08-03-2025, 11:05 AM
(07-03-2025, 02:29 PM)dubukh Wrote: சரி, நீங்கள் கதை எழுதுபவர்களே இத்திரியை கண்டு கொள்ளவில்லை என வருந்துகிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் சோர்ந்து போய் இருப்பதாக நான் நினைக்கிறேன் நண்பா. கதைகளுக்கு கமெண்டுகள் இல்லை என்பதால் சோர்ந்து போய், இனி கதையை திருடினா என்ன, திருடாட்டி என்ன என நினைக்கிறார்களோ என தோன்றுகிறது
இதற்கு நான் என்னவென்று சொல்வது? ஒரு கதாசிரியனாக நான் அவர்களின் சோர்வை கண்டிப்பாக உணர்வேன்.
ஆனால், அவர்களின் சோர்வுக்கான காரணிகளை ஆராய்ந்து, அதை சரி செய்வதற்கான முயற்சிகளை கதாசிரியர்கள் தான் எடுக்க வேண்டும். வேறு யாரும் எடுக்க மாட்டார்கள்.
குறிப்பாக இங்கு இருக்கும் கதாசிரியர்களின் சோர்வுக்கான முக்கிய காரணம் கதைகளுக்கு போதுமான பார்வைகளும், கருத்துக்களும் வருவதில்லை என்பது தான்.
ஆனால், பார்வைகளும் கருத்துக்களும் குறைவாக வருவதற்கு முக்கிய காரணம் இந்த தளத்தின் வருகை மிகவும் குறைவு என்பதே.
அனைவரும் login செய்து தான் படிக்கவேண்டும் என்பது கட்டாயமானால், வருகை இன்னும் கணிசமாக குறையும்.
நான் முன்பே சொன்னதை போல், இந்த தளத்தின் வருகை குறைவு என்பது தான் இந்த தளத்தில் உள்ள கதைகளை சுலபமாக திருடவும் வழிவகுக்கிறது.
எந்த அதிமேதாவி இலவசமாக கிடைக்கும் ஒரு விஷயத்தை பணம் கொடுத்தது வாங்குவான்?
அப்படி பணம் கொடுத்து வாங்குகிறான் என்றால் அவனுக்கு அந்த பொருள் இலவசமாக எங்கு கிடைக்கின்றது என்று தெரியவில்லை என்பது தானே அர்த்தம்?
எனவே, பொருள் இலவசமாக எங்கு கிடைக்கும் என்பது பலரை சென்றடைந்தால், கதை திருட்டும் குறையும், கதாசிரியர்களின் சோர்வும் குறையும்.
எனவே பொருள் எங்கு இலவசமாக கிடைக்கும் என்பதை மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியை கதாசிரியர்களும் மேற்கொண்டால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல், கதாசிரியர்களின்
இரு பிரச்னையும் ஒரு சேர தீரும். இவ்வளவு தான் நான் சொல்வேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை.