01-07-2019, 05:02 PM
(This post was last modified: 01-07-2019, 05:03 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
இங்கிலாந்து வெற்றி : பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு சிக்கல்?
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றதால் இலங்கை அணிக்கு உலகக் கோப்பை அரை இறுதிக்கான வாய்ப்பு பறிப்போய் உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் உற்று நோக்கியிருந்தன. ஏனென்றால் இந்த அணிகளின் அரை இறுதிச்சுற்று வாய்ப்பு இப்போட்டியின் முடிவில் இருந்தது
இந்நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனையடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. அதேபோல பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளின் அரை இறுதி வாய்ப்பும் சற்று குறைந்தே காணப்படுகிறது.
ஏனென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறவேண்டும் என்றால் அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெறவேண்டும். அத்துடன் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும். அப்போது பாகிஸ்தான் 11 புள்ளிகளுடனும் இங்கிலாந்து அணி 10 புள்ளிகளுடன் இருக்கும். எனவே பாகிஸ்தான் அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
அதேபோல பங்களாதேஷ் அணியும் அடுத்த நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெறவேண்டும். அப்போது அந்த அணி 11 புள்ளிகளுடன் இருக்கும். அதே சமயம் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடன் தோற்கும் பட்சத்தில் அந்த அணி 10 புள்ளிகளுடன் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தற்போது 11 புள்ளிகளுடன் உள்ளது. இந்த அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோற்றால் அதே புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும். அப்போது பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அணிகளில் ஏதாவது ஒரு அணி 11 புள்ளிகளுடன் இருக்க வாய்ப்பு உண்டு. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த அணிகள் ரன் விகிதம் பார்க்கப்படும். இந்த ரன் விகிதத்தில் நியூசிலாந்து அணி அதிகமாக உள்ளதால், அந்த அணி தகுதிப் பெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது

first 5 lakhs viewed thread tamil