தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி!
பொதுவாக நான் எந்த கதையையும் எழுத ஆரம்பிக்கும் முன் அதன் முழுக்கதையையும் மனதுக்குள் முடித்து விடுவேன்.

என் முதல் கதையான கருப்பு தினம் முதல் இப்போது எழுதிக் கொண்டு இருக்கும் இது காஜிப் பெண்களின் கூடாரம் கதை வரை அனைத்து கதைகளுக்கும் எனக்கு க்ளைமாக்ஸ் வரை மனதில் பதிய விட்ட பிறகுதான் இந்த தளத்தில் பதிய வைப்பேன்.
ஆனால் மனதில் ஒரு முழு கதையை பதிய வைப்பது போல தளத்தில் முழு கதையை பதிய வைப்பது அவ்வளவு எளிதல்ல!.

ஒரு கதையை எழுத நிறைய தேவைகள் இருக்கிறது.

1.நேரம் தேவை
2.தனிமை தேவை
3.பொறுமை தேவை.
4.வாசகர்களின் ஊக்கம் தேவை 
5.அமைதி தேவை
6.சோம்பல் இல்லாத சுறுசுறுப்பு தேவை
7.குடும்பம் , வேலை, போன்கால், வெளிநபர் போன்ற இடையூரு இல்லாத நிமிடங்கள் தேவை.
8.மனத்தெளிவு தேவை.
9.முக்கியமாக ஓய்வு தேவை.
10.ஞாபகசக்தி தேவை.
இது போல் பல தேவைகள் உள்ளது.

இந்த தேவைகளில் சில தேவைகள் கிடைக்காத போது கதையை தொடர முடியாத நிலை ஏற்படும்.

இதையும் தாண்டி பல Effort போட்டு எழுதினால் அது பெரிதாக வாசகர்களால் அங்கீகரிக்ப்படாது. 

வாசகர்கள் அங்கீகாரம் இல்லாத போது நாம கதை எழுதுரோம் என்ற பெயரில் மொக்கை போடுகிறோமா? என தோன்ற ஆரம்பிக்கும். சரி ஆளே இல்லாத கடைக்கு யாருக்காக டீ ஆத்துவானே? என பாதியில் நிறுத்திய கதைகளும் அடக்கம்.

என் கதைகள் மற்றவர்கள் கதை போல கிடையாது.என் கதைகள் மற்றவர்கள் கதையை விட தனித்துவமானது. எந்த வகையில் என்றால்... என் கதைகள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

என் முதல் கதை கருப்பு தினம் முதல் இப்போது எழுதிக் கொண்டு இருக்கும் இது காஜிப் பெண்களின் கூடாரம் கதை வரை அனைத்து கதைகளுக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே கதை இருக்கும். அதனால்தான் என் கதைகளில் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு ஜாதியினர், ஏழை , பணக்காரர்கள் என அனைவரும் இருப்பார்கள். இந்த கதையில் கூட முனியன் ஃபரியை திருமணம் செய்ய மதம் மாறுவார் என எழுதியதர்க்கு , ஒரு வாசகர் கதையில் கூட மதம் மாத்துவீங்களா? என கேட்டார்.
ஆனால் அது கதை அல்ல! முனியனை போல ஒருத்தர் ஃபரியை போல ஒரு பெண்ணை மணக்க மதம் மாறியது நிஜத்தில் நடந்த சம்பவம். அதைதான் நான் கதையில் புகுத்தினேன். இது போல் என் கதைகளில் பல உண்மை சம்பவங்கள் இடம் பெரும். அதனால் என் கதைகள் மற்ற கதைகளை விட வித்தியாசமானது.

ஆனால் அதற்கு போதுமான அங்கிகாரம் கிடைக்காத போது அதை தொடர மனம் வருவதில்லை.

இந்த தளத்தில் ஒருவர் உங்களுக்கு பிடித்த கதை பெயரை சொல்லுங்கள் என கேட்டு திரியிட்டிருந்தார்.

அதில் பல வாசகர்கள் பல கதைகளை குறிப்பிட்டு இருந்தனர். ஒருத்தர் கூட அதில் என் கதை ஒன்றையும் சொல்லவில்லை. வாசகர்கள் நமது கதையை விரும்பாத போது நாம் எதற்கு கதை எழுதி நமது நேரத்தை வீணடித்து வாசகர்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டும் என கதை எழுதுவதை நிறுத்தி விட்டு கருத்து சொல்வதை மட்டும் தொடர்ந்தேன்.

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குற்றவாளி கதையை மீண்டும் தொடரும் போதுதான் ஒரு உண்மையை உணர்ந்தேன். நீண்ட கால இடைவெளிக்கு பின் கதையை மீண்டும் தொடரும் போது நமது மனதில் பதிந்த கதைகள் நல்ல வசனங்கள் போன்றவை மறக்க நேரிடுகிறது. மீண்டும் மறந்ததை ஞாபகப்படுத்த வேண்டும். அப்போது நாம் முன்பு யோசித்து வைத்திருந்த சில நல்ல காட்சிகள் விடுபட நேரிடும். அல்லது கதையில் பிழைகள் வர நேரிடும்.

அது போதாது என்று எழுத்து பிழை , லாஜிக் பிழைகள் வேறு வந்து இம்சிக்கும் அதை சமயத்தில் கண்டு பிடித்தால், கதை வெளியாவதற்கு முன்பே திருத்தி விடலாம். ஆனால் கவனிக்க மறந்தால், வாசகர்கள் விமர்சிப்பார்கள்‌. சரி விடுங்க...

நேரம் கிடைக்கும் போது என் விடுப்பட்ட கதைகளை தொடர இருக்கிறேன். அதில் ஆதரவு வந்தால் அந்த கதையை தொடர்ந்து எழுதுவேன். ஆதரவு இல்லாவிட்டால் யாருமே இல்லாத கடைக்கு யாருக்காக டீ ஆத்துவானே என்ற மோடுக்கே மீண்டும் போய்விடுவேன்.

நான் மேலே குறிப்பிட்டிருந்த கதை எழுத தேவையான தேவைகள் எனக்கு கிடைக்கும் போது இந்த "தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி" கதையையும் மீண்டும் தொடர்வேன்.

இந்த தளத்தில் Advertisement அதிகம் இருப்பதால் எதை தொட்டாலும் Redirect ஆவது கூட கதை எழுத இடையூராக அமைகிறது.

என் நீண்ட விளக்கத்தை பொறுமையாக படித்த உங்களுக்கு நன்றி‌.
[+] 2 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி! - by Ishitha - 17-06-2025, 03:29 PM



Users browsing this thread: 1 Guest(s)