மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 7

“ அம்மா!

“ நாம் பிரிந்த நாள் முதல்

“ என்னை காணும் எல்லாவற்றிலும்

“ உன்னையே தேடுகிறேன்....

“ நீ காணும் அனைத்திலும்...

“ நான் தெரிகின்றேனா அம்மா?

காலை நேரத்து கானாங்குருவிகள் காதுகளுக்குள் நுழைந்து இசைப்பது போல் உச்சபட்ச கூவலில் திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் மான்சி..... கடிகாரத்துக் குருவிகள் தலையை நீட்டி நேரமாகிவிட்டதை உணர்த்திவிட்டு தலையை இழுத்துக்கொண்டு கதவை மூடிக்கொண்டன....

முதல்நாள் இரவு சித்தியும் ரீத்துவும் கொடுத்த அதிர்ச்சியில் இரவெல்லாம் உறங்காமல் கிடந்தவளை உறக்கம் வந்து எப்போது தனது உலகுக்கு அழைத்துச் சென்றது என்று தெரியாமலேயே உறங்கிப் போனாள்..... இப்போது குயில்கள் கூவி எழுப்பினாலும் இரவின் தாக்கம் அப்படியேதான் இருந்தது....

அவசரமாய் வேலைகளைத் தொடங்கினாள்.... ரீத்துவுக்குப் பிடித்த சன்னா மசாலாவும் பூரியும் செய்து வைத்துவிட்டு அப்பாவுக்கும் இவளுக்கும் உப்புமாவை தயார் செய்யும் போது பின்னால் கலா வந்து நின்றாள்...

"நைட் சொன்னேன்ல,, அது விஷயமா உன் அப்பாகிட்ட எப்ப பேசப் போற?" என்று கேட்க...

துப்பட்டாவால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு "ரெண்டு நாள் கழிச்சுப் பேசுறேன் சித்தி,, நீங்க அவங்களுக்கு சம்மதம் சொல்லிடுங்க" என மான்சி புன்னகையுடன் சொல்லவும்...

அவளை அலட்சியமாகப் பார்த்து சிரித்த கலா "அவங்களுக்கு சம்மதம் சொல்லி ரொம்ப நேரமாச்சு... உனக்கும் உன் அப்பாவுக்கும் தகவல் மட்டும் தான் சொல்றேன்... எதையாவது மாத்திப் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த நினைச்சீங்க....... அப்புறம் நடக்கிறதே வேற" முகம் இறுக எச்சரித்தாள்...

"இல்ல சித்தி,, நான் முடிவு பண்ணிட்டேன்..... ரீத்துவுக்கு அந்த மாப்பிள்ளைக் கூடதான் கல்யாணம்... அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியது என் பொறுப்பு....." என்ற மான்சி "ஆபிஸ்க்கு நேரமாச்சு சித்தி.... முடிஞ்சா நாளைக்கே அப்பாக்கிட்ட பேசிடுறேன்" என்று கூறிவிட்டு குளிப்பதற்காக உடைகளை எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கமாக சென்றாள்....



வழக்கமான ரயில் பயணம் பெரும் சுமையாக இருந்தது...... எங்கே இறங்க வேண்டும் என்பதைக்கூட மறந்து நின்றிருந்தவளை தினமும் உடன் வரும் சக பயணியொருத்தி தோளில் தட்டி "என்னாச்சு மான்சி? ஸ்டேஷன் வந்தாச்சி" என்று இந்தியில் சொல்லவும்.. சட்டென்று நிகழ் காலத்துக்கு வந்து அவசரமாக இறங்கினாள்

தளர் நடையாக அலுவலகம் நோக்கி நடந்தாள்.... மனமோ இரை தின்ற பசுவாக நடந்தவற்றை மீண்டும் மீண்டும் அசைபோட்டது...

ரீத்துவுக்கும் சத்யனுக்கும் கல்யாணம் நடந்தால் தான் என்ன? அவன் உனக்கு வெறும் நண்பன் தானே? தங்கையின் கணவனுடன் நட்பு கொள்ளக் கூடாதா? தேவையில்லாமல் இவ்வளவு வருந்தக் காரணம் என்ன? அவன் வெறும் நண்பன் மட்டும் தானே? நண்பனுக்கு திருமணம் ஆகக்கூடாது என்று நினைக்கும் தோழியா நீ? அடுக்கடுக்காய் அர்த்தம் பொதிந்த கேள்விகள் ஆயிரமாயிரம் உலா வந்தன....

ஆண்டவனின் விளையாட்டை எண்ணி வியக்காமலும் இருக்கமுடியவில்லை...

ஏதோவொரு ரயில் பயணத்தில் போடப்பட்ட முடிச்சு... இன்னும் அவிழ்க்கப்படாமல்..... அதுவும் அன்று என் அம்மாவின் ஆத்மாவை சாட்சியாக வைத்து அவன் போட்டச் செயின்..... அவனே என் தங்கைக்கு மாப்பிள்ளையாக... அவனே எனக்கு ரசிகனாக... என்னிடம் உரிமையுடன் பேசும் அவன் இனி?.... ஒன்றுமே புரியவில்லை மான்சிக்கு... விழிகளில் துளிர்த்த நீரை கைக்குட்டையால் ஒற்றியபடி அலுவலகத்துக்குள் நுழைந்தாள்....

நேற்று மாலை அவனிடம் பேசாமலே போனதற்காக காத்திருந்தானா? அல்லது கல்லூரிக்குப் போயிருப்பானா? எதுவாயிருந்தாலும் இன்று மெயிலை ஓபன் செய்வதில்லை என்ற முடிவுடன் தனது வேலைகளில் மூழ்கினாள்.....

அதற்கேற்றார்ப் போல் அன்று அதிகமாகத்தான் வேலையிருந்தது... புதிதாக சில டாக்யூமென்ட்களை டைப் செய்ய வேண்டியிருந்தது... டைப் செய்ததை எம்டியின் பார்வைக்கு அனுப்பிவிட்டு அவர் ஓகே சொன்னதும் மற்ற ஊழியர்களுக்கு அவற்றை பார்வேர்ட் செய்தாள்... மதிய உணவு வேலை வரையிலும் வேறு எதையும் சிந்திக்க முடியாதளவுக்கு பணிகள் இருந்தன...

மதியம் ஒன்று பத்துக்கு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு டைனிங் ஹால் சென்று சாப்பிட அமர்ந்தாள்... உணவு ஒரு வாய் கூட இறங்கவில்லை.... பக்கத்தில் இருந்த க்ளார்க் "சாப்பாடு பிடிக்கலைன்னா எடுத்து வச்சிடு மான்சி,, நான் கொண்டு வந்ததை ஷேர் பண்ணிக்கலாம்" என்று கரிசனத்துடன் இந்தியில் கூற....

"வேணாம் அண்ணா.... சாப்பிடப் பிடிக்கலை" என்று புன்னைகையுடன் மறுத்துவிட்டு எடுத்து வந்திருந்த உணவை சுத்தம் செய்யும் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள்... நேரம் இரண்டாகியிருந்தது...

எதிரேயிருந்த மானிட்டர் அவளை ஆவலுடன் நோக்குவது போல் இருந்தது..... ஆன் செய்யலாமா? விரல்கள் நடுங்க கீ போர்டில் என்டர் கொடுத்து மௌசில் கை வைத்தாள்..... விரல்கள் தானாக யாகூ மெயிலை ஓபன் செய்தது... ஓபன் ஆக எடுத்துக் கொண்ட இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகம் போல கடந்து சென்றது....

ஓபன் ஆனதுமே மெயில்களை செக் செய்தாள்... சத்யனிடமிருந்து மட்டுமே முப்பதிற்கும் மேற்பட்ட மெயில் வந்து குவிந்திருந்தன... அதுவும் சற்றுமுன் கூட ஒரு மெயில் வந்திருக்க... "அய்யோ இன்னுமா தூங்கலை?" என்று வாய்விட்டே கூறினாள்.....

ஒரு ஒரு மெயிலாக ஓபன் செய்தாள்..... ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தாள்

"சிமி,, ஏன் இன்னும் கவிதை வரலை? என்னாச்சு?"

"ஆபிஸ்ல நிறைய வேலையா சிமி?"....

"என்னாச்சும்மா? எனக்கு பயங்கர டென்ஷன் ஆகுதே சிமி?"

"சிமி ப்ளீஸ் இப்படி அமைதியா இருக்காத... ஒரு மாதிரி வலிக்கிது சிமி"

"நீ ஆன்லைன்ல தான் இருக்கேன்னு தோணுது... இருந்துகிட்டே வரமாட்டேன்றியா சிமி?"

"நான் ஏதாவது தவறா பேசிட்டேனா? அப்படியிருந்தா மன்னிச்சிடு சிமி"

"சிமி ப்ளீஸ் இப்படி சித்திரவதை பண்ணாத... வந்து ஒரு வார்த்தை பேசிட்டாவது போய்டு சிமி"

"நான் பைத்தியக்காரனாடி? இந்த மவுனம் ரொம்ப கொடூரமா இருக்கு சிமி"

"நான் என்ன செய்யனும்? எதுவுமே புரியலையே சிமி"

"ஏன்டி என்னை இப்படிக் கொல்ற? நான் என்ன தவறு பண்ணிருந்தாலும் ஒரு நிமிஷம் வந்து அதை சொல்லிட்டாவது போயேன் சிமி?"

"சிமிம்மா,, வலிக்கிதே சிமி.... ப்ளீஸ்டி"

"நான் உனக்கு பிடிக்காததை செய்துட்டேனா?"

"இனி நான் எப்படி பேசனும்னு நீயே சொல்லு சிமி... அது போலவே நடந்துக்கிறேன் சிமி..... இப்போ மன்னிச்சு வந்துடும்மா" 

"என்னைப் பார்த்தா பாவமா இல்லையாடி? அப்படியென்னடி உனக்கு வைராக்கியம்?"

"சிமி.... சிமி.... ப்ளீஸ்டி... வந்துடேன் ப்ளீஸ்"

"நான் உன் ரசிகன் இல்லையா சிமி?... ஒரு நிமிஷம் வந்து பேசிட்டுப் போயிடேன்...."

"பயமாருக்கு சிமி,, உனக்கு ஏதாவது ஆகிடுச்சோன்னு ரொம்ப பயமாருக்கு சிமி"

"உடம்பு ஏதும் சரியில்லையாம்மா? மதியத்தோட லீவு போட்டுட்டுப் போய்ட்டயா?"

"அய்யோ எப்படி யோசிச்சாலும் நான் எதுவும் வரம்பு மீறி பேசினதா தெரியலையே? எப்பவும் போலத்தானே பேசினேன் சிமி?"

"இப்பவும் வரலையா? சிமி உனக்கு என்ன தான் ஆச்சு?"

"சிமி நான் இன்னைக்கு முழுக்க சாப்பிடலை... காலேஜ் கூட போகலை... லாப்டாப்பை வச்சுக்கிட்டு அப்படியே படுத்திருக்கேன்.... உனக்காக... நீ வருவேன்னு காத்திருக்கேன் சிமி... நீ வந்து பேசினா தான் சாப்பிடுவேன் சிமி"

அத்தனை மெயிலிலும் அவனது தவிப்பும் துடிப்பும்..... கடைசியாக இந்த மெயிலைப் படித்ததும் மான்சியால் தாங்க முடியவில்லை... யாரும் கவனிக்காதவாறு உதட்டைக்கடித்து அழுகையை அடக்கியபடி டாய்லெட்க்கு ஓடினாள்.....

உள்ளே சென்று கதவை மூடியதும் அழுகை வெடித்துக் கொண்டு வெளி வந்தது.... சத்தம் வெளியே கேட்காதவாறு தண்ணீர் குழாயைத் திறந்து விட்டாள்.... எனக்காக சாப்பிடலையா சத்யா? ஏன்டா ஏன்? நான் யார்னு தெரியுமா உனக்கு? நான் இப்ப என்ன செய்றதுன்னே புரியலையே சத்யா? வாய்விட்டுப் புலம்பியழுதாள்...

சித்திக்குக் கொடுத்த வாக்கு.. சத்யனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த தங்கையின் சந்தோஷம்.... குடும்ப சண்டைகள் தீர்ந்து நிம்மதி வர சத்யன் ரீத்துவின் திருமணம் கட்டாயம் நடந்தாக வேண்டும்... அப்படின்னா இதோ மெயிலில் புலம்பியிருக்கும் சத்யனை எப்படி தவிர்ப்பது? ஏதாவது செய்து சத்யனை ஒதுக்கினாலன்றி வேறு வழியில்லை என்று தெளிவாகப் புரிந்தது...

முடிவெடுத்தாலும் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.... தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்தாலும் கண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து நிற்காமல் வழிந்தது...

மான்சியின் கைகள் அவளையுமறியாமல் தனது கழுத்தை வருடியது... சத்யன் அணிவித்தச் செயின்... சுடிதாருக்குள் கிடந்ததை வெளியே இழுத்தாள்.... லாக்கெட்டை பிரித்துப் பார்த்தாள்... அருணகிரியும் சந்திராவும் நான்கு வயது சத்யனை அணைத்தபடி.. மூவரின் முகம் மட்டும் நெருக்கமாக.... கண்ணீர் அருவியாக... கரைபுரண்டோடும் ஆறாக வழிந்தது..... "சத்யா...." என்று உதடுகள் ஆழமாக உச்சரிக்க.... அந்தப் படத்தை எடுத்து தனது உதடுகளில் வைத்து அழுத்திக் கொண்டாள்..... 

இத்தனை நாட்களாக தனது தாயின் இறப்பின் அடையாளமாகத்தான் இந்த செயினை அணிந்திருந்தாள்... இன்று ஏனோ அதன் அர்த்தமே வேறாகத் தோன்றியது... அணிவித்த சத்யன் மட்டுமே தெரிந்தான்.... கண்ணீர் மறைத்த கண்களுக்குள் நிழலாய் ஒரு கம்பீர உருவம் தோன்றி அந்த செயினை புதிதாக அவள் கழுத்தில் போடுவது போல் ஒரு காட்சி.... உயிர் வரை சிலிர்த்து அடங்கியது... புதிதாக தாக்கிய உணர்வுகளின் தாக்கத்தை மான்சியால் தாங்க முடியாமல் டாய்லெட்டை மூடி அதன் மீது அமர்ந்து முகத்தை பொத்திக் கொண்டாள்....

"இந்த செயின்? இது? இது? நீ எனக்குப் போட்ட இந்த செயின் தான் எனக்கும் உனக்குமான உறவுக்கான பாலமா சத்யா? அப்படின்னா இது நீ எனக்குப் போட்ட தாலியா? என்னால முடியலையே? இதன் அர்த்தம் இன்னைக்கு தானே புரியுது சத்யா? அம்மா,, அம்மா,, இனி நான் என்ன செய்யட்டும் அம்மா? ஏதாவது வழிகாட்டேன்ம்மா".... முகத்தை மூடிக்கொண்டு புலம்பியவளின் புலம்பலைக் கேட்க வேண்டிய இருவருமே அவளருகே இல்லை... ஆனாலும் அவர்களுக்கு கேட்கும் தானே?

யாரோ வெளியேயிருந்து கதவைத் தட்டினர்... துப்பட்டாவால் சட்டென்று முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் "ஸாரி,, ஒரு நிமிஷம் ப்ளீஸ்" என்று கதவருகே நின்று கூறிவிட்டு அங்கிருந்த கண்ணாடியைப் பார்த்து தனது உடைகளை சரிசெய்து கொண்டு வெளியே வந்தாள்

மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தாள்..... தனது கைப்பையிலிருந்த அம்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள்... அழகான புன்னகையுடன் சிரிக்கும் அமைதியான முகம் "யார் என்ன முடிவெடுத்தாலும் நான் என் முடிவில் இருந்து மாறமாட்டேன்ம்மா..... சத்யன் ரீத்துவுக்கு தான்... எந்த சந்தோஷமும் இல்லாம ஜடமாக வாழும் சித்திக்கு என்னால குடுக்க முடிஞ்ச சிறிய சந்தோஷம் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறது தான்.... சித்தி சொன்னது போல நான் திருமணம் ஆனவளாகவே இருந்துட்டுப் போறேன்... நிஜமும் அது தானேம்மா? எனக்குதான் ஒரு வயசுலயே கல்யாணம் ஆகிடுச்சே..... நான் சத்யன் மனைவி தான்... அந்த உண்மை எனக்குள்ளேயே புதைஞ்சி போகட்டும்... நான் வாழ்வேன் சத்யனை மனதில் சுமந்து என் தகப்பனுக்காக வாழ்வேன்... சத்யனுக்கு ரீத்து தான் நிஜமான மனைவியாக இருக்கட்டும்... என் முடிவில் மாற்றம் வராதும்மா" கண்ணீர் கலந்து வந்த குரலானாலும் அதிலிருந்த உறுதி மான்சி தனது நாடகத்தைத் தொடங்கிவிட்டாள் என்று கூறியது.....






" எனக்கு உருக் கொடுத்த...

“ உயிர் பூவே!

“ எனக்காக,

“ மீண்டும் ஓர் உருவம் பெற்று...

“ வந்து விட்டாயோ?

“ ஆனாலும் இப்போது நீ வேண்டுமே...

“ அம்மா,,

“ ஒரு முறையாவது..

“ உன் இடைக் கட்டி...

“ மடி சாய்ந்து....

“ நான் பட்ட துன்பமெல்லாம் கூறியழ...

“ மகளே,, வேண்டாமடி கண்ணே...

“ என கூறிவிடவாவது வந்து போய் விடேன்!!!

நெஞ்சின் கொதிப்பு அடங்கி மனதை நிலைப்படுத்தினாள்... கண்மூடி நிதானித்தாள்... உணர்வுகள் அத்தனையும் ஓர் முனைக்கு வந்தது.... இதுதான் மான்சி.... தாயின்றி அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆண்டவன் கொடுத்த அற்புதப் பரிசு நிதானம்... எத்துனை துன்பம் வந்தாலும் தன்னையிழக்காத நிதானம்.... இவளை உயிர்ப்பதும் இந்த நிதானம் தான்....

மீண்டும் மெயிலை ஓபன் செய்தாள்.... சாட்டை ஆன் செய்தாள்... அடுத்த நிமிடம் "சிமிம்மா?" என்று வந்தான் சத்யன்...

சிமிம்மா? சில்லென்று இதயத்தைத் தாக்கியது.. நிதானத்தைத் தக்கவைத்துக் கொண்டு "ஹாய் சத்யன் ஹவ் ஆர் யூ?"

அவனிடம் நிமிட நேர மவுனம்...

"இருக்கீங்களா?"

"ம்ம்,, இருக்கேன்... அதென்ன புதுசா ஹவ் ஆர் யூ? என் மெயில்லாம் பார்த்தியா? படிச்சியா? அப்புறம் எப்படி நான் நல்லாருக்கேனா என்று கேட்க முடிஞ்சுது?"

"ம் படிச்சேன்,, ஸாரி நேத்து ஒர்க் அதிகம்... ஒர்க் முடிஞ்சு வீட்டுக்குப் போக டைம் ஆகிடுச்சு அதான் கிளம்பிட்டேன்"

"எப்படி சிமி? எப்படி இவ்வளவு சாதரணமா பேச முடியுது? ஒருத்தன் காத்திருப்பான்னு கூடவா உனக்குத் தெரியாது?"

"நீ பேசறது தான் டூ மச்சா இருக்கு சத்யன்... இது ஆன்லைன்... இங்க போய் காத்திருந்தேன்னு சொல்றது ரொம்ப அபத்தம்.... எதிர் பக்கம் இருக்குறவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.... அதையெல்லாம் விட்டுட்டு உங்கக்கூட சாட் பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா?" சத்யனுக்குப் புரிய வைக்கும் நோக்கில் மிக நீளமாக மெசேஜ் அடித்து அனுப்பினாள்....

சற்றுநேரம் பொருத்து "ஓ...... அப்படியா?" என்று அவனிடமிருந்து பதில் வர... அதில் அவனது வலி புரிந்தது...

"ம் அப்படித்தான்.... தயவுசெஞ்சு இனிமேல் இப்படி சாப்பிடாமல் மெயிலை ஓபன் பண்ணி வச்சுக்கிட்டு பிடிவாதமா உட்கார்ந்திருக்காதீங்க.... எனக்கும் நிறைய வேலைகள் இருக்கும்"

மீண்டும் சில நிமிட தாமதம்..... பிறகு "சிமி,, வீட்டுல ஏதாவது பிரச்சனையாடா? மறுபடியும் வலிக்கும் படி ஏதாவது நடந்துடுச்சா? நீ இப்படிலாம் பேசுறவ கிடையாதேடா? என்னம்மா ஆச்சு? என்கிட்ட சொல்லக் கூடாதா?" 

அவனது இந்த வரிகளில் உருகிப் போனாள் மான்சி.... "அம்மா" என்று வலியுடன் உதடுகள் உச்சரிக்க "நான் ஓகே சத்யன்.... நீங்கதான் புரிஞ்சுக்காம பேசுறீங்க"

"புரிஞ்சுக்கனுமா? நீ என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு சிமி.... நேத்தெல்லாம் நான் துடிச்சத் துடிப்பு உனக்குப் புரியலையா சிமி? நான்.............."

"ஏன் புரியனும் சத்யா? நான் கவிதை எழுதுறேன்.... நீங்க அதை ரசிக்கிறீங்க... அவ்வளவு தானே நமக்குள்ள இருக்கும் ரிலேஷன்ஷிப்? இப்படி தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவது இதுபோன்ற ஆன்லைன் நட்புக்கு உதவாது சத்யன்.... ஐடியை குளோஸ் செய்தால் நாளை முதல் நீங்க யாரோ நான் யாரோ.... அப்புறம் ஏன் இந்த துடிப்பும் தவிப்பும்?... தேவையற்றது" தீர்கமான வார்த்தைகளை சுமந்து வந்த வரிகள்....

சத்யனிடமிருந்து பதிலேயில்லை.... "ஓகே சத்யன்,, நான் ஆபிஸ் ஒர்க் பார்க்கனும்... கிளம்புறேன்"

"கிளம்பு சிமி,, அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் சிமி"

"ம்ம் சொல்லுங்க"

"நீ என் உணர்வுகளை கொச்சைப்படுத்தி என்னைக் காயப்படுத்திட்ட சிமி... கிட்டத்தட்ட இருபத்துநாலு மணிநேரமா நான் தவிச்சதை வெறும் அபத்தம்னு சொல்லி என்னை காயப்படுத்திட்ட... ஐ ஹேட் யூ சிமி" என்று பதில் அனுப்பியவன் அடுத்த நிமிடம் ஆப்லைன் போய்விட்டான்....

ஐ ஹேட் யூ சிமி,, இந்த வார்த்தையை விட்டு மான்சியின் பார்வை நகரவில்லை.... வெறுத்துட்டானா? முடியுமா அவனால்? நார்மலா இரு என்று சொன்னது தவறா?

துளிர்த்த நீரை துடைத்துவிட்டு "கோபத்தை உணவில் காட்ட வேண்டாம்.. தயவுசெய்து சாப்பிடவும்... இதுவும் கடந்து போகும் சத்யன்..... உங்கள் தோழி சிமி" என்று டைப் செய்து அவனுக்கு மெயில் செய்துவிட்டு தனது வேலைகளில் மூழ்கினாள்....

நிமிர விடவில்லை அலுவல்கள்.... ஆறை கடந்து ஐந்து நிமிடமானது.... மான்சியின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.... நேற்று போல் சாப்பிடாமல் அமர்ந்திருப்பானோ? இல்லை கோபமாக என்னை உதறிவிட்டு தனது வேலைகளைப் பார்த்திருப்பானா? 

சரி கவிதைகள் பதிவு செய்யும் சாக்கில் அவன் லைக் கொடுக்க வந்தால்? அவசரமாக கவிதைகளை வடித்துப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்....


“ உலகின் சூத்திரதாரி வேண்டுமானால்..

“ ஆண்டவனாக இருக்கலாம்...

“ அவனால் உயிரை எடுக்க முடியும்..

“ ஓர் உயிரை சுமக்க முடியுமா?

“ சுமப்பாள் அம்மா...

“ கருவறையிலிருந்து கல்லரை வரை..

“ எனைச் சுமப்பாள் என் அம்மா!!


*** *** *** *** *** *** *** ***


“ அம்மா என்றால் அன்பு...

“ அம்மா என்றால் அற்புதம்..

“ அம்மா என்றால் அத்தனையும்...

“ ஆம் நான் காணும் அத்தனையிலும்..

“ என் அம்மா மட்டுமே இருப்பாள்!!


*** *** *** *** *** *** *** ***


“ என் அம்மா போல் ஒர் உறவில்லை..

“ இன்னொரு அம்மாவைத் தவிர!

“ விரல் அசைவில் எனை உயிர்க்கும்...

“ வித்தைத் தெரிந்தவள் என் அம்மா!
[color][font]




பதிவிட்ட சில விநாடிகளில் வந்தான் சத்யன் லைக் கொடுத்துவிட்டு "மனதை வருடும் அம்மா கவிதைகள்... தாயை பிரிந்திருக்கும் எனக்கு வலிக்க பிரிவின் தாக்கத்தை உணர்த்தும் கவிதைகள்... நன்றி சிமி" என்று கமெண்ட் செய்திருந்தான்....

உடனே சாட்டை ஓபன் செய்து "சத்யன்,, ஆர் யூ தேர்?" என்று அழைத்தாள் மான்சி...

"இருக்கேன்,, சொல்லு சிமி"

"நீங்க தூங்கவேயில்லை போலருக்கே சத்யன்? ப்ளீஸ் கொஞ்ச நேரமாவது தூங்களாமே?"

"ம் தூங்கனும் சிமி,, நானும் ட்ரைப் பண்றேன் தூக்கம் வரலை"

"என்ன சத்யன் இது?.... எல்லாத்தையும் சாதரணமா எடுத்துக்க முயற்சிப் பண்ணுங்க"
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 01-07-2019, 12:06 PM



Users browsing this thread: 2 Guest(s)