28-09-2025, 12:15 PM
(This post was last modified: 28-09-2025, 12:17 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த வாரம் இறுதியில் நான் ஆஃபிஸ்க்கு சென்ற நேரம் மாலையில் அம்மா மாடிக்கு சென்றாள். அங்கே அக்ஷரா யோக செய்து கொண்டிருப்பதை கண்டாள். அக்ஷராவும் அவரை பார்த்து சிரிய புன்சிரிப்பை உதிர்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
அம்மா மாடியில் இருந்த அறை மற்றும் அங்கு வைத்திருந்த செடிகளை சுற்றி பார்த்து கொண்டு ஓரமாய் கிடந்த செயரை எடுத்து போட்டு அமர்ந்தார். அக்ஷரா யோக முடிக்கும் வரை அவளையே பார்த்து கொண்டிருந்தார். யோகாவை முடித்ததும் யோகா மேட்டை சுருட்டி வைத்து கொண்டு அம்மாவிடம் வந்தாள்.
‘சொல்லுங்க ஆண்டி…’
‘ஒன்னும் இல்லம்மா, சும்மா தான் வந்தேன்…’
‘ஓ…’
‘செடியெல்லாம் வளக்குரீங்க போல, பாக்கவே நல்லா இருக்கு…’
‘தேங்க்ஸ் ஆண்டி…’
‘கதிர்-க்கும் இதெல்லாம் பிடிக்கும்…’
‘அப்டியா?, நான் பாத்ததில்லையே,…’
‘அப்டியா… ஆனா ஊர்க்கு வந்தாலும் தோட்டத்துல அதிகமா இருப்பான்…’
‘ஆண்டி ஊர்ல உங்க பையன மிஸ் பண்ணுரீங்க போல…’ என்றாள்
‘தாயாச்சேம்மா….’
‘ஹ்ம்…’ என புன்சிரிப்பை உதிர்த்தாள்
‘வெளில எங்கயாச்சும் போலாமா?’
‘எங்க ஆண்டி?’
‘பக்கத்துல எதுனா கோவில் இருக்கா?’
‘ஆமா ஆண்டி, போலாமா?’
‘ஹ்ம், சரி…’
‘அப்போ வாங்க ஆண்டி கெளம்பலாம்…‘
‘ம்ம்..’
இருவரும் போய் கிளம்பினர், அக்ஷரா அம்மாவிடம் கோவில் செல்ல அழைத்தது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் இன்னும் சந்தோஷமானால் அதனால் மறுபேச்சு பேசாமல் கிளம்பினாள். அக்ஷரா குளித்து முடித்து வரும் போது லக்ஷ்மி ஆண்டி ஒரு குழந்தையை ரெடி செய்திருந்தாள். அவளிடம் சொல்லிவிட்டு குளிக்க சென்றாள் லக்ஷ்மி.
அதற்குள் கிளம்பி வந்த அம்மா இன்னொரு குழந்தையை தயார்படுத்த அக்ஷரா-வை டிரஸ் மாற்ற அனுப்பி வைத்தார். அனைவரும் கிளம்பி வெளியில் வந்தனர்.
‘ஆமா… கதிர் அப்போ என்ன பண்ணுவான்?’ என லக்ஷ்மி கேக்க
‘வந்து call பன்னுவான், இல்லினா நாமலே கோவில் போய்ட்டு call பண்ணிக்கலாம்…‘ என்றார் அம்மா
‘ஹ்ம்..’ என மூவரும் இருகுழந்தைகளை தோளில் போட்டு கொண்டு மூன்று தெரு தள்ளி இருந்த அம்மன் கோவிலை நோக்கி சென்றனர்.
அம்மா லக்ஷ்மி ஆண்டியிடம் எனக்கு call செய்து இங்கு வர சொல்லுமாறு சொல்லிவிட்டு பூஜை சாமான்களை வாங்க சென்றார். ஆண்டி call செய்யும் போது traffic-ல் இருந்தேன்.
‘ஹலோ ஆண்டி…’
‘ஹான், கதிர்… எங்கப்பா இருக்க?’
‘வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன் ஆண்டி?’
‘ஓ சரிப்பா… அப்போ, நம்ம வீட்டு பக்கம் இருக்க அம்மன் கோவிலுக்கு வந்துர்ரியா?‘
‘ஏன் ஆண்டி?, ஏதும் விஷேசமா?’
‘இல்லப்பா, திடீர்னு வெளில போலாம்னு தான் இங்க வந்தோம்.. உங்க அம்மாவும் எங்க கூட தான் இருக்காங்க…’
‘சரி ஆண்டி..’
‘சரிப்பா, பாத்து வா…’ என cut செய்தாள்
நான் கோவிலை அடையும் போது அவர்கள் வணங்கி முடித்துவிட்டு அமர சென்றனர். நான் நேரே போய் கர்பகிரகத்தில் இருந்த அம்மனை போய் வணங்கி மனமார வேண்டி அக்ஷரா-வுடன் எனக்கு கல்யாணம் நடக்க வேண்டினேன். பின்பு, அவர்கள் அருகில் போயமர்ந்தேன். சிறிது நேரம் அம்மா அந்த கோவிலை பற்றி பேசினார், அவர் கேட்ட சில கேள்விகளுக்கு ஆண்டி பதிலளித்தார்.
குழந்தைகள் இரண்டும் அழ எங்கள் இருவரையும் போய் சுற்றுமாறு அம்மா சொன்னாள். நான் சிறிது யோசித்திருந்த வேளையில் அக்ஷரா சென்றுவிட்டாள்.
‘டேய்… ஒத்தையில போராடா, நீ துணைக்கு போ…’ என்க, நானும் சென்றேன்,
அவர்கள் கண்ணில் படும் தூரம் வரையில் இருவர் இடையிலும் தூரத்தை கடைபிடித்தேன். அம்மாவும் ஆண்டியும் அங்கு பேசிக்கொண்டிருந்தனர்.
‘உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேன், ரொம்ப நன்றிங்க…’ என்றாள் லக்ஷ்மி ஆண்டி
‘ஐயோ எதுக்குங்க இப்டி பெரிய வார்த்தைலாம் பேசுரீங்க, அப்டி நான் ஒன்னும் செஞ்சுடலியே…’
‘இல்ல… உங்களுக்கு தெரியாது, ஆனா நீங்க வந்ததுல இருந்தே என் பொண்ணுகிட்ட நெரைய வித்தியாசத்த உணருரேன்…’
‘அப்டியா…’
‘ஆமா, வித்தியாசம்னு சொல்லுரத விட இப்போ தான் பழையபடி இருக்கா…‘
‘அப்டியா?’
‘ஆமா…’
‘அப்டி என்னதான் ஆச்சி அக்ஷரா-க்கு…’ என அம்மா கேக்க, அவள் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள் லக்ஷ்மி ஆண்டி
‘அதுக்கப்றம் இப்போ தான் கோவிலுக்கும் வர்ரா…’
‘என்ன சொல்லுரீங்க…’
‘ஆமா, அவளுக்கு classical dance-னா உயிரு… அதுவும் கோவில்ல மட்டும் தான் ஆடுவா, அதனால அதையும் விட்டுட்டா….’
‘…….’
‘ரொம்பநாள் இப்போ கொஞ்சநாள் முன்னதான் அவ சலங்கைய மறுபடியும் கட்டி மாடில இருக்க அவ ரூம்ல ஆடுனத பாத்தேன்… அதுவுமில்லாம நீங்க வந்த முதநாள்ள இருந்து தான் அவ இயல்பா எல்லாரோடயும் நடந்துக்குர மாதிரி இருக்கு….’
‘அப்டியா?’
‘ஆமாங்க, எனக்கு தெரிஞ்சி அவ வெளியாளுங்க கிட்ட பேசி பலநாளாச்சி… அப்டியே பேசுனாலும் கொஞ்சநேரத்துல எரிஞ்சி விழ ஆரம்பிச்சிருவா…’
‘ஓ…’
‘அப்படித்தான் கதிர் கிட்டயும் நடந்துகிட்டா ஆரம்பத்துல, ஆனா அப்றம் அவன் வந்தாலே ஒன்னு அவ அமைதியாயிடுவா இல்ல அவன் எதுவும் பேசமாட்டான்…’
‘ஓ…’
‘ஒருகாலத்துல இந்த ஏரியால இருக்க எல்லாரோடயும் நல்லா அன்பா பழகுன பொண்ணு, இப்போ எல்லாரையும் வெறுப்பா பாக்குரா…’
‘………’
‘என்னோட தேர்வு சரியாயில்ல, நான் ஒழுங்க விசாரிச்சி கல்யாணத்த நடத்திருக்கனும்..’ என கண் கலங்கினாள்
‘ஆனது ஆயிபோச்சி… விடுங்க லக்ஷ்மி… நல்ல காலம் வரும்…’ என ஆறுதல் சொன்னாள்
‘அப்படி தான் நெருக்கமானவங்க எல்லாரும் சொல்றாங்க, ஆனா அதுவே இன்னும் அவளுக்கு கோவத்த கெளப்புது…’
‘வயசு பொண்ணுல்ல, போக போக சரியாயிடும்..’
‘ஹ்ம்… எனக்கு இங்க இவளயும் குழந்தையையும் பாத்துக்குரதுக்கு கதிர் தான் நல்ல உதவியாயிருக்கான், இதுக்கு முன்ன இவன் ஃப்ரண்ட்…’
‘ஹ்ம்…’
‘உண்மைக்கும் சொல்லுரேன், கதிர நீங்க நல்லா வளத்திருக்கீங்க…’ என்க
‘எங்க….’ என அம்மா சோகமானாள்
‘என்னாச்சிங்க?’
‘எங்க வீட்டுலயும் உங்க வீட்டு கதை தான், ஆனா கல்யாணம் வர போகல…’ என எல்லாவற்றையும் சொன்னாள்
‘என்னங்க சொல்லுரீங்க…’
‘ஆமா…. அவன் காதலிச்ச பொண்ண மனச மாத்தி அவ வீட்டுல சொன்ன பையனையே கட்டிகிட்டா அந்த பொண்ணு அதுக்கு காரணம் எல்லாம் அவன் அப்பா தான் ’
‘……’
‘இத தெரிஞ்ச எந்த பையன் தான் சும்மா இருப்பான் சொல்லுங்க?’
‘…….’
‘அவன் அவரு மேல இருக்க மரியாதையால வீட்ட விட்டு மட்டும் வெளில வந்துட்டான்…. இபோ வரைக்கும் பெருசா அவங்க ரெண்டு பேரும் பேசிக்கல….’ என்றாள்
‘எல்லாம் அவனுக்கு கல்யாணம் ஆனா சரியாயிரும்ங்க, கவலைப்படாதீங்க…’
‘அங்க தான் twist…’
‘என்னங்க?’
‘அவன் ஜாதகத்தை தூக்கி நான் போகாத ஜோஸியர் இல்ல, அதுல பத்துல 6 ஜோசியர் என் பையனுக்கு கல்யாணம் ஆனா அது அந்த பொண்ணுக்கு ரெண்டாம்தாரமா தான் இருக்கும்னும், 4 ஜோசியர் காதல் கல்யாண்ம்ங்குராங்க…. இதுல எத நம்புரதுனு தெரியல…’
‘ஓ…’
‘அப்டினா…’ என பொங்கி வந்த தன் கேள்வியை வாயை மூடி தடுத்தாள் லக்ஷ்மி, அது அம்மாவிற்குள்ளும் பொறியை தட்டியது
’அக்ஷரா-வும் கதிர்-ருமா…’ என அம்மா தன் மனதில் தோன்றியதை இயல்பாக கேட்டாலும் அவள் கண்ணிலும் ஆசை மின்னியதை கண்டாள் லக்ஷ்மி…
தொடரும்…