01-07-2019, 10:17 AM
இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கின் போது முதல் பத்து ஓவர்களில் நிதானம் காட்டி இரண்டாவது பத்து ஓவர்களில் அதிரடியாக ஆடி, பின்னர் நடுவரிசை ஓவர்களில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவர்களில் வேகமான ரன் குவிப்பில் ஈடுபட்டு 337 ரன்கள் சேர்த்தது.
இதற்கு தலைகீழாக இந்திய அணி முதல் 15 ஓவர்களில் மிக மிக நிதானமாக விளையாடி நடுவரிசை ஓவர்களில் ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டு கடைசி கட்ட ஓவர்களில் அதிகளவு ரன்களை குவிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.
'' தோனி கடைசி பௌண்டரி விளாச கடுமையாக முயற்சித்தார் என நினைக்கிறேன். ஆனால் அவை கிடைக்கவில்லை. எதிரணியினர் நல்ல லெந்தில் தரையில் நல்ல இடத்தில் பந்துபட்டு எழும்புமாறு வீசினர். ஆகையால் இறுதி ஓவர்களில் பேட்டிங் சிரமமாக இருந்தது'' என்றார் விராட் கோலி.
படத்தின் காப்புரிமைMICHAEL STEELE
இங்கிலாந்து முதலில் பேட்டிங் பிடித்தபோது 13 சிக்ஸர்களை விளாசியது.
300 பந்துகளில் 338 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை துரத்திய இந்தியா ஒட்டுமொத்த இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸர் விளாசியது. அது 50-வது ஓவரில் தோனி மூலமாக வந்தது.
இந்திய அணி இன்னும் அரை இறுதிக்குத் முழுமையாக தகுதி பெறவில்லை. நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் நிதான ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 213 ரன்களுக்கு ஆப்கானை சுருட்டி வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங் சரிவு விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதானமாக ஆட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் விக்கெட் சரிவில் இருந்து இந்திய அணியை இந்த ஜோடி மீட்டு இருந்தாலும், இறுதிவரையிலும் தொடர்ந்து அப்படியே ஆடியதை ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தன
தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கரும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அடித்து விளையாட வேண்டும் என்ற உள்நோக்கமே இல்லாமல் இந்த ஜோடி ஆடியதாக சாடியிருந்தார். குறிப்பாக சுழற்பந்துகளில் அதிக அளவில் தடுமாறுவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் கூட சேவாக்கும் தோனியின் நிதானமான ஆட்டம் குறித்து கிண்டலாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதான ஆட்டம் சச்சின் விமர்சனத்தை உறுதி செய்யும் வகையில் இருந்தது. 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் 20 சிங்கிள் அடித்தது அவர்களுக்கு அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கமே இல்லாததை தெளிவாக வெளிப்படுத்தி இருந்தது
குறிப்பாக, 39 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பலரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்திய வீரர்கள் இலக்கை நோக்கி சரியாக விளையாடி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாகியிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
நேற்றைய போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சச்சின், தோனி - கேதர் ஜோடி குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவேயில்லை. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள் எனக் கூறிவிட்டு பும்ராவை மட்டும் பாராட்டினார். அவரது ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் ஏன் தோனி - கேதர் ஜோடி குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நேற்றைய போட்டியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹூசைன், சவுரவ் கங்குலியும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஹூசைன், ‘தோனி ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆட்டமிழந்துவிட்டு செல்லலாமே. ரசிகர்கள் எழுந்து சென்று கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறினார். அதற்கு, ‘என்னால் இந்தக் கேள்விக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை’ எனக் கங்குலி தெரிவித்துவிட்டார்.

first 5 lakhs viewed thread tamil