03-07-2019, 09:22 AM
தளபதி ரசிகர்களுக்கு ஷங்கரின் ”புது ட்ரீட்” – படத்தின் கதையால் குஷியாக இருக்கும் ரசிகர்கள்
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கர் – விஜய் கூட்டணியில் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
![[Image: bigil.jpg]](https://www.sathiyam.tv/wp-content/uploads/2019/07/bigil.jpg)
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்தப் படம் விஜய்யின் 64-வது படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் சங்கர், முதல்வன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து நடிகர் விஜய்யிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தின் கதை விஜய்க்கு சொல்லப்பட்டதுதான் என்று பல நேர்காணல்களில் இயக்குநர் சங்கர் தெரிவித்திருந்தார்.
முதல்வன் படம் வெளியான சமயத்தில் அரசியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த விஜய் தற்போது அரசியல் பேசும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அதனால் முதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சர்கார் படத்தில் முதல்வர் பொறுப்பை தட்டிக் கழித்த விஜய், முதல்வன் 2-ம் பாகத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.
சங்கர் – விஜய் கூட்டணி இணையுமா? நடிகர் விஜய் முதல்வராக திரையில் தோன்றுவாரா என்ற கேள்விகளுக்கு முதல்வன் 2-ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே விடை சொல்லும்.
first 5 lakhs viewed thread tamil