03-07-2025, 08:44 PM
(03-07-2025, 08:36 PM)Fun_Lover_007 Wrote: வாழ்த்துக்கள் நண்பரே. இந்தக் கதையின் கதைக்கரு கதையின் மீது தாறுமாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் ஒரே நேரத்தில் 3 கதைகளை எழுதுவது சரிப்பட்டு வருமா என்று நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் மற்ற கதைகளுக்கு பதிவுகளைத் தருவதில் தாமதம் ஏற்படலாம். அது அந்தக் கதையை விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். நன்கு யோசித்துக் கொள்ளவும்.
நிச்சயமாக மற்ற கதைகளின் தொடர்களில் சிறிது தொய்வு ஏற்படும். ஆனால் எந்தக் கதையும் பாதியிலேயே நின்றுபோகாது. அதற்கு நான் உறுதியளிக்கிறேன். நெடுந்தொடர் கதைகளாக என்னால் எழுத முடியாது. அதனடிப்படையில் குறுந்தொடர் கதைகளாக எழுதுவேன்.
நான் எழுதும் கதைகளின் கரு இதுவரை எந்தக் கதைகளிலும் இல்லாததாக இருக்கும்.பொழுதுபோக்கிற்காக மட்டுமே வாசகர்கள் இதைப் படிக்கவேண்டும் என தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.