08-03-2025, 07:22 PM
(07-03-2025, 09:58 PM)raspudinjr Wrote: // அது என்னவென்று சொல்லப் போவதில்லை.//
சொன்னால் தானே உங்களின் கோணம் என்னவென்று புரியும்!
தெளிவாக சொல்லுங்க நண்பா !
சொல்வதில் பிரச்சனை இல்லை நண்பரே! ஆனால் அது தேவை இல்லாத வாதத்திற்கு வழி வகுக்குமோ என்று தோன்றுகிறது.
கதாசிரியர்களுக்கு இதில் என்ன பங்கு உள்ளது என்பதை அவர்கள் மற்றவர்கள் மூலமாக கேட்காமல் தங்களுக்குள் அந்த கேள்வியை கேட்டு அதற்கான விடையை கண்டறிவதே நலம்.
நான் பிரச்னையை சொல்லாமல் நேரடியாக தீர்வை சொல்லுகிறேன்.
நண்பர்களே! இந்த தளம் புதிதாக கதை எழுத வருபவர்களுக்கு கிடைத்த ஒரு வரம்; ஆனால் இதே தளம் அனுபவம் உள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு சாபம்!
ஏன்?
புதிதாக கதை எழுதுபவர் ஒருவருக்கு இந்த தளத்தில் visibility உடனடியாக கிடைக்கும். ஆனால், அவர் எழுத எழுத அவரின் எழுத்துக்களை ரசிப்பவர்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி உயராது. அதற்கு முக்கியகாரணம் தளத்தின் வருகையே!
எனவே, கதாசிரியர்கள் கதை எழுதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தங்கள் கதைகளை promote செய்யவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அந்த ஒரு விஷயத்தை செய்திருந்தால், பல கதாசிரியர்கள் மனம் நொந்து போயிருக்க மாட்டார்கள்.