Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு - இலங்கை முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கைது!


ஈஸ்டர்  தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தப்பட்டது. இலங்கையில் மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கவுள்ளதாக ஏப்ரல் 4-ம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் ஈஸ்டர் தினத்தில் இந்தத் தாக்குதல் நடத்தது. இலங்கையில் வசிக்கும் தொழிலதிபரின் மகன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.  இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. 100-க்கும் அதிகமானவர்களைக் கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். 
சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இறங்கினர். இதில் அப்போதைய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் பெர்னாண்டோ, இலங்கை காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா இருவரும் இந்தக் கொடூரத் தாக்குதலைத் தடுப்பதைத் தவறவிட்டுவிட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலக நேர்ந்தது. காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.


இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக  3 பேர் கொண்ட குழுவை மைத்ரிபாலா சிறிசேனா அமைத்தார். அந்தக் குழு முன்பு நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் காட்டி ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர்.  இந்த நிலையில்தான், மருத்துவமனைக்குச் சென்ற காவலர்கள்  இருவரையும் கைது செய்துள்ளன.
[Image: srilnaka_21187.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 03-07-2019, 09:05 AM



Users browsing this thread: 99 Guest(s)