02-07-2019, 11:09 AM
இணையத்தில் வைரலாகும் விஜய்யின் “ID Card”
நடிகர் விஜய்யின் ID Card ஒன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பிகில். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வர இருக்கும் இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருக்கிறார். இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பிகில் படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ID Card தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil