Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மரணத்தின் விளிம்புக்குச் சென்ற எங்களை மரம்தான் காப்பாற்றியது - ஊட்டி விபத்தில் உயிர் பிழைத்த பயணி
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப் பாதையில் அரசுப் பேருந்து நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதில் பல அடி பள்ளத்தில் பாய இருந்த பேருந்தை ஒற்றை மரம் தடுத்து 34 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
 
[Image: IMG-20190630-WA0011_19023.jpg]
ஈரோட்டிலிருந்து ஊட்டிக்கு 34 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தைமேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ஓட்டுநர் இயக்கிவந்தார். பேருந்து குன்னுார் ஊட்டி மலைப்பாதையில்  பெரிய பிக்கட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது  எதிரில் வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றார். அப்போது சற்றும் எதிர்பாராமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. பேருந்து தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது.  சாலையோரத்தில் இருந்த பைன் மரத்தில் மோதி பேருந்து நின்றது. மரத்தால் தடுக்கப்பட்ட பேருந்து அந்தரத்தில் தொங்கியது . இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் தங்களின் வானங்களை நிறுத்திவிட்டு பேருந்தில் தவித்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .பேருந்தின் ஒட்டுநர் வேலுச்சாமிக்கு மட்டும் பேருந்து மரத்தில் மோதியதில் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இது குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், ``பேருந்து சீரான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. திடீரென பேருந்து சடசடவென பள்ளத்தில் பாய்ந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எல்லோரும் அலறிவிட்டோம் எங்களின் கதை முடிந்துவிட்டது என நினைத்தோம். திடீரென பேருந்து அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. எங்களால் நம்பவே முடியவில்லை கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்ற எங்களைக் கடவுள்போல இந்த மரம்தான் காப்பாற்றியது. மரத்தில் மோதி பேருந்து நிற்காமல் போயிருந்தால், பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும்” என்றார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 01-07-2019, 04:58 PM



Users browsing this thread: 94 Guest(s)