09-08-2025, 08:03 PM
என் மனைவி அவள் ரூமில் வேலையில் பிசியாக இருக்க.. நான் அவள் அறைக்குள் சென்றேன்..
ஏஞ்சல்... நா கொஞ்சம் கடைப்பக்கம் போய்ட்டுவரேன்.. வரப்போ அப்டியே புனிதாவையும் கூப்டு வரேன்.. நீ ரூம்லயே இரு.. நா வெளிய லாக பன்னிட்டுப் போறேன்..
ஒத வாங்கப்போற.. அதான் வெளில மழ தூரிட்ருக்குள்ள.. என்ன கடைக்குலாம்..? புனிதா இங்கதான போய்ருக்கா.. அதெல்லாம் வந்துருவா.. ஒழுங்க இங்கயே இரு..
நிச்சயம் என் மனைவி நான் வெளியே செல்ல சம்மதிக்கமாட்டாள்.. நான் சரியெனத் தலையாட்டிவிட்டு அவள் ரூமைவிட்டு வெளியே வந்தேன்.. என் மாமனாருக்கு கால் செய்தேன்..
சொல்லுங்க மாப்ள.. வீட்டுக்கு வந்துட்டீங்களா..
ஆமா மாமா.. பாப்பா எதுவும் அடம் பன்றாளா..?
ஹாஹா.. அவ விளையாடிட்ருக்கா.. நா இன்னும் ஒரு மணி நேரத்துல கூட்டிட்டு வந்துருவேன்.. நீங்க தூங்குங்க..
மாமா.. தனியாதான இருக்கீங்க..?
என்னாச்சு மாப்ள..?
நான் நடந்த அத்தனையையும் மாமாவிடம் எடுத்துச்சொல்ல.. பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் கடைசியாக..
மாப்ள.. இதக் காதும் காதும் வச்ச மாதிரி முடிக்கனும்..நம்ம ஏரியாவுக்குள்ள வந்துட்டு ஒரு பயலும் திரும்பிப் போக முடியாது.. நீங்க நம்ம வீட்டு ஆளுக யார்கிட்டயும் சொல்லல தான..?
இல்ல மாமா.. அவன் இங்கதான் எங்கயோ இருக்கான்.. நா புனிதாவ அழச்சுட்டு வர கெலம்புறேன்.. வீடெல்லாம் பூட்டியாச்சு..
ம் சரி மாப்ள.. நம்ம்பயலுகள சத்தமில்லாம ஏரியாவ சுத்துபோட சொல்லி்றேன்.. அவன் எங்கயும் நகர முடியாது.. நா இன்னும் 5 நிமிசத்துல அங்க வரேன்.. பாப்பாவும் உங்க அத்தையும் இங்கயே இருக்கட்டும்..
என்னால் முடிந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டேன் இருந்தாலும் என் இதயத் துடிப்பு பலமடங்கு எகிறியபடி இருந்தது.. எனக்கு நெருக்கமான அத்தனை பெண்களும் வட்டத்துக்குள் வளைக்கப்பட்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. யாரென்றே தெரியாத எதிரி மிகவும் தந்திரமாக இத்தனைநாள் வேவு பார்த்திருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது..
நான் என் மனைவிக்குக் கேட்காதமாதிரி மெதுவாக வீட்டின் கதவை லாக் செய்துவிட்டு வீட்டைச் சுற்றியிருக்கும் அத்தனை லைட்களையும் ஆன் செய்தேன்..அங்கே போர்ட்டிக்கோவில் எரிந்த லைட்டை மட்டும் ஆப் செய்துவிட்டு பென்சில் என் மாமனார் தோட்ட வேலைகளுக்காகப் பயன்படுத்த வைத்திருந்த சிறு சுத்தியலை எடுத்து என் இடுப்பின் பின்புறம் பெல்டுக்கு குறுக்காக வைத்து சட்டையைச் சரிசெய்தேன்.. பின்பு போர்ட்டிக்கோ லைட்டை ஆன் செய்தேன்.
நிச்சயம் அவன் எங்கிருந்தோ என்னைப் பார்த்தபடிதான் இருக்கவேண்டும்... நான் ஆயுதம் மறைப்பதை அவன் பார்த்தால் சுதாரித்துவிடக்கூடும்..
வீட்டை விட்டு வெளியே வந்த நான் மெதுவாக சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு நேராக புனிதா இருக்கும் வீட்டிற்குச் சென்றேன்.. என் மனைவி வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளியிருந்தது.. இடையே ஆடு மாடுகள் கட்டும் தறியும் அதற்கு அடுத்தாற்போல் வைக்கோல் போரும் இருந்தன.. அந்த இடத்தில் லைட் இல்லை.. ஒரு 30 மீட்டர் இடைவெளிக்கு சுத்தமாக எதுவும் தெரியாது.. அவ்வளவு இருட்டு... மேலும் தெருவில் எல்லா வீடுகளும் விளக்கு அணைக்கப் பட்டிருந்தன.. மழக்கால நேரம் என்பதால் அந்த ஊருக்கு மின்சாரமும் அடிக்கடி தடைபடும்.. ஒருவேளை அவன் புனிதாவை ஏதாவது செய்ய நினைத்தால் அதற்கு இதுதான் சரியான இடம்..
நான் நேராக புனிதாவின் சித்திவீட்டுக்குள் சென்றேன்.. என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ற அவளின் சித்தி வேக வேகமாக சமையலறைக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.. சிறிதுநேர உரையாடல்களுக்குப் பின்னர் மீண்டும் அங்கிருந்து புனிதாவுடன் கிளம்பினேன்..
என்ன மாமா.. இன்னக்கி ரொம்ப அதிசயமா இருக்கு.. எங்க சித்தி வீட்டுக்குலாம் வந்துருக்கீங்க..
இருட்டுல வரதுக்கு நீ பயந்துருவனு தொணைக்கு வந்தேன் ஏஞ்சல்..
ஹா ஹா.. பாத்தா தொணைக்கு வந்த ஆள் மாதிரி தெரயலயே..
நான் அவளிடம் சாதாரணமாகப் பேசியபடியே சுற்றும் முற்றும் ஏதாவது அசைவு தென்படுகிறதா என்று பார்த்தபடியே வந்தேன்.. நான் ஏதோ டென்சனாக இருப்பதைப் பார்த்த புனிதா..
மாமா என்னாச்சு..? ஏன் ஒருமாதிரி டென்சனா இருக்கீங்க..?
அவளுக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை.. லேசாக மழைத் தூரல்கள் விழுந்துகொண்டிருக்க என் கண்கள் ஓய்வில்லாமல் அத்தனை மூலை முடுக்கெல்லாம் வெறித்து அலைந்தபடி இருந்தன.. அப்போது திடீரென எனக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் ஏதோ அசைவு தென்பட இப்போது என் உதடுகள் தானாக ஒரு வெறிப் புன்னகையை உதிர்த்தன..
புனிதா நா சொல்றத கவனமா கேளு.. முகத்துல எந்த ரியாக்சனும் காட்டாத.. இந்தா வீட்டு சாவி.. நேரா வீட்டுக்குப் போ வீட்டத் தொறந்துட்டு உள்ள போய் வேகமா கதவ லாக் பன்னிரு.. வெளில எந்த சத்தம் கேட்டாலும் கதவத் தொறக்காத.. ஜன்னல் பக்கமாகவும் நிக்காத..
புனிதா நா சொல்வதையெல்லாம் கேட்க கேட்க முகம் வெளுத்து அதிர்ந்துவிட்டாள்.. ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர்ந்தவள் சரியெனத் தலையிட்டினாள்.. அந்தநேரத்திலும் என் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள்..
மாமா.. ப்ளீஸ் நீங்களும் உள்ள வந்துருங்க..
என்மீது அவளுக்கிருந்த பிரியம் அப்போது வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டது.. ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.. அவள் என் கை கோர்த்திருப்பதையும் அவன் பார்த்திருப்பான்..நிச்சயமாக இப்போது அவனது முதல் டார்கெட் புனிதாவாகத்தான் இருக்க முடியும்.. அந்த நேரம் பார்த்து சொல்லிவைத்தாற்போல கரன்ட் கட் ஆனது.. இதுதான் சமயமென சட்டென புனிதாவை வேகமாகச் செல்லுமாறு தள்ளிவிட்டு நான் அந்த வைக்கோல் போர் அருகில் மறைவாக நின்று கொண்டேன்..
புனிதா அவசர அவசரமாகச் சென்று கதவைத் திறந்து உள்ளே போக என் பின்னால் வந்துகொண்டிருந்த உருவத்துக்கு நான் அங்கு மறைவாக நிற்பது தெரியவில்லை.. வேக வேகமாக புனிதாவைப் பார்த்தவாறு சென்ற உருவத்திற்கு முன்னால் சட்டென நான் சென்று நிற்கவும் அந்த உருவம் ஒரு நொடி அதி்ந்துவிட்டது.. சுதாரித்துக்கொண்டு தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து என்னைத் தாக்க முயலும்முன்பு எனது சுத்தியல் அந்த உருவத்தின் கையில் மடார் என்று இறங்கியது..
நிச்சயமாக கையெலும்பு முறிந்திருக்க வேண்டும். கையில் வைத்திருந்த கத்தி தரையில் விழுந்து அந்த நிசப்தத்தில் ஒரு மாதிரியாக நங் என்று சத்தம் எழுப்பியது.. வலியில் அலறிய அந்த உருவம் தன் பலம் கொண்ட மட்டும் என்மீது ஓங்கி உதைத்தது.. என்னைவிட உயரமாக இருந்த அந்த உருவத்தின் உதையால் நிலைதடுமாறிய நான் பின் மீண்டும் சுதாரித்துக்கொண்டு சுத்தியலை ஓங்கும் முன் என்னைத் தள்ளிவிட்டு ஓடியது.... என் வயிற்றில் விழுந்த உதையால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை...
என் மாமனார் வீட்டைத் தாண்டி ஓடிய அந்த உருவம் தெருவைக் கடந்து சாலையில் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த காரை நோக்கி ஓடியது.. கார் ஸ்டார்ட் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.. பின்னாலேயே துரத்திச் சென்ற நான் என் கையில் இருந்த சுத்தியலை அந்த உருவத்தின் கால் முட்டியை நோக்கி வீச இம்முறை குறி பிசகாமல் நேராக முட்டியின் மீது இடியென இறங்கியது.. மீண்டும் ஒரு அலறல் சத்தம்.. இருந்தாலும் நொண்டிக் கொண்டே திறந்திருந்த காரின் கதவு வழியாக காருக்குள் சாய்ந்தது அந்த உருவம்... உட்கார்ந்ததும் கார் அசுரவேகத்தில் சென்று இருளில் மறைந்தது..நான் சுதாரித்து பைக்கை ஸ்டார்ட் செய்து கார் சென்ற திசையை நோக்கி 1 கிலோ மீட்டர் சென்றும் அந்தக் காரைப் பிடிக்க முடியவில்லை..
உடனே போனில் என் நண்பனுக்கு காரின் நம்பர் பற்றிய தகவல் சொன்னேன்.. திரும்பி வீடு வரும்போது வீட்டின் முன் மாமனாரும் அந்தத் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேரும் நின்றிருந்தனர்.. நான் ஒருவனைத் துரத்திக் கொண்டிருந்த அதேவேளையில் அந்தத் தெருவில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒருவனை அந்த இளைஞர்கள் விசாரிக்கப்போக.. இவர்கள் வருவதைப் பார்த்ததும் அவன் ஓட்டமெடுக்க... இவர்கள் அவனைத் துரத்திச் சென்றுள்ளனர்..
அவர்கள் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது... இது ஒரு பெரிய ஸ்கெட்ச்.. நெடு நாட்களாகக் கண்கானித்து திட்டம் போட்டிருக்கிறார்கள்... ஆனால் ஏன் எனக்குத் தகவல் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டுமென்று எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.. ஒருவேலை இன்று எனக்குத் தகவல் சொல்லாமல் இருந்திருந்தால் இன்று அவர்களது காமப் பசிக்கு புனிதா எளிதாக இரையாகியிருப்பாள்...
நான் சுத்தமாக இடிந்துவிட்டேன்.. போர்ட்டிக்கோவில் இருந்த சேரில் சென்று உட்கார்ந்த அடுத்தநடி நிவேதாவிடமிருந்து எனக்கு கால் வந்தது.. எடுத்துப் பேசியதும் நிவேதா அழ ஆரம்பித்தாள்..
சா..சார்.. எனக்குப் பயமாருக்கு.. யாரோ வீட்டுக்கு முன்னாடி அடிக்கடி வந்து போறாங்க..
நிவேதா.. ஒரு நிமிசம் அழாம இரு.... பயப்படாத.. உங்க தெருல ரெண்டு போலிஸ் ரவுன்ட்ஸ்ல இருக்காங்க.. தைரியமா இரு.. அம்மாட்ட போன் குடு..
இ..இ..இல்ல சார்.. நா அம்மாட்ட சொல்லல... அவங்க தூங்கிட்ருக்காங்க..
சரி...உள்பக்கமா பூட்டு போடச் சொன்னேன்ல.. போட்ருக்கியா..?
ம் போட்டுட்டேன் சார்..
சரி சரி... பயப்படாத.. அப்டியே லைன்ல இரு... கால் கட் பன்னிராத.. உங்க அம்மா போன எடுத்து கதவுக்கு நேரா கேமரா ஆன் பன்னி வீடியோ எடுத்துட்டே இரு..
மாமாவுடைய போன் வாங்கி என் நண்பனுக்கு கால் செய்து நிவேதா ஏரியாவில் இருக்கும் போலிஸை் அலர்ட் செய்யச் சொன்னேன்.. நான் சொன்ன அடுத்த இரண்டு நிமிடத்தில் நிவதோவின் வீட்டுக்கு வெளியே அதட்டல் சத்தமும் பின்னர் இரண்டு பேர் சேர்ந்து துரத்தும் சத்தமும் கேட்டது..
சா.சார்.. யாரோ ஓட்றாங்க சார்.. எனக்குப் பயமாருக்கு..
பயப்படாத நிவேதா.. இன்னக்கி நைட் புல்லா உன் வீட்டுக்கு முன்னாடி மப்டில ரெண்டு போலிஸ் இருப்பாங்க.. அவங்க சீக்கிரமே அந்தத் திருடனப் புடிச்சுருவாங்க.. நீ கவலப்படாம தூங்கு..
ம்ம்... சரி சார்..
எதுனாலும் எனக்கு கால் பன்னு நிவேதா.. நான் இருக்கேன்..
நிவேதா போனை வைத்ததும் இப்போது எனக்குத் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது.. ஒரே நேரத்தில் அவன் சொன்ன அத்தனை வீடுகளிலும் ஆட்களை இறக்கியிருக்கிறான்.. இது புனிதாவுக்கு மட்டும் போட்ட ஸ்கெட்ச் அல்ல.. நிவேதா புனிதா என் மனைவி என் அம்மா என அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் போட்ட ஸ்கெட்ச்..
என்னால் நிதானமாக யோசிக்க முடியவில்லை.. என் வீட்டில் என் தம்பியை மீறி ஒருத்தனும் உள்ளே இறங்க முடியாது.. மேலும் நான் தகவல் சொன்னதும் அவனது நண்பர்களையும் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டான்.. எனவே.அங்க பாதிப்பில்லை..
உடனே என் நண்பனுக்கு மீண்டும் கால் செய்து.. விடிவதற்குள் அவர்களைத் தேடித் தூக்க வேண்டுமென நிலைமையின் தீவிரத்தை எடுத்துச் சொன்னேன்.. பொறுமையாகக் கேட்ட சக்திவேல்..
டேய்.. இது ஏதோ சாதாரண கும்பல் மாதிரி தெரியல.. என்னோட Cyber team அவனுகள கிட்டத்தட்ட நெருங்கிட்டாங்க... என்னோட special squad கிட்ட அலர்ட் பன்னிருக்கேன்..
நீ கவலப்படாத இன்னும் 3 hrs குள்ள நா அவனுகள கொத்தா தூக்கிட்டு ஒனக்குக் கால் பன்றேன்..
ஓகே டா..
இப்போதுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.. இதுவரை இல்லாத இந்தப் பிரச்சனை ஏன் இப்போது திடீரென்று..?
கீழே மாமனாரும் அவருடன் சில வாலிபர்களும் ஏதோ முனு முனுப்பாகப் பேசிவிட்டு என் மாமனார் யாருக்கோ கால் செய்து ஏுதா பேசிவிட்டு மூன்று இளைஞர்களுடன் காரை எடுத்துக்கொண்டு அந்த மர்மஉருவம் தப்பிச்சென்ற காரின் திசையில் பறந்தது...
மற்ற இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்புக் கம்பிகளுடன் ஆளுக்கொரு திசையில் சென்று மறைந்தனர்.. எனக்கு இப்போது வீதி பாதுகாப்பாக ஊள்ளதென்று நம்பிக்கை வந்தது... இப்போது என் மாமனார் வீ்ட்டின் முன்பு மேலும் மூன்று இளைஞர்கள் காவலுக்கு வந்தனர்.. நான் என் மனைவி அறையைப் பார்த்தபோது அவள் வெளியே நடப்பது தெரியாமல் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தாள்..
நான் மேலே மாடிக்குச்சென்று அப்படியே வானத்தைப் பார்த்தவாறு மழை தூரலி் ஈரமாக இருந்த தரைமீது மல்லாக்கப் படுத்துக்கொண்டேன்.. அந்த முரட்டு உருவம் என் வயிற்றில் உதைத்ததில் எனக்கு சரியாக மூச்சு விட முடியவில்லை...அப்படியே மழைத்துளிகள் என் முகத்தில் விழ நான் கண்கள் மூடி மெதுவாக வாயைத் திறந்து மூச்சுவிட்டபடி கிடந்தேன். இப்போது எனக்கு பாதி நிம்மதி.. ஆனால் யார் இப்படி செய்வது என்று தெரியாததால் இன்னும் என் இதயம் படபடத்தவாறு இருந்தது...
நான் கண்கள் மூடியவாறு பல சிந்தனையில் கிடந்த அந்த வேளையில் மாடிப்படியில் நின்றவாறு ஒரு உருவம் கையில் எதையோ வைத்துக்கொண்டு என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் உணரவில்லை..