03-07-2019, 09:15 AM
`இது இருந்தால்தானே அபராதம் விதிப்பீர்கள்' - போலீஸ் எஸ்.ஐ-க்கு `ஷாக்' கொடுத்த கூலித்தொழிலாளி
சென்னையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து இ-சலான் கருவியைப் பறித்துச் சென்றவரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
உடனடியாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் செந்தில்குமாரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில்குமார் குடிபோதையில் இருந்தார். இதனால் செந்தில்குமாரின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். போதை தெளிந்த பிறகு செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலம்பாக்கம், ரோஸ்நகரைச் சேர்ந்தவர் என்றும் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த இ-சலான் கருவியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதனால் செந்தில்குமார் ஆத்திரமடைந்தார். இது இருந்தால்தானே என் மீது அபராதம் விதிப்பீர்கள், இரண்டு வழக்குகள் போடுவீர்கள் என்று கூறியபடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்த இ-சலான் கருவியைப் பறித்தார். அடுத்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் செந்தில்குமார் மீது மூன்று குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர்.
போதையில் இருந்த செந்தில்குமார், நான் யார் தெரியுமா, என்னை ஏன் இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டு போலீஸாரை படாதபாடுபடுத்தியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததை மருத்துவபரிசோதனை மூலம் போலீஸார் உறுதி செய்தனர். போதை தெளிந்த பிறகு செந்தில்குமார், `சார் என்னை மன்னித்துவிடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன்' என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், செந்தில்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சந்திப்பில் மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அந்தப் பைக்கை கனகராஜ் மடக்கினார். அப்போது அந்த நபர் குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனராஜ் விசாரணை நடத்தினார். அப்போது அவரின் பெயர் செந்தில்குமார் (42) என்று தெரியவந்தது. இந்தச் சமயத்தில் செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வைத்திருந்த இ-சலான் கருவியைப் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாகச் சென்றார். இதனால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் செந்தில்குமாரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில்குமார் குடிபோதையில் இருந்தார். இதனால் செந்தில்குமாரின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். போதை தெளிந்த பிறகு செந்தில்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலம்பாக்கம், ரோஸ்நகரைச் சேர்ந்தவர் என்றும் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த இ-சலான் கருவியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமார் மீது ஹெல்மெட் அணியவில்லை என்று கருதிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் அபராதம் விதிக்க இ-சலானில் விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் செந்தில்குமார், குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது என இரண்டு குற்றத்துக்காக அபராதம் விதிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் இ-சலானில் பதிவு செய்துக்கொண்டிருந்தார்.
இதனால் செந்தில்குமார் ஆத்திரமடைந்தார். இது இருந்தால்தானே என் மீது அபராதம் விதிப்பீர்கள், இரண்டு வழக்குகள் போடுவீர்கள் என்று கூறியபடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிடமிருந்த இ-சலான் கருவியைப் பறித்தார். அடுத்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் செந்தில்குமார் மீது மூன்று குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர்.
போதையில் இருந்த செந்தில்குமார், நான் யார் தெரியுமா, என்னை ஏன் இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டு போலீஸாரை படாதபாடுபடுத்தியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததை மருத்துவபரிசோதனை மூலம் போலீஸார் உறுதி செய்தனர். போதை தெளிந்த பிறகு செந்தில்குமார், `சார் என்னை மன்னித்துவிடுங்கள். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன்' என்று போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், செந்தில்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
first 5 lakhs viewed thread tamil