02-07-2019, 05:13 PM
நீதிமன்றத்தில் மதுபானம் பற்றிப் பேசியதால் நந்தினியைச் சிறைக்கு அனுப்பியது சரியா?
ஐபிசி பிரிவு 328-ன்படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா?"
"நான் ஒருத்தன் திருந்தி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?" என்ற அலட்சியம், சுற்றுச்சூழல் தொடங்கி ஊழல்வரை, நாட்டைச் சீர்குலைக்கும் தீராத நோய் பரவ முக்கியக் காரணமாகிவிட்டது. உலகை உலுக்கும் இந்த அலட்சிய நோய்க்குப் பலியாகாத ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நந்தினி. மதுவிலக்கை வலியுறுத்தியும், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும் நந்தினியும், அவரின் தந்தை ஆனந்தனும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 'திறக்காத கதவு எனினும், நான் தட்டிக்கொண்டே இருப்பேன். அது என் கடமை' என ஓயாது போராடிக்கொண்டே இருக்கிறார் இவர். பள்ளிப்பருவம் தொடங்கி, சட்டக்கல்லூரி மாணவியாகத் தொடர்ந்து, இன்று வழக்கறிஞராக உருவெடுத்திருக்கும் அவரின் போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு அவர் மீது எண்ணற்ற வழக்குகளும், ஐம்பது முறைக்கும் மேலான சிறைவாசமும்தான். தற்போது நந்தினிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நந்தினியும் அவரின் தந்தையும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
2014-ம் ஆண்டு நந்தினியும், ஆனந்தனும் போராட்டம் நடத்தியபோது, போலீஸாரைத் தாக்கியதாக, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்தது. அந்த விசாரணையில் ஆஜரான நந்தினி, ``ஐ.பி.சி பிரிவு 328-ன்படி, டாஸ்மாக் மூலம் மதுபானத்தை விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா?" என்று கேள்வி எழுப்பினர். `வழக்குக்குத் தொடர்பில்லாமல் நந்தினி பேசுவது தவறு என்று நீதிபதி கண்டித்தும் அவர் கேட்க மறுத்ததாகவும், நீதிமன்றத்தில் கூச்சலிட்டதாகவும்' கூறி நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
[/font][/color]
ஒருவர், நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அல்லது தீர்ப்பை மதிக்காவிட்டாலோ, நீதிமன்றத்தில் முறையின்றியும் மரியாதையின்றியும் நடந்து கொண்டாலோ, நீதிமன்றத்தின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும்படி செயல்பட்டாலோதான், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்கக் கூறி வாரன்ட் அனுப்புவது முதல் அவர்களைக் கைது செய்வதுவரை, எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க, இதற்கென பிரத்யேகமாக உள்ள நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ன் கீழ் நீதிபதிக்கு அதிகாரம் உண்டு.
அதன்படி, திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவின்பேரில், அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குணா ஜோதிபாசு என்பவருடன் நந்தினிக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், ஜூலை 9-ம் தேதிவரை, நந்தினியையும் அவரின் தந்தையையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட மது ஒழிப்பு போராளி நந்தினி மற்றும் அவரது தந்தையை உடனே விடுவிக்க வேண்டும் என இணையதளத்தில் #ReleaseNandhini என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
[/font][/color]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பி.ஜே.பி தேசியச் செயலாளர் எச்.ராஜாவரை பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளிலெல்லாம், அவர்களைக் கைது செய்தது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என்னும்போது, நந்தினியை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையிலும், அரசுக்கு எதிரான அவரின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனும் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நந்தினியின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள். போராளிகளின் வரிசையில் ஒடுக்கப்படும் நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டி ஒருமித்த குரல் எழுப்புவது நமக்கான அறம். இந்த முறை அவருக்காக எல்லோரும் சேர்ந்து நீதியின் கதவுகளைத் தட்டுவோம்.
வாசகர்கள், இதுபோன்ற உங்களின் சந்தேகங்களை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பதிவிட கீழ்க்கண்ட லிங்க்-ஐ அழுத்துங்கள்.... Click here
[/font][/color]
ஐபிசி பிரிவு 328-ன்படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா?"
"நான் ஒருத்தன் திருந்தி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது?" என்ற அலட்சியம், சுற்றுச்சூழல் தொடங்கி ஊழல்வரை, நாட்டைச் சீர்குலைக்கும் தீராத நோய் பரவ முக்கியக் காரணமாகிவிட்டது. உலகை உலுக்கும் இந்த அலட்சிய நோய்க்குப் பலியாகாத ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நந்தினி. மதுவிலக்கை வலியுறுத்தியும், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும் நந்தினியும், அவரின் தந்தை ஆனந்தனும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 'திறக்காத கதவு எனினும், நான் தட்டிக்கொண்டே இருப்பேன். அது என் கடமை' என ஓயாது போராடிக்கொண்டே இருக்கிறார் இவர். பள்ளிப்பருவம் தொடங்கி, சட்டக்கல்லூரி மாணவியாகத் தொடர்ந்து, இன்று வழக்கறிஞராக உருவெடுத்திருக்கும் அவரின் போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு அவர் மீது எண்ணற்ற வழக்குகளும், ஐம்பது முறைக்கும் மேலான சிறைவாசமும்தான். தற்போது நந்தினிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நந்தினியும் அவரின் தந்தையும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் ``நீதிமன்றத்தில் மதுபானம் பற்றிப் பேசியதால் நந்தினியையும் ஆனந்தனையும் சிறைக்கு அனுப்பியது சரியா? அவர் மீது எந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?" என்ற கேள்வியை செல்வராஜ் என்ற வாசகர் எழுப்பியிருந்தார்.
[color][font]2014-ம் ஆண்டு நந்தினியும், ஆனந்தனும் போராட்டம் நடத்தியபோது, போலீஸாரைத் தாக்கியதாக, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பத்தூர் கோர்ட்டில் நடந்தது. அந்த விசாரணையில் ஆஜரான நந்தினி, ``ஐ.பி.சி பிரிவு 328-ன்படி, டாஸ்மாக் மூலம் மதுபானத்தை விற்பது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா?" என்று கேள்வி எழுப்பினர். `வழக்குக்குத் தொடர்பில்லாமல் நந்தினி பேசுவது தவறு என்று நீதிபதி கண்டித்தும் அவர் கேட்க மறுத்ததாகவும், நீதிமன்றத்தில் கூச்சலிட்டதாகவும்' கூறி நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
[/font][/color]
[color][font]
ஒருவர், நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அல்லது தீர்ப்பை மதிக்காவிட்டாலோ, நீதிமன்றத்தில் முறையின்றியும் மரியாதையின்றியும் நடந்து கொண்டாலோ, நீதிமன்றத்தின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும்படி செயல்பட்டாலோதான், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்கக் கூறி வாரன்ட் அனுப்புவது முதல் அவர்களைக் கைது செய்வதுவரை, எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க, இதற்கென பிரத்யேகமாக உள்ள நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ன் கீழ் நீதிபதிக்கு அதிகாரம் உண்டு.
அதன்படி, திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவின்பேரில், அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குணா ஜோதிபாசு என்பவருடன் நந்தினிக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், ஜூலை 9-ம் தேதிவரை, நந்தினியையும் அவரின் தந்தையையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட மது ஒழிப்பு போராளி நந்தினி மற்றும் அவரது தந்தையை உடனே விடுவிக்க வேண்டும் என இணையதளத்தில் #ReleaseNandhini என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
[/font][/color]
[color][font]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பி.ஜே.பி தேசியச் செயலாளர் எச்.ராஜாவரை பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளிலெல்லாம், அவர்களைக் கைது செய்தது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை என்னும்போது, நந்தினியை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையிலும், அரசுக்கு எதிரான அவரின் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்துடனும் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நந்தினியின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள். போராளிகளின் வரிசையில் ஒடுக்கப்படும் நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டி ஒருமித்த குரல் எழுப்புவது நமக்கான அறம். இந்த முறை அவருக்காக எல்லோரும் சேர்ந்து நீதியின் கதவுகளைத் தட்டுவோம்.
வாசகர்கள், இதுபோன்ற உங்களின் சந்தேகங்களை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பதிவிட கீழ்க்கண்ட லிங்க்-ஐ அழுத்துங்கள்.... Click here
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil