Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தமிழகத்திலேயே முதல்முறை - கோவையில் ஏரியைச் சுற்றி அமைகிறது உயிர்வேலி!

தமிழகத்திலேயே முதல்முறையாக, கோவையில் உள்ள ஓர் ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
[Image: IMG-20190630-WA0006_13022.jpg]
தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. நீர்நிலைகள் வற்றி மைதானங்களாகக் காட்சியளிக்கின்றன. இதையடுத்து, நீர்நிலைகளை மீட்பதற்காக பொது மக்களும், தன்னார்வலர்களும் களமிறங்கி ஆங்காங்கே களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கோவை, சின்னவேடம்பட்டியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஓர் ஏரி இருக்கிறது. ஒரு லட்சம் மக்களின் நிலத்தடி நீர் ஆதாரம், ஆயிரக்கணக்கான விவசாய நிலத்துக்கான பாசனம் என்று இந்த ஏரியை நம்பி ஏராளமான மக்கள் இருந்தனர்.


மாங்கரையிலிருந்து கணுவாய் வழியாகத்தான், சின்னவேடம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் வரவேண்டும். ஆனால், அந்தப் பகுதிகளில் சட்ட விரோதமாகச் செம்மண் எடுப்பது போன்ற இயற்கைச் சுரண்டல்களால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த ஏரிக்குத் தண்ணீரே வரவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து இந்த ஏரியை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
[Image: IMG-20190630-WA0003_13565.jpg]
ஏரியைச் சுத்தம் செய்வது போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, பலரும் இணைந்து, சின்னவேடம்பட்டி பாதுகாப்பு அமைப்பாக உருவாகியுள்ளது. இந்த ஏரி பல்லுயிர்களுக்கும் முக்கியம் என்பதால், இந்த ஏரியைச் சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சின்னவேடம்பட்டி அமைப்பினர், “கோவை வடக்கு பகுதிக்கு இருக்கும் ஒரே நீராதாரம் இதுதான். 8 கி.மீ  தொலைவுள்ள இதன் ராஜ வாய்க்கால் பகுதியை ஆய்வு செய்து, அரசின் அனுமதியுடன் தூர் வாரியுள்ளோம். அவினாசி அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாவது திட்ட மதிப்பீட்டில் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளது.
[Image: IMG-20190630-WA0004_13375.jpg]
பொதுவாக, விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றித்தான் உயிர்வேலி அமைப்பார்கள். ஆனால், பல்லுயிர்ப் பெருக்கத்துக்காக, தமிழத்திலேயே முதல்முறையாக இந்த ஏரியைச்சுற்றி உயிர்வேலி அமைக்கும் பணியை இங்கு தொடங்கியுள்ளோம். இந்த மண்ணுக்குத் தகுந்த நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து வருகிறோம். முழுக்க முழுக்க நாட்டு மரங்களை மட்டுமே நட உள்ளோம்” என்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 01-07-2019, 10:09 AM



Users browsing this thread: 31 Guest(s)