியில் பொட்டு வைத்திருப்பது அழகாகவே இருந்தது. கண்ணாடி போட்டிருந்தாள்.

“கிளம்பிட்டியா?”

“ஆமாங்க”

“சாப்பிட்டியா?”

“போறப்ப ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்குவங்க”

கல்லாவைத் திறந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக சிலவற்றை எடுத்து எண்ணி அவனிடம் கொடுத்தாள்.
“உங்கம்மா அப்பாவுக்கு என் சார்பா ஏதாவது வாங்கிட்டு போய் குடு”

கொஞ்சம் தடுமாற்றமாகி விட்டான். 
“நான் வாங்கித் தரங்க. வெய்ங்க. என்கிட்டயும் பணமிருக்கு”

“வெய்டா” மிரட்டிக் கொடுத்தாள். 

தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான். 
“தேங்க்ஸ்ங்க”

“நீயும் செலவு பண்ணிட்டு சந்தோசமா இருந்துட்டு வா. தண்ணி கிண்ணி அடிச்சுட்டு அலும்பு பண்ணிராதே.. தெரிஞ்சுது.. தொலைச்சுருவேன்”

“மாட்டங்க”

“சாப்பிட தரட்டுமா? சாப்பிட்டு போறியா?”

“இல்ல.. பரவால்லங்க. நான் போற வழில பாத்துக்கறேன்”

“டீ காபி ஏதாவது?”

“உங்களுக்கு எதுக்குங்க சிரமம்”

“ப்ச்.. என்னடா சிரமம் எனக்கு? வா.. ஏதாவது சாப்பிட்டு போ” என்று அவள் வற்புறுத்தி அழைத்தது எதற்காக என்பது அவனுக்குப் புரிந்தது.

தயங்கினான்.
“இப்ப வேணாங்களே..” என்றான்.

“என்னடா இப்ப வேண்டாம்” மிரட்டினாள்.

“வெறும் காபி டீன்னா பரவால்ல”

லேசாக முறைத்தாள்.
“ஊருக்கு போற இல்லையா?”

“ஆமாங்க..”

“அப்ப.. எனக்கு ஒண்ணும் குடுத்துட்டு போக மாட்டியா?”

அவள் முகத்தைப் பார்த்து மறுக்க முடியாமல் சிரித்தான்.
“என்னங்க வேணும்?”

“முத்தம் வேணும். குடுப்பியா மாட்டியா?” மிரட்டும் தொனியிலேயே கேட்டாள்.

“தரங்க”

சிரித்தாள்.
“வா” 

கடையை விட்டு வெளியேறி வீட்டுக்குள் போனாள்.. !!
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 07-10-2025, 07:30 PM



Users browsing this thread: 1 Guest(s)