Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
'சுடுகாட்டுல இருந்துக்கிட்டு கிரேஸியைக் கூப்பிட்டேன்’’ - கமல் நெகிழ்ச்சி

[Image: crazy-mohan-2gif]

‘’சுடுகாட்டுல இருந்துக்கிட்டு கிரேஸியைக் கூப்பிட்டேன். அங்கேருந்து சினிமால, தன் கேரியரைத் தொடங்கினார் கிரேஸி மோகன்’’ என்று பேசினார் கமல்.
நாடக கதாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன், கடந்த ஜூன் 10ம் தேதி காலமானார். இதையடுத்து, இன்று 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கிரேஸி கிரியேஷன்ஸ் தன் நாடகத்தை இன்று மேடையேற்றியது. இதற்கான விழா இன்று நாரத கான சபாவில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கூட சொன்னேன்... செல்போனில் உள்ள பல எண்களை அழிக்கவே மனம் வரவில்லை. கே.பி.சார், நாகேஷ், அனந்து சார், சந்திரஹாசன், இப்போது மோகன். இந்த எண்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கிறேன்.
இருந்ததைக் கொண்டாடுகிறோமேயொழிய, இறந்ததை நான் ஒருபோதும் கொண்டாடுவதே இல்லை. கிரேஸி மோகன் எங்கும் சென்றுவிடவில்லை. இங்குதான் எங்கேயோ உடலின் ஒருமூலையில் இருந்துகொண்டிருக்கிறார். இதைத்தான் பலரும் ஆத்மா என்றும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்றும் சொல்கிறார்கள் போல!
நானும் மோகனும் தினமும் பேசிவிடுவோம். ஏதாவது பேசுவோம். செயிண்ட் மேரீஸ் சுடுகாட்டில் படப்பிடிப்பில் இருந்தபோது, ரோட்டில் கிரேஸி மோகன் மாதிரியே ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். உற்றுப் பார்த்தேன். மோகன் தான். அவர் பெயரைச் சொல்லி கூப்பிட்டேன். சுடுகாட்டில் இருந்து குரல் கேட்கிறதே என்று பயந்திருப்பார் மோகன்.
ஆனாலும் மோகன் வந்தார். அங்கே சந்தித்துக் கொண்டோம். அதன் பிறகு, சினிமாவில் தன் கேரியரையே வளர்த்துக்கொண்டார் கிரேஸி மோகன். அவர் விட்டுச் சென்றதை, கிரேஸி கிரியேஷன்ஸ் தொடரவேண்டும். அவரின் திறமை, அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும். அதில் உங்களுக்கும் எனக்கும் பங்கு இருக்கிறது.
இவ்வாறு கமல் பேசினார்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-07-2019, 10:35 AM



Users browsing this thread: 7 Guest(s)