Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அதானிக்கு எதிராக கிராம சபைத் தீர்மானம்... காட்டுப்பள்ளி மக்களின் அடுத்த அதிரடி!

உள்ளூருக்கான வரைபடத்தை தமிழக அரசு செய்து முடிக்காத வரையில் எங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எங்கள் பகுதியில் வர விடமாட்டோம் என்று ஒரு மனதாகத் தீர்மான நிறைவேற்றப்படுகிறது.
[Image: 160676_thumb.jpg]
ண்ணிற்கும் மக்களுக்கும் தீங்கிழைக்கும் குறிப்பிட்ட சில வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. டெல்டா பகுதி, கூடங்குளம் அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கிராம சபைத் தீர்மானங்களின் வரிசையில் தற்போது அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகவும் காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 
காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானி துறைமுகம் கடந்த ஆண்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசிடம் முன்வைத்தது. 330 ஏக்கர் பரப்பளவில் தற்போது இருக்கும் அந்தத் துறைமுகத்தை 6200 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே அவர்களின் திட்டம். அதற்காகக் களாஞ்சி சேறு, கருங்காளி சேறு என்று கரைக்கடல் பகுதிகளை மணல் போட்டு மூடி நிலப்பகுதியாக மாற்றுவதும் அந்தத் திட்டத்தின் ஒருபகுதி. அந்தப் பகுதிகள் அதிகமான இறால், நண்டு மற்றும் சிறு மீன் வளங்கள் அதிகமுள்ள பகுதி. கடலை நிலமாக்கி நிலவியல் அமைப்பையே மாற்றுவதுதான் அவர்களின் குறிக்கோள். அதோடு துறைமுக விரிவாக்கம் கொற்றலை ஆறு மற்றும் ஆற்றங்கரையைப் பெருமளவில் விழுங்கி ஏப்பம் விடப்போகிறது. இது பெருமளவில் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அவர்களின் வாழ்விடங்களே இல்லாமல் போகும் அபாயமும் உள்ளது. 
[Image: ANIL1436_17241_11284.jpg]
[color][font]
மக்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையைச் சமர்ப்பித்து மத்திய வல்லுநர் குழுவிடம் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கான குறிப்பாணை கேட்டு அதானி துறைமுகம் விண்ணப்பித்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு கடலோர மண்டலங்களில் கட்டுமானங்கள் செய்வதற்கு ஏற்பக் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அதுவும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலுக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஆனால், இன்னமும் அந்தப் பகுதியின் உள்ளூர் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தைச் செய்துமுடிக்கவில்லை. தமிழக அரசு அதை உடனடியாகச் செய்து முடிக்கவேண்டுமென்றும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டுமென்றும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு... 
தீர்மானம்-1 
அதானி துறைமுகம் தற்போது காட்டுப்பள்ளியில் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதைக் களாஞ்சி, கருங்காளி, இப்ரஹாம்புரம் ஆகிய பகுதிகளுக்கும் அந்தப் பகுதிகளின் ஆறு மற்றும் ஆற்றுக்கரைப் பகுதி வரையிலும் விரிவாக்கம் செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை செய்து முடித்து மத்திய வல்லுநர் குழுவிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை செய்ய குறிப்பாணை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். திட்டப்பகுதியாகக் காட்டப்பட்டுள்ள கடல், கடற்கரை மற்றும் ஆறு, ஆற்றுக்கரை பகுதியானது பழவேற்காடு பகுதியில் வாழும் ஐம்பதாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இது மிகவும் முக்கியமான மீன்பிடிப்புப் பகுதி.
கடலில் இயற்கையாக அமைந்துள்ள சேற்றுத் திட்டை இந்தத் திட்டம் அழிக்க இருப்பதால் பழவேற்காடு கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவக் கிராமங்கள் அனைத்தும் கடல் அரிப்பால் அழியும் அபாயம் உள்ளது. கடல் அரிப்பால் பழவேற்காடு ஏரியும் கடலும் ஒன்றிணையும் அபாயமும் இந்தத் திட்டத்தால் ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பால் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்து நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் இதனால் உண்டாகும். வெள்ள வடிகால் வாய்கள் அடைக்கப்பட்டு மழைக் காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இவ்வளவு அழிவுகளைக் கொண்டுவர வல்ல இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைப் பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்களாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆகையால் தமிழக அரசு இந்தத் துறைமுகத் திட்டத்தை உடனே ரத்து செய்யவேண்டுமென்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


[/font][/color]
[Image: Koraikuppam_Sea_Map2_11263.png]

துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிட்டிருக்கும் நிலப்பகுதியின் வரைபடம் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
[color][font]
தீர்மானம்-2 
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையின் கீழ் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் செய்துமுடிக்க வேண்டும். உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் மீனவக் கிராமங்களின் பொதுச் சொத்துகள், மீனவக் கிராம மக்களின் சமூகக் கட்டமைப்புகள், மீன்பிடி இடங்கள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் தெளிவாகக் காண்பிக்கப்பட வேண்டும். இன்றுவரை உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தைத் தமிழக அரசு செய்துமுடிக்கவில்லை. இந்த வரைபடத்தைச் செய்து முடித்தால் மட்டுமே மீன்பிடி இடங்கள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் மற்றும் நம்முடைய பாரம்பர்ய உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்க முடியும். அதனால் உள்ளூருக்கான வரைபடத்தை தமிழக அரசு செய்து முடிக்காத வரையில் எங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எங்கள் பகுதியில் வர விடமாட்டோம் என்று ஒரு மனதாகத் தீர்மான நிறைவேற்றப்படுகிறது. 
[/font][/color]
[Image: ANIL1416_17495_11531.jpg]
[color][font]
காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே உள்ளது. காட்டுப்பள்ளியில் அவர்கள் விரிவாக்கத் திட்டம் போட்டிருக்கும் பகுதிகள் முழுவதும் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட கடல் பகுதிகள். அதுதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்றவை அதிகம் கிடைக்கும் பகுதி. அதோடு ஏரிகளின் முகத்துவாரப் பகுதிகளில் இறால் வகைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. சிறு ஆமை வகைகளும் இங்குதான் அருகில் கடற்கரை ஓரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த வளங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்படும். அது மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரங்களை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும். 
கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழக அரசு உடனடியாக உள்ளூருக்கான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தைச் செய்துமுடிக்க வேண்டும்
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-06-2019, 10:36 AM



Users browsing this thread: 101 Guest(s)