03-08-2025, 02:09 AM
(This post was last modified: 03-08-2025, 07:59 AM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
கோவையின் புறநகர் பகுதி ஒன்றில் சில ஆயிரம் வீடுகளை நெருக்கமாக் கொண்ட தெரு அது.
“சரிங்கமா” கிளம்பினான்.
கீழே மேலே பக்கவாட்டில் என்று எல்லாப் பக்கங்களிலும் வீடுகள் ஒன்றுக்கொன்று தொட்டுக் கொள்வதைப் போல மிக நெருக்கமாகத்தான் இருக்கும்.
ஒரு சில வீடுகளுக்கிடையே சின்னச் சின்ன சந்துகள்.
அந்தத் தெருவில் ஜோதிலட்சுமி அம்மாள் என்கிற பெண்மணி வாடைக்காகக் கட்டி விட்டிருக்கும் நான்கு அறைகளில் ஒன்றில்தான் வாடைக்கு தங்கியிருந்தான் வினோத் குமார்.
இருபத்தியைந்து வயது இளைஞன். அதிகமாக தாடி வைத்துக் கொள்ள மாட்டான். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முகச் சவரம் செய்து கொள்வான்.
மாநிறமானவன். நல்ல உயரமுள்ளவன். மிதமான உடம்பு. ஜிம் பக்கமெல்லாம் தலை வைத்தும் படுத்ததில்லை. ஆனாலும் இளமையின் வசீகரம் அவன் உடம்பில் இருக்கும்.
அன்று காலை நேரப் பரபரப்பில் அவசரமாகக் கிளம்பி, வண்டியை எடுத்தபோது கடைக்கு வெளியே நின்றிருந்த ஜோதிலட்சுமி, “தம்பி” என்று அவனைக் கூப்பிட்டாள்.
வண்டியை நிறுத்தினான்.
“அம்மா..”
முகத்தில் வெயில் பட நின்றிருந்தாள். பழுத்த பப்பாளி போன்ற அவளின் நிறம் பளிச்சென்றிருந்தது.
சிவப்பு நிறப் புடவையிலிருந்தாள். தலைக்கு குளித்து நீளமற்ற சுருள் கூந்தலை முனையில் முடிச்சுப் போட்டு முதுகில் பரத்தி விட்டிருந்தாள். நெற்றியில் திருநீறு குங்கமம். பெரிய பொட்டு. கண்களுக்கு கண்ணாடி போட்டிருந்தாள்.
“மார்க்கெட் வழியா போவியா?” அந்த அம்மாளின் குரல் சற்று பெரியது. எவரையும் மிரட்டும் தோரணை கொண்டது.
“ஏங்கமா?” அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் விசாரிக்க வேண்டியே இல்லை. இதைச் செய், அதைச் செய் என்று கட்டளையிட்டால் போதும். அதை மீறவும் முடியாது. மீறினால் அப்பறம் அறையைக் காலி செய்துவிட வேண்டியதுதான்.
“வெத்தலை தீந்து போச்சு. போறப்ப அப்படியே வெத்தலைக் கடை பாயை பாத்து நான் வெத்தலை கொண்டு வரச் சொன்னேனு சொல்லிட்டு போயிரு. போன் பண்ணா அந்தாளுக்கு போக மாட்டேங்குது”
“சரிங்கமா.. சொல்லிர்றேன்”
“சாப்பிட்டியாடா?”
“இல்லைங்கமா.. போய்த்தான்”
“மறக்காம சொல்லிட்டு போயிரு”
“சரிங்கமா” கிளம்பினான்.