30-06-2019, 10:42 AM
'ஜெய் ஸ்ரீராம்' தாக்குதல்: முஸ்லிம் சிறாரையும் விட்டு வைக்காத கும்பல்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தி முஸ்லிம் சிறார் முகமது தாஜ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fjun%2F29%2F'.-boy-thrashed-in-kanpur-for-refusing-to-chant-jai-shri-ram-3181876.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=b927a143d5[/img]
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தி முஸ்லிம் சிறார் முகமது தாஜ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் பரா காவல் துறை அதிகாரி சதீஷ் குமார் சிங் தெரிவிக்கையில்,
[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fjun%2F29%2F'.-boy-thrashed-in-kanpur-for-refusing-to-chant-jai-shri-ram-3181876.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=b927a143d5[/img]
"பரா பகுதியில் வசித்து வரும் முகமது தாஜ் (16) கித்வாய் நகரில் தொழுவையில் ஈடுபட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு நூறு மீட்டர் தொலைவு முன்பு, மூன்று, நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் தாஜை வழிமறித்துள்ளனர். தாஜ் தலையில் அணிந்திருந்த தொப்பிக்கு அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. இதன்பிறகு, ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, தாஜை கடுமையாக தாக்கியுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.
இதுகுறித்து, முகமது தாஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"அவர்கள் எனது தொப்பியை அகற்றினர். என்னை கீழே தள்ளிவிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு வலியுறுத்தி தாக்குதல் நடத்தினர். இந்த பகுதியில் தொப்பி அணிவதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். உதவி செய்யுமாறு அருகில் இருந்தவர்களிடம் கதறினேன். அதன்பிறகு, அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் காப்பாற்ற வந்துள்ளனர். இதை கண்டு, தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்" என்றார்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
first 5 lakhs viewed thread tamil