Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
காங்கிரஸ் கனவை தகர்த்த திமுக! காங்கிரஸ் அதிர்ச்சி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கொடுக்கப்பட்டன. இதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் முடியும் நிலையில் உள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்த்தெடுக்க முடியும். இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினருக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்தது. 
 

திமுக சார்பாக மதிமுக கட்சிக்கும், அதிமுக சார்பாக பாமகவிற்கும் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த நிலையில் திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனால் மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று  எதிர்பார்த்த நிலையில் தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்று திமுகவின் அறிவிப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.[Image: 78_7.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 02-07-2019, 10:25 AM



Users browsing this thread: 100 Guest(s)