03-07-2019, 09:10 AM
அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளாகக் கடுமையான நெருக்கடியில் இருந்தார். தொடர்ச்சியாகப் பணிகள் இருந்தால்தான் தொழிலும் நல்லபடியாக நடக்கும். அவரை வீழ்த்துவதற்கு இந்த ஓர் ஆயுதத்தை மட்டுமே கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அ.ம.மு.க-விலிருந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் தென்மண்டல பிரமுகர் மூலமாகவே இசக்கி சுப்பையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. `பழைய பேலன்ஸை வாங்கிக்கொண்டு கான்ட்ராக்டைத் தொடருங்கள்' என முதல்வர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தினகரன் குடும்பத்தோடு அதிக நெருக்கத்தில் இருந்தாலும், தொழில்ரீதியான நெருக்கடியால் அ.தி.மு.க-வில் இணையும் முடிவுக்குத் தள்ளப்பட்டார் இசக்கி. வரும் 6-ம் தேதி தென்காசியில் நடக்கவிருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணையவிருக்கிறார்" என்கின்றனர் விரிவாக.
இசக்கி சுப்பையா விலகல் குறித்துப் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ``கட்சியைவிட்டு வெளியே போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் அதிகம் உள்ளன. வேலுமணி அதிகப்படியான தொல்லைகளைத் தருகிறார் எனச் சொல்வார். நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் அவர் போகலாம். எங்களுக்கு இது பின்னடைவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும். ஏற்கெனவே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 48 நாள் ஒரு மண்டலத்துக்கு அமைச்சராக இருந்தவர். அவர் யாரைக் குறை சொல்கிறாரோ, அவர் சொல்லித்தான் இசக்கி சுப்பையாவுக்குப் பதவி கொடுத்தோம். எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்துபோய்விட்டோமா. பன்னீர்செல்வமும் எங்களை எதிர்ப்பதால் அழிந்துபோய்விட்டோமா. எங்களால் கை காட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போவதால் இன்னும் வலுவடைவோமே தவிர பாதிக்கப்பட மாட்டோம்" என்றார் ஆவேசத்துடன்.
தினகரனின் பேட்டியைக் கவனித்த இசக்கி சுப்பையா, ``தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு தலைவருக்கு அழகல்ல. அவர் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் ஈர்க்கப்பட்டுத்தான் கட்சிக்கு வந்தோம். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க-வில் 20,000 தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய்க் கழகத்துக்கே செல்கிறோம்" என விளக்கமளித்தார்.
இசக்கி சுப்பையா `மன மாற்றம்' குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``தி.மு.க-வை விட்டு வைகோ விலகியபோது ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். `இனி தி.மு.க அவ்வளவுதான்' எனப் பேசினர். ஆனால், முன்பைவிட வலுவாக அரசியல் களத்தில் தி.மு.க மீண்டெழுந்தது. அதைப்போலத்தான் இந்த இயக்கத்திலிருந்து யார் விலகினாலும் அ.ம.மு.க இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கும். அ.ம.மு.க-வில் இருப்பதால் இசக்கி சுப்பையாவின் எதிர்கால ஒப்பந்தப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதுகிறார். அவரது ஒப்பந்தப் பணிகள் சிறக்க எங்களுடைய வாழ்த்துகள்" என்றார் நிதானமாக.
![[Image: ttv_new_pic_12358.jpg]](https://image.vikatan.com/news/2019/07/02/images/ttv_new_pic_12358.jpg)
![[Image: pugal_12450.jpg]](https://image.vikatan.com/news/2019/07/02/images/pugal_12450.jpg)
இசக்கி சுப்பையா `மன மாற்றம்' குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``தி.மு.க-வை விட்டு வைகோ விலகியபோது ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். `இனி தி.மு.க அவ்வளவுதான்' எனப் பேசினர். ஆனால், முன்பைவிட வலுவாக அரசியல் களத்தில் தி.மு.க மீண்டெழுந்தது. அதைப்போலத்தான் இந்த இயக்கத்திலிருந்து யார் விலகினாலும் அ.ம.மு.க இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கும். அ.ம.மு.க-வில் இருப்பதால் இசக்கி சுப்பையாவின் எதிர்கால ஒப்பந்தப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதுகிறார். அவரது ஒப்பந்தப் பணிகள் சிறக்க எங்களுடைய வாழ்த்துகள்" என்றார் நிதானமாக.
first 5 lakhs viewed thread tamil