11-05-2025, 12:26 PM
(10-05-2025, 05:29 PM)Geneliarasigan Wrote: மன்னிக்கவும் நண்பர்களே..!மே மாதம் இந்த கதையை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.வருமானம் இல்லாமல் நிறைய பிரச்சினை,மன உளைச்சல்,வீட்டில் நிம்மதி இல்ல.அதனால் நீண்ட நாளாக எழுத நினைத்தும் முடியல. ஒரு புது வேலை இப்போ சென்னையில் தேடி கொண்டேன்.அந்த வேலை இந்த மாதம் 14 ந் தேதி தான் சேருகிறேன்.மார்கெட்டிங் வேலை funnel உருவாகும் வரை கொஞ்சம் கஷ்டம் தான்.முதல் ரெண்டு மாதங்கள் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே வேலையை காப்பாற்றி கொள்ள முடியும்.நடுவில் கண்டிப்பா நேரம் கிடைக்கும். கிடைக்கும் பொழுது கண்டிப்பா பதிவிடுகிறேன்.நண்பா. உங்களுடைய இந்த நிலைமையிலும் பதில் அனுப்புறிங்களே அதுவே பெரிய விஷயம். அதற்கு காரணம் கதையின் மீதும் வாசகர்கள் எங்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் காதல். ஒரு நல்ல கதைக்காகவும், நல்ல திரைக்கதை எழுத்தாளருக்காகவும் நாங்கள் காத்திருப்போம். நீங்கள் மிக விரைவிலேயே மிக நல்ல பொருளாதார நிலைமைக்கும், மிக சந்தோஷமான மன நிலைமைக்கும் நிச்சயம் வருவீர்கள். அதற்காக இறைவனை நாங்கள் வேண்டி கொள்கிறோம். இந்த வலைதளத்தில் சமீப காலமாக ஒரு நல்ல கதை கூட வருவதில்லை. நான் தினமும் இந்த தளத்திற்கு வருவதே உங்கள் பதிவு வந்து விடாதா என்று பார்க்க தான். உங்கள் கதைக்காக என்றும் காத்திருக்கும் உங்கள் ரசிகன்.