03-07-2019, 09:13 AM
அடுத்துவந்த சகிப் அல் ஹசன், சர்்க்காருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். பாண்டியா பந்துவீச்சில் சர்க்கார் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது வி்க்கெட்டுக்கு களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம்(24), அடுத்துவந்த லி்ட்டன் தாஸ்(24), மொசாடக் ஹூசைன்(3) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தனர்.
விக்கெட்டுகள் சரிந்தாலும் அனுபவ வீரர் சகிப் அல்ஹசன் 58 பந்துகளில் அரைசதம் அடித்து 66 ரன்னில் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார்.
7-வது விக்கெட்டுக்கு சபீர் ரஹ்மானும், சைபுதீனும் ஓரளவுக்கு நிலைத்து ஆடிய ஸ்கோரை உயர்த்தினர். இந்த 66 ரன்கள் சேர்த்துப்பிரிந்தது. சபீர் ரஹ்மான் 31 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த மோர்தசா(8), ருபெல் ஹூசைன்(9), முஸ்தபிசுர்(0)என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுக்க 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு வங்கதேசம் அணி ஆட்டமிழந்தது. சைபுதீன் 51 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சு அபாரம், அனைவருமே அற்புதமாக வீசினர். புவனேஷ்வர் குமார் 9 ஓவர் 51 ரன்1 விக்கெட். ஷமி 9 ஓவர் 68 ரன் 1 விக்கெட். சாஹல் 10 ஓவர் 50 ரன் 1 விக்கெட். ஹர்திக் பாண்டியா மிகப் பிரமாதம் 10 ஓவர் 60 ரன் 3 விக்கெட். பும்ரா மிகமிகப் பிரமாதம் 55 ரன்களுக்கு 4 விக்கெட்.
ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்
first 5 lakhs viewed thread tamil