Fantasy காசேதான் கடவுளடா
#31
பகுதி 4
 
இவற்றை எல்லாம் யோசித்த நந்தினி, விஷாலின் வருகைக்காக காத்து இருந்தாள். ஆனால் அதே நேரம் ECR ரோடில் ஒரு விபத்து நடந்து இருக்க, அதில் ஒருவன் அடிபட்டு கிடக்க, அவனை அந்த வண்டியில் இருந்து மீட்டு ஆஸ்பித்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் சென்னையின் குளோபல் ஆஸ்பித்திரி வந்து சேர்ந்த அவனுக்கு முதலுதவி வழங்கப்பட்டு, அவன் கை, கால்களில் முறிவும், தலையில் சிறிய அடியும் பட்டிருப்பது கண்டுபிடிக்க பட்டது.
 
விஷாலை எதிர்பார்த்து காத்திருந்த நந்தினி, அவன் வரவில்லை என்று தெரிந்து அவன் நம்பருக்கு கால் செய்ய அவன் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவள் இரவு 10 மணிவரை அவனுக்காக காத்திருந்து விட்டு தூக்கம் வரவே கண்களை மெதுவாக மூடினாள். அதே நேரம் ஆஸ்பித்திரியில் கண்களை திறந்தான் விஷால். அவனை சுற்றி டாக்டர், போலீஸ் என நிறையபேர் இருக்க, அனைவரும் என்ன நடந்தது என்று கேட்டால், என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியும் முன்னரே அவன் மயங்கி இருக்க, அவனால் எதையும் நினைவில் கொள்ள முடியவில்லை.
 
போலீஸ் அவன் வாக்குமூலத்தை வாங்கி விட்டு சென்றனர், அப்போது தான் அவனுக்கு நந்தினி நியாபகம் வர அவன் போனை தேட, அதை காணவில்லை. நர்ஸை அழைத்து அவன் போன் பற்றி விசாரிக்க, அவளும் அதை அவனிடம் கொடுத்தாள். அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்த பிறகே அவன் மனம் நிம்மதி ஆனது. பின்னர் அவன் கண்களை மூடி படுத்தான். அப்போது அவன் என்ன நடந்து என்பதை யோசித்து பார்த்தான். அவன் நந்தினியை அனுபவிக்கும் எண்ணத்தில் வேகமாக செல்ல, ரோட்டில் ஒரு பெரியவர் எதிரே வர, அவரை இடிக்க கூடாது என்று இடதுபக்கம் வண்டியை திருப்ப, அது அவன் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த மரத்தில் மோதியது.
 
அது உயர் ரக வண்டியாக இருந்தாலும், அவன் சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் ஏர் பேக் ஓபன் ஆகவில்லை, இல்லை என்றால் இந்த அடியும் அவனுக்கு பட்டிருக்க வாய்ப்பில்லை. அவனின் தந்தைக்கு இதை பற்றி அறிவிக்க, அவரும் உடனே ஆஸ்பித்திரி வந்து சேர்ந்தார். நந்தினி காலை எழுந்த பிறகே விபத்து பற்றி தெரிந்து உடனே அவனை பார்க்க சென்றாள். அடுத்த 4 நாட்கள் அவனுக்கு ஆஸ்பித்திரியிலே கழிய, நந்தினி அவன் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்து கொண்டாள்.
 
ஆனால் இதை பார்த்த விஷாலின் தந்தை ராமநாதன், அவனின் ஆட்களை கூப்பிட்டு நந்தினி பற்றி விசாரிக்க சொன்னார். பின்னர் அவன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்ல, அங்கு அவனுக்கு நந்தினியின் சேவை தேவை படவில்லை, காரணம் அவனின் தந்தை அவனை கவனித்துக்கொள்ள ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார்.
 
அன்று இரவு நந்தினி பதிய முழு தொகுப்பும் ராமநாதன் கையில் வந்தது. பெயர் நந்தினி, வயது 23, சென்னை SRM கல்லூரியில் பொறியியல் படித்து கேம்பஸ் மூலம் தன் கம்பெனியில் தேர்வாகி வேளைக்கு சேர்ந்து 1 வருடம் ஆகிறது. தாய் தந்தை அவளின் 2 வயதில் ஒரு விபத்தில் இறக்க, அவளை அனாதை ஆசிரமத்தில் விட்டு சென்றனர் உறவினர். அதன் பிறகு படித்து இந்த வேலைக்கு வந்திருக்கிறாள். ஆனால் வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் தன் மகனின் ஆசை நாயகி ஆகிவிட்டாள் என்று அனைத்தும் ஒன்று விடாமல் இருந்தது.
 
ஒருவேளை தன் மகனை மயக்கி அவனை கல்யாணம் பண்ணும் எண்ணத்தில் இருக்கிறாளா இந்த பெண் என்று யோசித்தார் ராமநாதன். அவரின் அனுபவத்தை வைத்து சிறிது காலம் கூட இந்த பெண்ணை பின்தொடரலாம் என்ற முடிவுக்கு வந்தார் அவர்.
[+] 6 users Like itsmegirl1315's post
Like Reply


Messages In This Thread
RE: காசேதான் கடவுளடா - by itsmegirl1315 - 02-10-2025, 09:25 PM



Users browsing this thread: 1 Guest(s)