Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`டி.டி.வி சொல்வது தவறு; ரூ.70 கோடியல்ல 52 காேடி!' - அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் இசக்கி சுப்பையா

அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவர் இசக்கி சுப்பையா. தற்போது இவர், அக்கட்சியிலிருந்து விலகி வரும் 6-ம் தேதி முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்கிறார். இது குறித்து தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, ``சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்குக் கொடுத்தார். நெல்லை மாவட்ட மக்களின் ஆதரவுடன்  வெற்றி பெற்று அமைச்சரானேன். ஆனால், எனக்கு டி.டி.வி தினகரன் சீட் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கட்சியில் இருந்தாரா என்பதே எனக்குத் தெரியாது. பொதுவாக அரசியல் மேடைகளில்கூட நான் யாரையும் குறைசொல்லிப் பேசுவதில்லை. ஆனால், டி.டி.வி தினகரனின் இன்றைய பேட்டி எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. என்னைப் பற்றிப் பேசிய அவர், `48 நாள்கள், அதாவது ஒரு மண்டலம் அமைச்சராக இருந்தவர்' என்று என்னைக் கிண்டல் பண்ணி இருக்கிறார். நாங்கள் கிண்டலடிக்கப்படக் கூடியவர்கள்தான். பாதாளச் சாக்கடை ஒப்பந்ததாரர் என்றும் என்னை விமர்சிக்கிறார். அவருக்குத் தெரியாதா எங்கள் பரம்பரைத் தொழிலே கான்ட்ராக்ட்தான் என்பது. சமீபகாலமாக அவர் பதற்றத்துடன் இருக்கிறார். அதனால், இரட்டை இலைச் சின்னம் பிரச்னையை 2017 என்பதற்குப் பதிலாக 2007 என்கிறார். அவர் கூட்டம் போட்ட தேதியை மாற்றிச் செல்கிறார். ஆனால், நானும் என்னுடன் இருந்தவர்களும் கட்சிக்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.
[Image: Isaki_subbaiya_1_13075.jpg]
நான் யாரையும் குறை சொல்லவில்லை. என்னைப் பற்றிய விஷயங்களுக்கு மட்டுமே பதில் சொல்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் முதல்வராக இருக்கிறார். அதனால்தான் கட்சியில் நாங்கள் இணைவது பற்றி கேட்டதற்கு, `நானே உங்களிடம் வருகிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இணையுங்கள்' என்று சொல்லிவிட்டார். எப்பேர்ப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவராக இருந்தால் இப்படிச் சொல்வார். தி.மு.க-விலிருந்து பாரதிய ஜனதாவில் இருந்தும் கட்சியில் சேருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எங்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தியபோது, 90 சதவிகிதம் தொண்டர்கள் மீண்டும் தாய்க் கழகத்திலேயே இணைய வேண்டும் என்று சொன்னார்கள். அதனால்தான் வரும் 6-ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பெருந்தன்மையோடு தென்காசிக்கு வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் 20,000 பேர் கட்சியில் இணைய இருக்கிறோம். அ.ம.மு.க தற்போது செயல்பட்டு வரும் அலுவலகம் எனக்குச் சொந்தமானதல்ல. என் மகன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்குச் சொந்தமானது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுத்துவார்கள்.
[Image: Isaki_subbaiya_2_13523.jpg]
எனக்கு அரசிடம் இருந்து 70 கோடி ரூபாய் வரவேண்டியதிருப்பதால் அ.தி.மு.க-வுக்குச் செல்வதாக டி.டி.வி.தினகரன் சொல்வது தவறானது. ஒப்பந்தப்பணிக்காக 52 கோடி ரூபாய் பாக்கி இருப்பது உண்மைதான். அமைச்சர் வேலுமணி எனக்கு நெருங்கிய நண்பர். அரசியல் வேறு தொழில் வேறு. வர்த்தகத்தில் பாக்கி என்பது சகஜமான ஒன்றுதான். நாங்கள் அ.ம.மு.க-வில் இருந்து வெளியேறக் காரணம் சிலர் இருக்கிறார்கள். அது என்ன என்பதை நாகரிகம் கருதி வெளியே சொல்ல முடியாது. பணத்துக்காகவோ சுயநலத்துக்காகவோ கட்சி மாறவில்லை. ஒரு சில தனி நபர்களிடம் டி.டி.வி.தினகரன் அச்சப்பட்டுக் கிடப்பதாலேயே கட்சியில் நீடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே பலர் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், இன்னும் தொடரும். சசிகலா தியாகத்தின் திருவுருவம். அதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது. வரும் 6-தேதி முதல்வர் முன்னிலையில் இணையும் அனைவருமே தொண்டர்கள்தான். அனைவருமே முக்கியப் பிரமுகர்கள்தான். 20,000 முக்கியப் பிரமுகர்கள் அ.தி.மு.க-வில் இணைகிறோம்" என இசக்கி சுப்பையா தெரிவித்தா
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 02-07-2019, 05:11 PM



Users browsing this thread: 106 Guest(s)