Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்த கஸ்தூரி
[Image: bigg-boss-3-kasthurijpg]

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 3’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களே ஆனாலும், பலரும் கலாய்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
குறிப்பாக, ஆரம்பம் முதலே நிறைய அழுகாச்சி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவதால், அதைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைக் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“போதும்பா... விட்ருங்கப்பா... இன்னும் எத்தனை நாளைக்கு சென்டிமென்ட்டை பிழியப் போறீங்க? இப்பவே யாரு எவ்வளவு சோகக்கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை. இதுக்கு மேலயும் சோகத்தைப் பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தைப் பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோனு திக்கு திக்குனு இருக்கு.
இதே சேனல்ல ‘கதையல்ல ...’னு சொல்லி ஒரு நிகழ்ச்சி. வந்தவங்களை அமுக்கிப் பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க. அதில் ஆரம்பித்தது, எல்லா புரோகிராமிலும் அழுவாச்சி ஃப்ளாஷ்பேக். எங்க ஃபிளாட்ஸ்ல எல்லா வீட்டிலும் குழந்தைகள் பார்க்குறாங்க. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது? பெற்றோர்களே... பொறுப்புடன் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 29-06-2019, 06:05 PM



Users browsing this thread: 1 Guest(s)