Adultery இச்சை மனது..!!
#66
அன்று அவன் வேலைக்குக் கிளம்பிச் செல்லும்போது ஷிவானியை பஸ் ஸ்டாப்பில் பார்க்க நேர்ந்தது. 

 அவளும் இவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தி கை காட்டி அவசரமாக கூட்டத்தை விட்டு விலகி ஓடி வந்தாள்.

“போற வழில என்னைக் கொஞ்சம் ட்ராப் பண்ணிருங்களேன் ப்ளீஸ்” என்று லிப்ட் கேட்டு அவன் சரி என்று சொல்லும் முன்பாகவே அவன் பின்னால் ஏறி உட்கார்ந்து விட்டாள்.

பஸ் ஸ்டாப்பில் இருந்த தன் தோழிகளுக்கு டாடா காட்டி காற்றில் பறந்த துப்பட்டாவை சுருட்டிப் போட்டுக் கொண்டாள்.

அவன் மெதுவாகப் போகும்போது மெலிதாக அவன் முதுகில் பட்டு விலகியதில் செயற்கைத் தனம் தெரிந்தது. 

“எங்க வேலை செய்றீங்க?” என்று கேட்டாள். 

“பே டி எம் லங்க” என்றான். 

“அங்க என்ன வேலை?”

“நீங்க கடைகள்ள எல்லாம் பாக்கறதில்லயா? ஜி பே பண்ற மாதிரி போன் பே. அதுல பே டி எம் இருக்குமே. அதை கடை கடையா போய் அக்கவுண்ட் ஓபன் பண்ணி தர வேலை. ஆமா நீங்க என்ன வேலைக்கு போறீங்க?”

“மயூரி சில்க்ஸ்” என்றாள். “துணிக்கடை”

“தெரியுங்க. மயூரி சில்க்ஸ்ல கூட எங்க கம்பெனி பே பண்றது இருக்கும்.”

“அது நீங்க செஞ்சதுதானா?”

“இல்லைங்க. அது வேற ஒரு பையன். நான் பெரும்பாலும் வெளியூர் போயிருவேன்”

“டெய்லி வெளியூரா?”

“ஆமா. இப்படி மேல ஊட்டி குன்னூர் கோத்தகிரினு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஊரா போவேன்”

“எவ்வளவு சம்பளம் வரும்?”

“வரும்ங்க. மாச சம்பளம் போக கடைக்காரங்க அப்பப்ப டிப்ஸ் ஏதாவது குடுப்பாங்க. மோசமில்லாத வருமானம்தான்”

அவள் பேச்சு மெலியதாக இருந்தது. குரலில் வசீகரம் இருந்தது. பூ வைத்திருந்தாள். மெல்லிய மணம் வீசும் செண்ட் போட்டிருந்தாள். 

அவள் அவன் முதுகில் படும்மோது மிகவும் இதமான ஒரு மென்மையை அனுபவித்தான். பெண்மையின் அந்த மென்மை அனுபவத்துக்கு அவன் மனசு ஏங்கியது.

இரண்டு கிலோ மீட்டர் தொலைவு அவளுக்காகப் போய் அவள் வேலை பார்க்கும் கடை முன்பாக இறக்கி விட்டபோது அவள் தேங்க்ஸ் சொல்லி டாடா காட்டிப் போனாள்.

அவனது மனசுக்குள் பூத்த மெலிதான காதல் மெள்ள மெள்ள விஷ்வரூபமெடுக்கத் தொடங்கியது.. !!

இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பியவன் சிகரெட் வாங்க ஜோதிலட்சுமி கடைக்குப் போனான். 

அந்த அம்மாளைக் காணவில்லை. அவளது மகன்தான் கடையில் உட்கார்ந்திருந்தான். மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.

“சிகரெட் குடு சதீஷ்” வினோத் கேட்டான். 

அவன் எதுவும் பேசாமல் சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான். 

வாங்கி பணம் கொடுத்து சில்லரை வாங்கி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு சிறிது நேரம் வீதியைப் பார்த்தபடி புகை விட்டான்.

மனசுக்குள் ஷிவானியின் நினைவுகள் இதமாகப் படர்ந்தது.

புகையோடு சேர்த்து அவளது நினைவும் அவனுக்கு கிக் கொடுத்தது.

அடுத்த நாள் தாமதமாகத்தான் எழுந்தான். அவன் கிளம்ப லேட்டாகிவிட்டது. ஷிவானியைப் பார்க்க முடியவில்லை.

இரவிலும் அதேபோலத்தான். 

வேலை பார்க்கும் நேரங்களில் கூட அவளைப் பற்றி அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான்கு நாட்கள் கழித்து மீண்டும் காலையில் நேரமே கிளம்பிப் போனான். 

அவனுக்காகவே காத்திருந்தவளைப் போல பஸ் ஸ்டாப்பிலிருந்து ஓடி வந்து லிப்ட் கேட்டாள். 

அவளைப் பார்த்ததும் அவனுள் சட்டென ஒரு மலர்ச்சி உண்டானது.

“எங்க.. பாக்கவே முடியல?” என்று பின்னால் உட்கார்ந்து கேட்டாள். 

“வேலை பிஸிங்க. நைட் வரப்ப லேட் ஆகிரும்”

“காலைலயுமா?”

“ஆமா. எந்திரிக்க லேட் ஆகும். இல்லேன்னா நேரத்துலயே கிளம்பி போக வேண்டியதா இருக்கும்”

பாதி தூரம் போய்க் கேட்டாள்.
“என்ன செண்ட் போடறீங்க?”

“புடிக்கலீங்களா?”

“ஆளை மயக்குது”

“நீங்க என்ன செண்ட் போடறீங்க?” அவனும் திருப்பிக் கேட்டான்.

“எப்படி தெரியும்?”

“ஆளை மயக்குதே..”

“மயங்கிட்டிங்களோ?”

“ரொம்ப.. கூடவே புவடர் பூ மணம்னு கமகமனு இருக்கு”

இறக்கி விட்டபோது,
“உங்க போன் நெம்பர் குடுக்கலாமே?” என்றான். 

“எதுக்கு?”

“என்னமோ.. உங்ககிட்ட அடிக்கடி பேசணும் போலருக்கு”

 சிரித்து விட்டு போன் நெம்பர் கொடுத்தாள்.
“அனாவசியமா கால் மெசேஜ் பண்ண வேண்டாம். எங்கண்ணன் ஒரு மாதிரியான ஆளு. சண்டைக்கு வந்துருவான்” என்றாள்.
Like Reply


Messages In This Thread
RE: இச்சை மனமே..!! - by Dinesh5 - 04-08-2025, 09:13 PM
RE: இச்சை மனமே..!! - by Its me - 04-08-2025, 10:20 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 13-08-2025, 10:11 PM
RE: இச்சை மனது..!! - by Siva.s - 18-08-2025, 07:41 AM
RE: இச்சை மனது..!! - by Navki - 19-08-2025, 09:31 AM
RE: இச்சை மனது..!! - by Giku - 23-08-2025, 06:12 PM
RE: இச்சை மனது..!! - by rkasso - 26-08-2025, 05:25 PM
RE: இச்சை மனது..!! - by கல்லறை நண்பன். - 31-08-2025, 09:50 AM
RE: இச்சை மனது..!! - by keiksat - 21-09-2025, 04:57 PM



Users browsing this thread: 1 Guest(s)