Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
India Vs England : இந்தியா தோல்வி - பேர்ஸ்டோவின் சதம் முதல் தோனியின் சிக்ஸர் வரை

[Image: _107651125_viratanddhoni.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலகக் கோப்பை 2019 தொடரில் இந்தியா முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
உலகக் கோப்பையில் சாதனை சேஸிங்கை நோக்கி விளையாடிய இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் சேஸிங்கில் இந்தியா 300 ரன்களை கடப்பது இது தான் முதல் முறை. ஆனால் வெற்றி பெற இந்த ரன்கள் போதுமானதாக இருக்கவில்லை.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2015 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி போல இப்போட்டியிலும் சேஸிங்கில் சொதப்பியது இந்திய அணி. எனினும் முந்தைய மூன்று போட்டிகளை விட நேற்றைய போட்டியில் கூடுதல் ரன்களை எடுத்தது இந்திய அணி.
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்கு சேசிங் வாய்ப்பு வந்தது, குறைவான இலக்கு என்றாலும் கூட தென்னாப்பிரிக்காவின் தரமான பந்துவீச்சை சமாளித்து கடைசி கட்டத்தில் வெற்றி கண்டது.
அதன்பின்னர் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்து வென்றுவந்த நிலையில் நேற்று சேஸிங்கில் சறுக்கியிருக்கிறது.
[Image: _107651122_gettyimages-1159229735.jpg]படத்தின் காப்புரிமைCLIVE MASON
''ஓவ்வொரு அணியும் ஓரிரு போட்டிகள் தோற்கத்தான் செய்யும். உங்களை விட எதிரணி சிறப்பாக விளையாடியது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம். டாஸ் இப்போட்டியில் மிகமுக்கிய பங்காற்றவில்லை ஆனால் நாங்கள் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. இன்னும் கொஞ்சம் ரன் குவிப்பை அதிகரித்து இலக்குக்கு நெருக்கமாகச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள்'' எனப் போட்டி முடிந்த பிறகு கூறினார் கோலி.
''இன்று சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்'' என ட்வீட் செய்திருக்கிறார் வீரேந்திர சேவாக்.
2007 உலகக்கோப்பையின் இந்தியா லீக் சுற்றில் வெளியேறிய பிறகு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் தொடர்களில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது தோல்வி இது.
தோனியும் கேதர் ஜாதவும் ரன் ரேட் எகிறிய வேளையில் ஆறாவது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 39 ரன்கள் குவித்தனர். இது குறித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
''இந்தியாவின் வெற்றி ஓட்டத்தை தடுக்கக்கூடிய திறன் படைத்த ஒரே அணியாக இங்கிலாந்து இருக்கிறது. கடைசி கட்ட ஓவர்களை தோனி அணுகிய விதம் புரிந்துகொள்ள முடியாத வகையில் குழப்பாக இருக்கிறது'' என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து இந்தியாவை வென்றது எப்படி?
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் பும்ராவின் முதல் கட்ட பந்துவீச்சை திறம்பட சமாளித்த இங்கிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் குவித்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா மட்டுமே (48/0).
முதல் பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி அடுத்த பத்து ஓவர்களில் அதிரடியாக ஆடியது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 01-07-2019, 10:14 AM



Users browsing this thread: 106 Guest(s)