03-07-2019, 09:10 AM
சென்னை அசோக் நகரில் அம்மா முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான கட்டடம் இது. தற்போது அ.தி.மு.க-வில் இசக்கி சுப்பையா ஐக்கியமாக இருப்பதால், `இந்தக் கட்டடத்தில் இனி அ.ம.மு.க இயங்குமா?' என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. `கடந்த வாரம்கூட பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து நீண்டநேரம் பேசினார் இசக்கி. அப்போதுகூட இப்படியொரு முடிவில் அவர் இருப்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அசோக் நகரில் உள்ள கட்டடமானது, 35 மாதகால குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. அதற்கு முறையாகப் பணம் செலுத்தியிருப்பதால் தொடர்ந்து அலுவலகம் செயல்படுவதில் தடங்கல் இல்லை. தற்போது இசக்கி சுப்பையாவுடன் மோதல் வலுத்துவிட்டதால் இந்தக் கட்டடத்தில் தொடர்ந்து இயங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.
இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணி என்ன?
இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணி என்ன?
தென்காசி, அம்பை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, 48 நாள்கள் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் மீதான அதிருப்தி காரணமாகக் கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமை சீட் வழங்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தினகரனின் ஆதரவாளராக வலம் வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லைத் தொகுதியில் போட்டியிட விரும்பியவருக்கு, தென்சென்னை தொகுதியை ஒதுக்கீடு செய்தார் தினகரன். இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். ``தேர்தல் செலவுகளைவிடவும் இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் உள்ளன" என விவரித்த அ.ம.மு.க மூத்த நிர்வாகி ஒருவர்,
``தமிழக அரசில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வருகிறார் இசக்கி சுப்பையா. அ.ம.மு.க-வில் இணைந்த பிறகு, இந்தப் பணிகளுக்காகச் சென்று சேர வேண்டிய பில்களைக் கிடப்பில் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித்துறையில் ஏராளமான பணிகளை எடுத்துச் செய்து வந்தார். அந்தவகையில் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அரசு தரப்பிலிருந்து கொடுக்க வேண்டியுள்ளது. தினகரனோடு சேர்ந்துகொண்டு அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால், அடுத்தடுத்த ஒப்பந்தப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டார் இசக்கி சுப்பையா.
first 5 lakhs viewed thread tamil