Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அரையிறுதியில் இந்தியா: ரோஹித் சர்மா அபார சதம்; பும்ரா 4 விக்கெட்: வெளியேறியது வங்கதேசம்
[Image: indiajpg]வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி. | ஏ.எப்.பி.

பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்ெகட் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணியை 28 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி.
வங்கதேசம் அணி தோல்வியால் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தாற்போல் 2-வது அணியாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களி்ல் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்தது. 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜாதவுக்குப் பதிலாக தினேஷ் கார்்த்திக்கும், குல்தீப்புக்கு பதிலாக புவனேஷ்வர்குமாரும் சேர்க்கப்பட்டனர்
ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி அதன்பின் அதிரடிக்கு மாறி பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் ஸ்கோர் வேகமெடுத்து 9 ஓவர்களில் 50 ரன்களையும், 18 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது.
அதிரடியாக பேட் செய்த ரோஹித்சர்மா 45 பந்துகளில் அரைசதத்தையும், ராகுல் 57 பந்துகளில் அரைசதத்தையும் பதிவு செய்தனர். இவர்களைப் பிரி்்க்க வங்கதேச பந்தவீச்சாளர்கள் போராடியும் முடியவில்லை. 24 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது.
வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்த ரோஹித் சர்மா 90 பந்துகளில் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் 4-வது சதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 180 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர்.
ரோஹித் சர்மா 5 சிக்ஸர், 7பவுண்டரி உள்பட 92 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து சவுமியா சர்க்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 9 ரன்களில் ரோஹித்துக்கு தமிம் கேட்சை விட்டதே மறந்து போகும் அளவுக்கு ஆடினார் ரோஹித். அடுத்துவந்த கேப்டன் கோலி, ராகுலுடன் இணைந்தார்.இந்த ஜோடி சிறிதுநேரமே நிலைத்தது. ராகுல் 77 ரன்களில் ருபெல் ஹூசைன் பந்துவீச்சில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிஷப் பந்த் கோலியுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்்த்துவந்த நிலையில் கோலி 26 ரன்னில் முஷ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரி்ல் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவும் வந்தவேகத்தில் டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். ஓரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.
அப்போது தோனி களமிறங்கி, ரிஷப்பந்துடன் சேர்ந்தார். ரிஷப்பந்த் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் விளாச, தோனி அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசி நிதானமாக பேட் செய்தார். தோனி மட்டும் பொறுப்பாக விளையாடாவிட்டால் இந்திய அணி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி 300 ரன்களை எட்டி இருக்காது.
ரிஷப்பந்த் 41 பந்துகளில் 48ரன்கள்(1சிக்ஸர், 6பவுண்டரி) அடித்தநிலையில் சகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வெளியேறினார். தோனியும், ரிஷப்பந்தும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் தோனியுடன் இணைந்தார்.
தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 8 ரன்னில்  ஆட்டமிழந்தார். முஷ்தபிசுர் ரஹ்மான் வீசிய கடைசிஓவரில் தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புவனேஷ்வர் குமார்(2), ஷமி(1) என ஆட்டமிழந்தனர் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்தது.
வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆட்டத்தை தொடங்கினர். இந்திய வீரர்களின் பந்துவீ்ச்சுக்கு தொடக்கத்தில் இருந்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறியதால், ஸ்கோர் மெதுவாகவே உயர்ந்தது. 22 ரன்னில் தமிம் இக்பால் ஷமி  பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 39 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 03-07-2019, 09:12 AM



Users browsing this thread: 105 Guest(s)