Adultery நான் செஞ்ச தப்புக்கு இது தேவை தான்
#4
கார்த்திக் லலிதாவை வீட்டிற்கு கூப்பிட்டு வந்தான்.. அவனுக்கு என்ன நடந்தது ஏது நடந்தது எதுவும் தெரியவில்லை.. அவன் காதலித்த திவ்யா எங்கே போனாலும் இன்று யோசித்துக் கொண்டுதான் இருந்தான்.. கார்த்திக் வீட்டு வாசலில் கார் நின்றது.. இருவரும் இறங்கி வீட்டு வாசலுக்கு சென்றனர்.. அங்கு குடும்பமே காத்திருந்தது..

 சீதா : இவதான் என் மருமகளா.. நல்ல மகாலட்சுமி மாதிரி அழகா இருக்கிறமா... உன் பேர் என்ன மா 

கார்த்திக் : லலிதா மா..

லலிதா : ஹலோ அவங்க என்கிட்ட தான் கேட்டாங்க.. நானே பதில் சொல்றேன்.. என் பெயர் லலிதா.. உங்க பேரு சீதா.. உங்க ஹஸ்பண்ட் பெயர் கதிரவேல்.. நேர்மையான ஜட்ஜ் அப்படின்னு பெயர் எடுத்தவர்.. எந்த குற்றவாளியும் இவர்கிட்ட இருந்து தப்பிச்சதே கிடையாது.. நேர்மையின் சிகரமாய் இருந்தவர் 

சீதா : சூப்பர்மா எப்படிமா இதெல்லாம் உனக்கு தெரியும் 

லலிதா : ஹ்ம்ம்ம் என் அப்பாவோட சாவுக்கு காரணமானவன்.. அவன பத்தி எனக்கு தெரியாதா.. உங்களோட மொத்த குடும்பத்தையும் பழி வாங்கத்தான் இந்த வீட்டுக்கே வந்து இருக்கேன் தப்பான தீர்ப்பு கொடுத்து என் அப்பாவை கொன்னுட்டான் அவன் புருஷன்.. என்று நினைத்துக் கொண்டு  இல்ல மாமாவ பத்தி  பேப்பர்ல படிச்சிருக்கேன்.. அதான் 

கதிர்வேல் : அப்போது அங்கு வந்தார்.. டேய் நல்ல மருமகளா தான் கூப்பிட்டு வந்திருக்க.. இனி நம்ம குடும்பம் நல்லபடியா இருக்கும்.. சீதா மருமகளை வீட்டுக்கு உள்ள கூட்டிட்டு போமா.. கார்த்திக் லலிதா இருவரும் அவர்கள் ரூமுக்கு சென்றார்கள்..

 கார்த்திக் : இப்ப வரைக்கும் எனக்கு எப்படி கல்யாணம் நடந்தது என்று எனக்கு தெரியல.. அத நான் வீட்லயும் சொல்லல.. என் ரெண்டு தங்கச்சிகளும் திவ்யாவா அண்ணியா வரணும்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க.. ஆனா அவங்க ஏன் இன்னைக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்காங்க.. அம்மாவும் அப்பாவும் திவ்யாவ பார்க்கவே இல்லை.. ஆனா என் தங்கச்சிகள் ரெண்டு பேரும் திவ்யாவை பார்த்து இருக்காங்க.. நீ,  நான் காதலிக்கிற பொண்ணு இல்லன்னு அவங்களுக்கு தெரியும்.. அப்படி இருந்தும் ஏன் அமைதியா இருக்கிறாங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே 

லலிதா : பேசாம தூங்குறீங்களா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்று எரிச்சலில் சொன்னால் 

கார்த்திக் : இவ என்ன மூஞ்சி ஒரு மாதிரி வச்சுக்கிட்டு சொல்றா.. இவ முகமே சரியில்லையே ஒருவேளை என்னை ஏமாற்றி கல்யாணம் செய்து இருக்கிறாளோ.. உண்மை மட்டும் வெளியே வரட்டும் அப்புறம் இருக்கு.. என்று நினைத்துக் கொண்டு உறங்கினான் 

லலிதா : அவளுடைய பேக்கில் இருந்து அவளுடைய அப்பா போட்டோ எடுத்து.. அப்பா உங்க சாவுக்கு காரணமானவன் வீட்டுக்கு வந்துட்டேன்.. அவன் குடும்பத்தோட சந்தோசமா இருக்கிறான்.. நான் வந்துட்டேன் இல்ல இனி இந்த குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் நரகத்தை கொடுக்கப் போறேன்.. நீங்க எங்களை விட்டு போய் நானும் அம்மாவும் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்.. அதே மாதிரி இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருத்தரையும் கதற விடுவேன்.. இந்தக் குடும்பத்தில் உள்ள எல்லாத்தையும் பிரிச்சு.. அந்தக் கதிரவேலை தனி மரமா ஆக்குவேன்.. இது நான் உங்களுக்கு கொடுக்கிற வாக்கு பா.. என்று அந்தப் போட்டோவை பார்த்து அழுது கொண்டு இருந்தாள்..

 தொடரும்

 படித்துவிட்டு கருத்துகளை கூறவும்..

 இது சிறு பதிவு தான்  அடுத்த பதிவு பெரிய பதிவாக போட முயற்சிக்கிறேன்
[+] 2 users Like Msiva03021985's post
Like Reply


Messages In This Thread
RE: நான் செஞ்ச தப்புக்கு இது தேவை தான் - by Msiva03021985 - 15-07-2025, 10:34 PM



Users browsing this thread: 1 Guest(s)