01-07-2019, 09:53 AM
``60 சதவிகிதம்தான் சம்பளம் வரும் எனச் சொல்கிறார்கள்!" - போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்கின் பின்னணி
சென்னையில், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாதம் வழங்கப்படவேண்டிய சம்பளம் வழங்கப்படாததால், இன்று காலை முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள, போக்குவரத்து ஊழியர் எம்.டி.சி வெங்கடேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். “எங்களுக்கு எப்போதும் மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வந்துவிடும். அப்படி இன்று வரவேண்டிய சம்பளம் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும், மீதியுள்ள 40 சதவிகித சம்பளம் பின்னர் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எம்.டி கணேசன் அறிவித்துள்ளார்.
வெளியூர்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு (மப்சல்) சொந்த வீடு இருக்கும். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை செய்தால் போதும். அவர்களுக்கு இரண்டு சம்பள நடைமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால், தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாங்கள் தினமும் வேலை செய்கிறோம். வாடகை வீட்டில்தான் உள்ளோம். மாத வருமானத்தை வைத்துதான் வீட்டு வாடகை, பிள்ளைகளின் பள்ளிச் செலவு ஆகியவற்றைப் பார்த்துவருகிறோம்.
இப்படி இருக்கையில், எங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தில் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கினால் எப்படி? சென்னை ஊழியர்களுக்கு இரண்டு சம்பள முறை சரிவராது. ஊழியர்களின் வேலை நிறுத்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக யூனியனில் உள்ள சிலர் எம்.டி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இன்று முழு சம்பளமும் வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். சம்பளம் வருமா இல்லையா என்பது 11 மணிக்கு மேல்தான் தெரியும். அதற்கு மேல்தான் வண்டிகள் இயக்கம் குறித்து முழுமையாகத் தெரியும்” என்று கூறினார்.

வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் உள்ள ஊழியர்கள், பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இயங்காததால், காலையில் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போராட்டத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ள, போக்குவரத்து ஊழியர் எம்.டி.சி வெங்கடேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். “எங்களுக்கு எப்போதும் மாதத்தின் முதல் தேதியில் சம்பளம் வந்துவிடும். அப்படி இன்று வரவேண்டிய சம்பளம் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும், மீதியுள்ள 40 சதவிகித சம்பளம் பின்னர் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எம்.டி கணேசன் அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையின் நிதிநிலை சரியில்லை, பண வரவு இல்லை எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஒரு சில பணிமனைகளில் உள்ள உயர் அதிகாரிகள் இன்று இரவுக்குள் உங்களுக்கு முழுமையாகச் சம்பளம் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளால் அந்த பகுதிகளில் மட்டும் சில பேருந்துகள் வெளியில் சென்றுள்ளன. மற்ற பணிமனைகளில் இருந்து யாரும் பேருந்தை இயக்கவில்லை.
வெளியூர்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு (மப்சல்) சொந்த வீடு இருக்கும். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை செய்தால் போதும். அவர்களுக்கு இரண்டு சம்பள நடைமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால், தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாங்கள் தினமும் வேலை செய்கிறோம். வாடகை வீட்டில்தான் உள்ளோம். மாத வருமானத்தை வைத்துதான் வீட்டு வாடகை, பிள்ளைகளின் பள்ளிச் செலவு ஆகியவற்றைப் பார்த்துவருகிறோம்.
இப்படி இருக்கையில், எங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தில் 60 சதவிகிதம் மட்டுமே வழங்கினால் எப்படி? சென்னை ஊழியர்களுக்கு இரண்டு சம்பள முறை சரிவராது. ஊழியர்களின் வேலை நிறுத்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக யூனியனில் உள்ள சிலர் எம்.டி-யிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இன்று முழு சம்பளமும் வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். சம்பளம் வருமா இல்லையா என்பது 11 மணிக்கு மேல்தான் தெரியும். அதற்கு மேல்தான் வண்டிகள் இயக்கம் குறித்து முழுமையாகத் தெரியும்” என்று கூறினார்.
first 5 lakhs viewed thread tamil