06-04-2025, 06:09 PM
நிறைய எழுத்தாளர்கள், அதுவும் நல்ல நல்ல கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் வரவேற்பில்லை என்று சொல்லி கதைகளை பாதியில் விட்டு விட்டு செல்லும் போது ஒரு வாசகனாக அந்த எழுத்தாளர்கள் மேல் நான் கோபப்பட்டதுண்டு. ஆனால் அவர்கள் பக்கம் உள்ள நியாயமும் அவர்களின் கோபத்தில் உள்ள நியாயமும் இப்போது தான் புரிய ஆரம்பிக்கிறது. இந்த கதையை நான் மிகுந்த எதிர்பார்ப்போடு எழுத துவங்கினேன். கருத்து சொல்லுங்கள், அல்லது அது சிரமமாயிருந்தால் ரேட்டிங் கொடுங்கள், அதுவும் சிரமமாயிருந்தால், பதிவுகளுக்கு லைக்காவது போடுங்கள், என்றெல்லாம் பல பதிவுகளில் கேட்டுப் பார்த்தேன்.
ஆனால்...
எதுவுமே கிடைக்காமல் போனது மட்டுமில்லை. கடைசி பதிவு போட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வ்யூஸ் கூட இருபதாயிரத்தை தொடவில்லை. எதையுமே வாசகர்களிடம் கட்டாயப்படுத்தி பெற முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் கதையை எழுதுவதற்கும் ஒரு உற்சாகம் தூண்டுகோல் உந்துதல் வேண்டுமல்லவா?
என் இரண்டு கதைகளின் மீதும் எனக்கே ஆர்வம் குறைந்து விட்டது. இந்த கதையில் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிற ஒரு பகுதியை இன்று பதிவிடுகிறேன். இனி மூட் வந்தால் எழுதி பதிவிடுகிறேன். கதை தொடரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதற்கு மேல் ரசிக்கும் படி எழுத எனக்கு தெரியவில்லை என்று தான் நினைத்துக் கொள்கிறேன். இதுவரை ஆதரித்த நண்பர்களுக்கு நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.