Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
திரை விமரசனம்: ஹவுஸ் ஓனர்

[Image: e8f689d0P2376141mrjpg]

சென்னை டிஃபென்ஸ் கால னியில் ஒரு வீடு. அங்கு அல்சைமர் (மறதி) நோயால் பாதிக்கப்பட்ட முன் னாள் ராணுவ அதிகாரியான கர்னல் கிஷோரும், அவரது மனைவி ஸ்ரீரஞ்சனியும் வசிக் கின்றனர். கன மழையால் ஏற் பட்ட பெரு வெள்ளம் அப்பகு தியை சூழ்கிறது. எல்லோரும் அங்கிருந்து வெளியேறுகின்ற னர். சொந்த வீட்டைவிட்டு வெளி யேற மறுக்கிறார் கிஷோர். அவ ருடன் வீட்டுக்குள் அடைபட்ட ஸ்ரீரஞ்சனி நிலைமையை எப்படி சமாளிக்கிறார்? வெள்ளத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இதற்கு பதில் சொல்கிறது ‘ஹவுஸ் ஓனர்’.
சென்னையை புரட்டிப் போட்ட 2015 வெள்ளத்தை பின் னணியாகக் கொண்டு, உணர்வுப் பூர்வமான படத்தை வழங்க பிரயத்தனப்பட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பிள் ளைகளால் தனித்துவிடப்பட்ட முதிய தம்பதியை முன்வைத்து வெள்ள பாதிப்பை கண்முன் நிறுத்தியிருக்கிறார். படத்தை இயக்கியதோடு, கலை, ஆடை வடிவமைப்பு என பல வேலைக ளையும் செய்திருக்கிறார்.
படத்தில் பெரிய அளவில் நடிகர்கள் இல்லை. பெரும் பாலான காட்சிகளில் கிஷோ ரும், ஸ்ரீரஞ்சனியும் மட்டும்தான். செல்போன் உரையாடல் வழி யாகவே மற்ற பாத்திரங்களை உணர்த்துகின்றனர். கிஷோர் ஒரு ரோபோ போல நடித்திருப்ப தால், பாத்திரத்துக்கான இயல் பான உணர்வு வெளிப்பட வில்லை. அதனால், இறுதிக் காட்சி நம்மிடம் எவ்வித பதற் றத்தையும் ஏற்படுத்தவில்லை.
பல படங்களில் துணை கதாபாத்திரமாக கவனம் ஈர்த்த ஸ்ரீரஞ்சனி இதில் மையக் கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் ஒட்டுமொத்தமாகவே நான்கைந்து கதாபாத்திரங்கள் தான் என்பதால், படத்தின் பெரும் பகுதியை தன் தோளில் தாங்கி நிற்கும் பொறுப்பை சிறப்பாக செய்கிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்ட கணவனை ஒரு குழந்தைபோல கவனித்துக் கொள்வதும், எரிச்சலை ஏற்படுத் தும் அவரது செயல்பாடுகளை பொறுத்துக் கொள்வதும் என சிறப்பான நடிப்பை வழங்கி யுள்ளார்.
‘பசங்க’ கிஷோர் இளவயது கர்னலாக வருகிறார். அவருக்கு ஜோடியாக விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின்.
படத்தில் பாலக்காட்டு பாஷை அழகாக வெளிப்படு கிறது. சில காட்சிகளில் அது படத்துக்கு வலு சேர்க்கிறது; உணர்வை ஊட்டுகிறது. ஆனால், பதற்றமான நேரத்தி லும், ‘ஷாவி ஷாவி’ என்று ஸ்ரீரஞ்சனி பரபரக்கும்போது, அது எரிச்சலை ஏற்படுத்துகிறது.
படம் முழுக்க மழை சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மழைக்கு நடுவில் நாம் அமர்ந் திருப்பதான ஓர் உணர்வை சவுண்ட் எஃபெக்ட்ஸ் மூலமா கவே ஏற்படுத்திவிடுகின்றனர்.
தபஸ் நாயக்கின் ஒலிக் கலவையும், ஜிப்ரானின் இசை யும் படத்தை தூக்கி நிறுத்து கின்றன.
கிருஷ்ணா சேகர் ஒளிப்பதி வில் படம் முழுக்க பசுமை தெரி கிறது. போதாக்குறைக்கு ஓர் அழகிய திருமணத்தை தொடர்ந்து வரும் காதல் காட்சி கள். மழை - காதல் இரண்டின் காரணமாக ஒருவித ரொமான் டிக் உணர்வு நிரம்பி வழிகிறது. நிகழ்காலக் காட்சிகள் மழை, வெள்ளத்தின் நடுவே நடப்பது போல, ஃப்ளாஷ்பேக் காட்சிகளி லும் மழையை அதிகம் பயன் படுத்தியுள்ளார்.
வாழ்வின் ஒரு கட்டத்தில் ரசிக்கத்தக்கதாக இருக்கும் மழை, இன்னொரு கட்டத்தில் வாழ்வை அச்சுறுத்துவதாக அமைந்திருக்கும் முரணை இப்படி காட்சிவழியாக சொல்லி யிருப்பது ரசனை. ஆனால், தண்ணீரால் ஏற்பட்ட துயரத் துக்கான சுவடே படத்தில் இல்லை. தெருவில், வெளியில் வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு பேரழிவு வெறுமனே டிவி செய்தியாக மட்டுமே வந்து போகிறது.
முந்தைய படங்களை ஒப் பிடும்போது, இப்படத்தில் இயக்குநராக லட்சுமி ராமகிருஷ் ணன் மேம்பட்டிருக்கிறார். அல்சைமர் நோயாளியான கர்ன லின் தொப்பியில் அவரது செல்போன் எண் எழுதப்பட்டி ருப்பது போன்ற சில நுட்பங்கள் அழகு.
கடைசிக் காலத்தில் பெற் றோரை தனியாக தவிக்க விட்டு விட்டு, வெளிநாடுகளில் செட்டில் ஆகும் இளைய சமுதாயத்துக் கான எச்சரிக்கையாகவும் இப் படத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு குறும்படம் அளவுக்கான ஒற்றைவரி செய்தியை முழு நீளப் படம் ஆக்கியிருக்கிறார் களோ என்ற எண்ணம் ஏற்படு கிறது. மழையை உணர்த்திய தோடு, வெள்ள பாதிப்பையும் உணர்த்தி, திரைக்கதையில் சில திருப்பங்களை சேர்த்திருந்தால், நல்ல ‘ஹவுஸ் ஓனர்’ ஆகி யிருப்பா
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 30-06-2019, 10:48 AM



Users browsing this thread: 2 Guest(s)