Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
ரொம்ப வாக்குகள் வாங்கிய மீரா மிதுன், மதுமிதா: வெளியேறப்போவது யார்?

இந்த வாரம் எலிமினேஷனுக்கு மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளதால், இவர்களில் மீரா மிதுன் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[Image: madu.jpg]ரொம்ப வாக்குகள் வாங்கிய மீரா மிதுன், மதுமிதா: வெளியேறப்போவது யார்?


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வழக்கமாக நேற்றும் பரபரப்பாக சென்றது. முதல் வாரத்தில் போட்டியாளர்களின் சோகங்களை பகிர்ந்து கொள்ள மனதை திறந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ரேஷ்மா, சரவணன், மோகன் வைத்யா, மீரா, லோஸ்லியா, சேரன் ஆகியோர் அவர்களது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்காக அவர்களுக்கு இந்த வாரம் 3200 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. இதில், அவர்கள் தங்களது முதல் லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான ஷாப்பிங் செய்து கொண்டனர்.

 இதையடுத்து, அகம் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுபவர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டது. இதில், வனிதா மற்றும் மோகன் வைத்யாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதில், மதுமிதா 6 வாக்குகள், மீரா 8 வாக்குகள், சாக்‌ஷி 2 வாக்குகள், கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 5 வாக்குகள், ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் கவின், மீரா மிதுன், மதுமிதா, ஃபாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. 

உண்மையில், நண்பர்களாக பழகிக் கொண்டு அவர்களது பெயரையே எலிமினேஷனுக்கு சொல்லுறாங்க…ஆம், நேற்று முன் தினம் சேரனைப் பற்றி நல்ல கருத்துக்களை பதிவு செய்த வனிதா, நேற்றைய நிகழ்ச்சியில் அவரது பெயரை எலிமினேஷனுக்கு தெரிவித்தார். சரி, அபிராமி மற்றும் சாக்‌ஷி இருவரும் தோழிகள். ஆனால், சாக்‌ஷி, சேரன் பெயர் எலிமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேரனுக்காக இரக்கப்பட்டுள்ளார் அபிராமி. இதனால், சாக்‌ஷி தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஷெரின் மற்றும் அபிராமியிடம் தெரிவித்துள்ளார். 

எது எப்படியோ, மதுமிதா மற்றும் மீரா மிதுன் இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனாலொ, அதிக் வாக்குகள் பெற்றவர்கள் தான் வெளியேற்றப்படுவார்களா? இல்லை சரவணன், சேரன், சாக்‌ஷி, ஃபாத்திமா பாபு ஆகியோரில் யாரேனும் வெளியேற்றப்படுவார்களா? என்று கேள்வி இங்கு எழுகிறது. இதற்கிடையில், மக்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்? ஜாங்கிரி மதுமிதாவா? இல்லை மீரா மிதுனா? 

மக்களின் ஆதரவை வைத்து தான் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 02-07-2019, 10:44 AM



Users browsing this thread: 7 Guest(s)